மகன் திருமணமாகி செட்டில் ஆகிட்டாலும், பிஸ்னஸ்மேனாக இருந்தால் இதை எல்லாம் செய்யனும்! பென்ஸ் கார் கொஞ்சம் ஓவர்!

மெர்சிடிஸ் (Mercedes), ஜெர்மனியை சேர்ந்த முன்னணி லக்சரி கார் நிறுவனம். இந்தியாவில் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்வதில் பி.எம்.டபிள்யூ (BMW) மற்றும் ஆடி (Audi) போன்ற நிறுவனங்களை விட முன்னணியில் மெர்சிர்டிஸ் உள்ளது. இத்தகைய மெர்சிடிஸ் நிறிவனத்தில் இருந்து கார்கள் மொத்தம் 3 விதமான பிரிவுகளின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. பென்ஸ் (Benz), ஏஎம்ஜி (AMG) மற்றும் மேபக் (Maybach) என்பன அவை ஆகும். இதில், மேபக் ஆனது மிகவும் விலை உயர்ந்த கார்களை கொண்டதாக உள்ளது.

அதற்கேற்ப மெர்சிடிஸ்-மேபக் கார்கள் மிகவும் லக்சரி தரத்திலானவை ஆக விளங்குகின்றன. அதேநேரம், ஏஎம்ஜி (AMG) கார்கள் செயல்திறன்மிக்கவை ஆகும். சில மெர்சிடிஸ் கார்கள் ஏஎம்ஜி மற்றும் மேபக் என இரண்டும் கலந்த கலவை ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய கார்கள் பல கோடி ரூபாய் விலைமிக்கவை ஆக விளங்குகின்றன.

dinesh thakkar buys mercedes-amg gle53

நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி காரை புதியதாக வாங்கிய தொழிலதிபரை பற்றி ஆகும். தினேஷ் தாக்கர் (Dinesh Thakkar), இந்தியாவின் பிரபலமான பங்குத்தரகர் நிறுவனமான ஏஞ்சல் ஒன் (Angel One)-இன் சிஇஓ. முன்பு ஏஞ்சல் புரோகிங் (Broking) என அழைக்கப்பட்டு வந்த ஏஞ்சல் ஒன் நிறுவனத்தை சமீப காலத்தில் நாடு முழுவதும் பிரபலமாக்கி வெற்றிப் பாதைக்கு கொண்டுவந்தவர், தினேஷ் தாக்கர் ஆவார்.

இதனாலேயே கடந்த சில வருடங்களாக, தினேஷ் தாக்கர் புதியதாக சொகுசு கார்களை வாங்கும் செய்திகளை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் சிஇஓ தினேஷ் தாக்கர் புதியதாக வாங்கியிருப்பது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி.எல்.இ 53 (Mercedes-AMG GLE 53) என்கிற விலையுயர்ந்த & செயல்திறன்மிக்க லக்சரி கார் ஆகும்.

dinesh thakkar buys mercedes-amg gle53

இந்த மெர்சிடிஸ் காரை சில்வர் நிறத்தில் வாங்கி இருப்பதை படங்கள் உடன் தனது ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தில் தினேஷ் தாக்கர் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ஃபேஸ்புக் பதிவில், இந்த காரை தனக்காக வாங்கவில்லை என்றும், தனது மகன் விஜய் தாக்கருக்காக வாங்கி உள்ளதாகவும் தினேஷ் தாக்கர் தெரிவித்துள்ளார்.

இதனால்தான், முந்தைய கார்களை டெலிவிரி பெறும்போது தனியாளாக ஷோரூமுக்கு சென்ற தினேஷ் தாக்கர், இந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி.எல்.இ53 காரை டெலிவிரி பெறும்போது மட்டும் மனைவி, மகன் மற்றும் மருமகள் உடன் ஷோரூமுக்கு சென்றுள்ளார். ஷோரூமில் துணியால் மூடப்பட்டு இருந்த ஏஎம்ஜி ஜிஎல்இ53 காரை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து துணியை விலக்கி மகிழ்ச்சி உடன் தங்களது பார்வைக்கு கொண்டுவந்தனர்.

dinesh thakkar buys mercedes-amg gle53

ஏஎம்ஜி ஜிஎல்இ53 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதனை மெர்சிடிஸ் நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஏஎம்ஜி காரினுள் பிரீமியம் தரத்திலான அம்சங்களாக, டிரைவருக்கு நேரெதிராக மேலே டிஸ்பிளே, மெமரி ஃபங்க்சன் உடன் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய இருக்கைகள், ஹீட்டட் & வெண்டிலேட்டட் இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கபடுகின்றன.

இந்த ஏஎம்ஜி காரில் 3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் பொருத்தப்படும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் வழங்குகிறது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ53 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.88 கோடியில் இருந்து ஆரம்பிக்கின்றன.

dinesh thakkar buys mercedes-amg gle53

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் சிஇஓ தினேஷ் தாக்கரிடம் ஏற்கனவே போர்ஷே டைகன் டர்போ எஸ் (Porsche Taycan Turbo S), மெர்சிடிஸ்-பென்ஸ் இ.க்யூ.இ (EQE) போன்ற விலையுயர்ந்த கார்கள் இருக்கின்றன. ஆதலால்தான், இந்த புதிய மெர்சிடிஸ் காரை தனது மகன் விஜய் தாக்கருக்காக தினேஷ் தாக்கர் வாங்கி உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 1, 2025, 21:29 [IST]
English summary
Businessman dinesh thakkar buys mercedes amg gle53 for his son
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X