இவருக்கு முன்னாடிலாம் அம்பானியே ஒன்னும் இல்ல! இந்தியாலயே மொத ஆளா இந்த 7 கோடி ரூபா காரை வாங்னது அவரா!

இந்தியாவில் முன்பெல்லாம் லம்போர்கினி (Lamborghini) மற்றும் ஃபெராரி (Ferrari) போன்ற நிறுவனங்களின் கார்களை பார்ப்பது என்பது அரிதான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. பெரு நகரங்கள் மட்டுமல்லாது, சிறு நகரங்களிலும் கூட, லம்போர்கினி மற்றும் ஃபெராரி நிறுவனங்களின் கார்களை பார்க்க முடிகிறது.

தொழில் அதிபர்களும், திரைப்பட நடிகர், நடிகைகளும் இந்த நிறுவனங்களின் கார்களை அதிகமாக வாங்குவதுதான் இதற்கு காரணம். இப்படி விலை உயர்ந்த கார்களை வாங்கி குவித்து கொண்டுள்ள தொழில் அதிபர்களில் ஒருவர்தான் பூபேஷ் ரெட்டி (Boopesh Reddy). டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் வாசகர்களுக்கு இவரை நன்றாக தெரியும்.

Ferrari Purosangue

கார் ஆர்வலரான (Car Enthusiast) பூபேஷ் ரெட்டி பற்றிய செய்திகளை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கடந்த காலங்களில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. இவர் ப்ரன் கார்ப்பரேஷன் (Bren Corporation) நிறுவனத்தின் நிறுவனர் (Founder) மற்றும் நிர்வாக இயக்குனராக (Managing Director) இருந்து வருகிறார்.

பெங்களூர் (Bangalore) நகரை சேர்ந்த ப்ரன் கார்ப்பரேஷன் நிறுவனம் ரியல் எஸ்டேட் (Real Estate) தொழிலில் ஈடுபட்டு கொண்டுள்ளது. புகழ்பெற்ற இந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் பூபேஷ் ரெட்டியிடம் பல்வேறு விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இவரது கார் கலெக்ஸன் (Car Collection) மிகவும் பெரியது.

Boopesh Reddy Buys Ferrari Purosangue

லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ (Lamborghini Huracan STO), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே (Lamborghini Aventador SVJ), லம்போர்கினி முர்சிலகோ (Lamborghini Murcielago) போன்றவை பூபேஷ் ரெட்டியிடம் உள்ள கார்களில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும். கொஞ்சம் பொறுங்கள். இனி ட்ரெய்லர் மட்டும்தான். மெயின் பிக்சர் இனிமேல்தான் வருகிறது.

ஃபெராரி எஸ்எஃப்90 ஸ்டார்டேல் (Ferrari SF90 Stradale), ஃபெராரி 488 பிஸ்டா (Ferrari 488 Pista), ஃபெராரி 458 ஸ்பெஷலே (Ferrari 458 Speciale), ஃபெராரி 296 ஜிடிபி (Ferrari 296 GTB), ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) ஆகிய கார்களும் பூபேஷ் ரெட்டியிடம் இருக்கின்றன.

அத்துடன் போர்ஷே 911 ஆர் (Porsche 911 R), போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் (Porsche 911 GT2 RS), போர்ஷே கேமென் ஜிடி4 (Porsche Cayman GT4), போர்ஷே 911 கரீரா எஸ் (Porsche 911 Carrera S), போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் (Porsche 911 GT3 RS), போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S) ஆகிய கார்களுடன் பூபேஷ் ரெட்டியிடம் உள்ளன.

மேலும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63), மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி (Mercedes-Benz SLS AMG), மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் (Mercedes-AMG GT Black Series), அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் கார்பன் பிளாக் (Aston Martin DBS Carbon Black) ஆகிய கார்களையும் பூபேஷ் ரெட்டி வைத்துள்ளார்.

இந்த வரிசையில் மற்றொரு விலை உயர்ந்த காரை பூபேஷ் ரெட்டி தற்போது வாங்கியுள்ளார். அது ஃபெராரி ப்ரோசாங்வே (Ferrari Purosangue) ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. இந்த கார் இந்தியாவில் இதற்கு முன்பாக வேறு யாரிடமும் இல்லை. இந்தியாவிலேயே முதல் ஆளாக பூபேஷ் ரெட்டிதான் இந்த காரை வாங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஃபெராரி ப்ரோசாங்வே காரில் பொருத்தப்பட்டிருப்பது, 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி12 பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆகும். அதிகபட்சமாக 725 பிஎஸ் பவர் மற்றும் 716 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட இந்த கார் வெறும் 3.3 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும்.

இந்தியாவில் ஃபெராரி ப்ரோசாங்வே காரின் அதிகாரப்பூர்வமான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 6.50 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என கருதப்படுகிறது. வரும் காலங்களில் பூபேஷ் ரெட்டி இது போல் இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களை சொந்தமாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த கார்களை அதிகளவில் வைத்துள்ள நபர்களில் ஒருவராக பூபேஷ் ரெட்டி உள்ளார். பூபேஷ் ரெட்டியின் கார் கலெக்ஸனை பார்க்கும்போதே, அவர் எவ்வளவு தீவிரமான கார் ஆர்வலர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 26, 2024, 14:38 [IST]
English summary
Businessman boopesh reddy buys ferrari purosangue suv viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+