துபாயில் செட்டில் ஆன பிறகு வாழ்க்கை ஓஹோனு மாறிடுச்சு.. கை குழந்தையாக உள்ள மகளுக்கு தந்தையின் காஸ்ட்லீயான பரிசு

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார்களை பிடிக்காதவர்கள் யார்தான் இருப்பார்கள்? உலகின் பெரும் பணக்காரர்கள் கூட எப்படியாவது ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஆவது வாங்கிவிட வேண்டும் என நினைப்பர். ரோல்ஸ்-ராய்ஸ் கார் என்றாலே பிரபலமானவை என்றாலும், அவற்றுள் மிக பிரபலமானவை ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Cullinan) கார் ஆகும். இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) கிட்டத்தட்ட 10 ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வைத்துள்ளார். அவற்றுள் மூன்று கார்கள் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் ஆகும். இந்த அளவிற்கு மிக பிரபலமான கல்லீனன் காரை இந்திய பெரும் தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை அவர் தற்போது வாங்கியதற்கான காரணம் நம்மை கவர்கிறது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

சதீஷ் சன்பால் (Satish Sanpal), இந்த பெயரை எங்கேயோ அவ்வப்போது கேட்டது போன்று உங்களில் சிலருக்கு தோன்றலாம். நமது டிரைவ்ஸ்பார்க் (Drivespark) செய்தித்தளத்தில் கூட இவரை பற்றி சிலமுறை பார்த்துள்ளோம். இந்தியாவை சேர்ந்த பெரும் தொழிலதிபரான இவர், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் அனாக்ஸ் டெவெலப்மெண்ட்ஸ் (ANAX Developments) என்கிற நிறுவனத்தை நிறுவி வணிகம் செய்து வருகிறார்.

businessman satish sanpal s rolls-royce

பிஸ்னஸ் மொத்தமும் ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்ததாக உள்ளதால், குடும்பத்துடன் துபாயில் சதீஷ் சன்பால் செட்டில் ஆகிவிட்டார். துபாயில் வசிப்பதாலோ என்னவோ... மனைவி மற்றும் குழந்தைகள் உடன் பிரம்மாண்டமான சொகுசு பங்களாவில் மிகவும் லக்சரியான வாழ்க்கையை வாழ்ந்துவரும் இந்த இந்திய தொழிலதிபரின் வீட்டில் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ், பெண்ட்லீ (Bentley) மற்றும் புகாட்டி (Bugatti) கார்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நின்றுக் கொண்டிருக்கின்றன.

துபாயில் உள்ள சதீஷ் சன்பாலின் கார் கேரேஜ் தொடர்ந்து பெரியதாகி கொண்டே வருகிறது. வீட்டில் எதாவது விசேஷம் நடந்தாலே உடனே விலையுயர்ந்த காரை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் தொழிலதிபர் சதீஷ் சன்பால், இன்னும் 18 வயது கூட நிரம்பாத தனது குழந்தைகளுக்கு இப்போதே விலையுயர்ந்த கார்களை வாங்கி சேர்த்து வைக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த வகையில், சமீபத்தில் தனது மகன் லக்‌ஷ்யா சன்பாலுக்கு வெள்ளை நிறத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் காரை பரிசாக வாங்கிக் கொடுத்த தொழிலதிபர் சதீஷ் சன்பால், தற்போது கை குழந்தையாக உள்ள தனது மகள் இசபெல்லா சன்பாலுக்காக பிரம்மாண்டமான ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை வாங்கி உள்ளார்.

இதன் மூலமாக, உலகிலேயே மிகவும் இளம் வயதில் குழந்தை இசபெல்லா ரோல்ஸ்-ராய்ஸ் காருக்கு ஓனராகி உள்ளார். இசபெல்லா சன்பாலின் முதலாம் பிறந்த நாளை முன்னிட்டு பிராண்ட்-நியூ கல்லீனன் காரை புக் செய்து, குடும்பத்துடன் துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சதீஷ் சன்பால் டெலிவிரி பெறும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் (Instagram) வெளியாகி உள்ளது.

அதாவது, தொழிலதிபர் சதீஷ் சன்பாலின் குடும்பத்தினருக்காக ரோல்ஸ்-ராய்ஸ் ஷோரூமில் இருந்து புத்தம் புதிய கல்லீனன் கார் 'அட்லாண்டிஸ்' என்கிற நட்சத்திர ஓட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு சிறிய நிகழ்ச்சி போல் ஏற்பாடு செய்து, சதீஷ் சன்பால் தனது புதிய கல்லீனன் காரை மகளுக்காக டெலிவிரி பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், மகள் இசபெல்லாவை சதீஷ் சன்பால் கையில் தூக்கி வைத்தப்படி செல்வதை காணலாம்.

மகளுக்காக சதீஷ் சன்பால் தேர்வு செய்திருப்பது, ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரின் சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் எடிசன் ஆகும். கிரே மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள் கலந்த ஓர் வித்தியாசமான நிறத்தில் இந்த கல்லீனன் சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதே நிறத்தில்தான் தொழிலதிபர் சதீஷ் சன்பாலின் மகள் இசபெல்லா சன்பாலுக்கு முதலாம் பிறந்த நாளின்போது ஆடை அணிக்கவிக்கப்பட்டு இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: துபாயின் முக்கியமான தொழிலதிபராக வேகமாக வளர்ந்துவரும் சதீஷ் சன்பால் தனது மகளின் முதலாம் பிறந்த நாளுக்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இரைத்துள்ளார். அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே ரோஸ் நிறத்திலான இந்த புத்தம் புதிய ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரோல்ஸ்-ராய்ஸ் காரின் வருகையின் மூலமாக, சதீஷ் சன்பால் வைத்திருக்கும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 23, 2025, 15:19 [IST]
English summary
Businessman dad gifts rolls royce cullinan series 2 black badge car to his one year old daughter
மேலும்... #luxury car #car delivery
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+