மானமே போச்சு! நடுரோட்டில் பிரேக் டவுன் ஆன 10 கோடி ரூபா கார்! அவ்ளோ பெரிய ஆளு தலையிலயே மிளகா அரச்சுட்டாங்களா!
இந்திய சாலைகளில் கார்கள் பிரேக் டவுன் (Breakdown) ஆகி நிற்பது என்பது, வழக்கமான ஒரு நிகழ்வு. ஆனால் நாம் காண்பதெல்லாம், நடுத்தர வர்க்க மக்கள் பயன்படுத்தும் சாதாரண கார்கள் ஆகும். அவை பிரேக் டவுன் ஆகி நிற்பதில் எல்லாம், பெரிதாக ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியோ ஒன்றும் இல்லை. ஆனால் கார் பிரேக் டவுன் விஷயத்தில், ஆச்சரியம் கலந்து அதிர்ச்சியை தரக்கூடிய வகையிலான நிகழ்வு ஒன்று தற்போது நடைபெற்றுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நீங்கள் கார் காதலராகவோ அல்லது தொழில் அதிபர்களை அதிகமாக பின் தொடர கூடியவராகவோ இருந்தால், நிச்சயமாக கௌதம் சிங்ஹானியா (Gautam Singhania) பற்றி தெரியாமல் இருக்காது. ஏனெனில் இவர் தீவிரமான கார் காதலர் ஆவார். அந்த கால விண்டேஜ் கார்கள் முதல் இந்த கால சூப்பர் கார்கள் வரை, நிறைய கார்களை இவர் வைத்துள்ளார்.

கார் காதலர் என்பதை கடந்து, இந்தியாவின் மிக முக்கியமான தொழில் அதிபர் (Businessman) என்ற முகமும் கௌதம் சிங்ஹானியாவிற்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் கௌதம் சிங்ஹானியாவும் ஒருவராக திகழ்கிறார். பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியான இவர், ரேமண்ட் குழுமத்தை (Raymond Group) நிர்வகித்து கொண்டுள்ளார்.
டெக்ஸ்டைல், இன்ஜினியரிங் மற்றும் ரியல் எஸ்டேட் என பல துறைகளிலும் கொடி கட்டி பறந்து கொண்டுள்ள ரேமண்ட் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக (Chairman And Managing Director) கௌதம் சிங்ஹானியா உள்ளார். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இவர் கார்களை அதிகமாக நேசிக்க கூடியவர்.
அப்படி அவர் தீவிரமாக நேசித்த கார் ஒன்று, சமீபத்தில் கௌதம் சிங்ஹானியாவை, நடுரோட்டில் தவிக்க விட்டுள்ளது. அது லம்போர்கினி ரெவுலோடோ (Lamborghini Revuelto) கார் ஆகும். இது ஹைப்ரிட் சூப்பர் கார் (Hybrid Supercar) ரகத்தை சேர்ந்தது. இந்த காரில், 6.5 லிட்டர் 12 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார்களும் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, 1,015 பிஎஸ் பவர் மற்றும் 725 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில், ட்யூனிங் செய்யப்பட்டுள்ளன. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.50 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த கார் கொண்டுள்ளது.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 8.89 கோடி ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) எப்படியும் 10 கோடி ரூபாயை கடந்து விடும். இவ்வளவு விலை உயர்ந்த காரில், கௌதம் சிங்ஹானியா சமீபத்தில் மும்பை (Mumbai) நகரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அங்குள்ள டிரான்ஸ் ஹார்பர் லிங்க்கில் (Trans Harbour Link) பயணம் செய்து கொண்டிருந்தபோது, லம்போர்கினி ரெவுலோடோ கார் திடீரென பிரேக் டவுன் ஆகி நின்றது. இது கடல் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலம் (Sea Bridge) ஆகும். அடல் சேது (Atal Setu) என்று சொன்னால், இன்னும் நன்றாக புரியும் என நினைக்கிறோம்.
அடல் சேது கடல் பாலம்தான், டிரான்ஸ் ஹார்பர் லிங்க் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த கடல் பாலத்தின் மீது பயணம் செய்து கொண்டிருந்தபோது, லம்போர்கினி ரெவுலோடோ கார் பழுதாகி நின்றதால், கௌதம் சிங்ஹானியா அதிர்ச்சியடைந்தார். எலெக்ட்ரிகல் ஃபெயிலர் (Electrical Failure) காரணமாக, கார் நடுவழியில் பிரேக் டவுன் ஆனதாக கூறப்படுகிறது.
முன்பு ட்விட்டர் (Twitter) எனவும், தற்போது எக்ஸ் (X) எனவும் அழைக்கப்பட்டு வரும் தளத்தில், கௌதம் சிங்ஹானியா பதிவிட்டதை தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக லம்போர்கினி நிறுவனம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கௌதம் சிங்ஹானியாவிற்கு ஏற்பட்டுள்ள மோசமான அனுபவம், லம்போர்கினி நிறுவன தயாரிப்புகளின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இத்தனைக்கும் இது புத்தம் புதிய கார் ஆகும். எனவே வாகன நிறுவனங்கள் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வலியுறுத்துகிறது.


Click it and Unblock the Notifications








