ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்படுத்தியுள்ளார்.

ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடியான திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து வருகிறார். ஆந்திர மாநிலத்தை கடந்து இந்தியா முழுவதும் அவரது திட்டங்கள் கவனம் ஈர்த்துள்ளன. எனவே முதல் அமைச்சர் என்பதை கடந்து, நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும், அவருக்கு சினிமா ஹீரோ போல் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.

ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

ஊழலுக்கு எதிராக களத்தில் குதித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஒரு சமயத்தில் இத்தகைய வரவேற்பு இருந்தது. ஆனால் இடையில் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வரிசையாக எழுந்தன. எனினும் அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டங்கள் தற்போது மீண்டும் வரவேற்பை பெற தொடங்கியுள்ளன. டெல்லி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் இதில் மிகவும் முக்கியமானது.

ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

டெல்லி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அப்போதே நாடு முழுவதும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னதை அதிரடியாக செய்து காட்டியுள்ளார்.

ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

டெல்லி அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இலவச பயணம் என்பதால், வேலைக்கு செல்லும் பெண்கள் இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் திட்டத்தையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக செயல்படுத்தியுள்ளார்.

ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக பேருந்துகளில் செய்யும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் பணப்பை பறிப்பு போன்ற விபரீதங்கள் அரங்கேற்றப்படுகின்றன. மேலும் பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் ஈவ்டீசிங் கொடுமைக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

எனவே டெல்லியில் தற்போது புதிய பஸ்கள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பேனிக் பட்டன்கள் இடம்பெறுகின்றன. இந்தியாவின் பொது போக்குவரத்து முறையில் இவை இரண்டும் அவசியமானவை. இதுதவிர மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஹைட்ராலிக் லிஃப்ட்களும் பஸ்களில் இடம்பெறுகின்றன.

MOST READ: சத்தமே இல்லாமல் தரமான சம்பவம்... இந்தியாவையே பிரம்மிக்க வைத்த மஹிந்திரா... என்னவென்று தெரியுமா?

ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

மேலும் பஸ் மார்ஷல்களின் (Bus Marshal) பலமும் 13 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டெல்லி போக்குவரத்து கழக பஸ்களில், 13 ஆயிரம் மார்ஷல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தற்போது அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?

ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு பஸ்களிலும் மார்ஷல்கள் இருப்பார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் இந்த 13,000 மார்ஷல்களும் உடல் நலம் குன்றியோருக்கு உதவி செய்வதுடன், அவசர கால சூழ்நிலைகளிலும் உதவுவார்கள் எனவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

MOST READ: சாதி கருத்துக்களை வாகனங்களில் எழுத இனி பயப்படணும்... போலீஸ் காட்டிய அதிரடி என்னவென்று தெரியுமா?

ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

டெல்லி அரசின் இந்த அதிரடி திட்டத்திற்கும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்பது உறுதி. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bus Marshal Strength Raised To 13,000: Delhi CM Arvind Kejriwal. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X