சினிமா ஹீரோக்களை விஞ்சிட்டாரு! திருடர்களை பிடிக்க பஸ் டிரைவர் செய்த காரியம்! மனுஷனுக்கு ஒடம்பெல்லாம் மூளை!
இந்தியாவில் செயின் பறிப்பு (Chain Snatching) சம்பவங்கள் மிக அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதற்கு பெரும்பாலான கொள்ளையர்கள் டூவீலர்களைதான் (Two Wheelers) பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் செயின் கொள்ளையர்கள் நன்றாக திட்டமிட்டுதான் களத்தில் இறங்குகின்றனர். எனவே நிறைய சம்பவங்களில் அவர்கள் எளிதாக தப்பி சென்று விடுகின்றனர். ஆனால் நேரம் அனைத்து சமயங்களிலும் ஒன்றாகவே இருப்பதில்லை. ஒரு சில சமயங்களில் செயின் கொள்ளையர்களின் திட்டங்கள் தடுமாறி விடுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஹரியானாவில் (Haryana) தற்போது நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், செயின் கொள்ளையர்களின் திட்டத்தை பஸ் டிரைவர் (Bus Driver) ஒருவர் முடக்கிய பரபரப்பான காட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது.

யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், செயின் கொள்ளையர்களில் ஒருவர் பைக்கை தயார் நிலையில் வைத்து கொண்டு நிற்பதை நாம் காணலாம். அது அனேகமாக ஹீரோ சிடி டீலக்ஸ் (Hero CD Deluxe) பைக்காக இருக்கலாம். இவர் ஓரிடத்தில் பைக்கில் நின்று கொண்டிருக்க, அதற்கு அருகே மற்றொரு நபர் செயின் பறிக்கும் திட்டத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்.
பார்ப்பதற்கு அது சிறிய கடை போல் தெரிகிறது. அங்கு பொருள் வாங்குவது போல் நடித்து, அவர் செயினை பறித்திருக்கலாம். செயினை பறித்த உடன் அவர் வேகமாக ஓடி வந்து டூவீலரில் ஏறுகிறார். இதற்கு பிறகு 2 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர்.
அப்போதுதான் அவர்கள் இருவரும் எதிர்பார்க்காத 'ட்விஸ்ட்' நடந்தது. அவர்களுக்கு எதிரே வந்த ஒரு பஸ்ஸின் டிரைவர், அங்கு ஏதோ அசம்பாவிதம் நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். எனவே பஸ்ஸை நேராக பைக்கின் மீது மோதினார். இதனால் 2 கொள்ளையர்களும் தடுமாறி கீழே விழுந்தனர்.
ஆனால் அவர்கள் இருவரும் உடனடியாக எழுந்து அங்கிருந்து ஓடி விட்டனர். பைக்கை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் ஓடினர். ஆனால் அவர்கள் இருவரும் பிடிபட்டார்களா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த சம்பவத்தில் பஸ் டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில் அவர் அசம்பாவிதத்தை உணர்ந்து, தெரிந்தேதான் பைக் மீது பஸ்ஸை மோதியுள்ளார். இந்த மோதலால் கொள்ளையர்களுக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பது போல்தான் வீடியோவில் நமக்கு தெரிகிறது.
ஏனெனில் கொள்ளையர்கள் 2 பேரும் கீழே விழுந்த வேகத்தில் உடனடியாக எழுந்து ஓடுகின்றனர். எனவே கொள்ளையர்களை கீழே விழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிதமான வேகத்தில் பைக் மீது அவர் பஸ்ஸை மோதியுள்ளார். இது உண்மையிலேயே துணிச்சலான ஒரு செயல்தான்.
இதன் காரணமாக பஸ் டிரைவரை நெட்டிசன்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த பஸ் டிரைவரின் செயல்பாடு சற்று ஆபத்தானது என்பதையும் மறுப்பதற்கில்லை. பஸ் இன்னும் கொஞ்சம் வேகமாக மோதியிருந்தால், கொள்ளையர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். எனவேதான் இதை ஆபத்தான விஷயம் என கூறுகிறோம்.
ஆனால் நல்ல வேளையாக கொள்ளையர்களுக்கு காயம் கூட ஏற்படவில்லை என்றே தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கொள்ளையர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால், சமூக வலை தளங்களில் பஸ் டிரைவர் மிக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








