நடிகை சுஷ்மிதா சென்னின் புதிய காதலர் லலித் மோடியிடம் உள்ள சொகுசு கார்கள்!! இவை சும்மா டிரைலர் தான்
நடிகை சுஷ்மிதா சென் மற்றும் தொழிலதிபர் லதித் மோடியின் காதல் கிசுகிசுக்கள் வைரலாக போய் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், முன்னாள் ஐபிஎல் தலைவரும், தொழிலதிபருமான லலித் மோடியிடம் உள்ள சொகுசு கார்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதன்முதலாக துவங்கப்பட்டதில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்த்துவரும் ரசிகர்களுக்கு நிச்சயமாக லலித் மோடியை பற்றி தெரியாமல் இருக்காது. அந்த சமயங்களில் இவரது பெயர் அவ்வப்போது தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கும். ஆனால் அதன்பின் மோசடி குற்றச்சாட்டுகளால் தற்சமயம் நாடு நாடாக தலைமறைவாக லலித் மோடி சுற்றி வருகிறார்.

56 வயதான இவர் சமீபத்தில் டுவிட்டரில், முன்னாள் உலக பிரபஞ்ச அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் உடன் காதல் மலர்ந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பதிவு செய்த ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 56 வயதான ஒருவருடன் நடிகைக்கு காதல் மலர்ந்துள்ளது என்றால், அவர் எந்த அளவிற்கு சொகுசு வாழ்கையில் மிதப்பவராக இருப்பார் என்று கற்பனை செய்துப் பாருங்கள். லலித் மோடியிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. அவை அனைத்தையும் பற்றி பார்க்க வேண்டுமென்றால், இந்த பக்கம் போதாது. ஆதலால் அவற்றுள் பிரபலமான சில கார்கள் இதோ...

1. ஃபெராரி 488 பிஸ்டா ஸ்பைடர்
View this post on Instagram
லலித் மோடி இந்த ஃபெராரி ஸ்போர்ஸ் காரை கடந்த 2020இல் வாங்கினார். இதுகுறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவினை இப்போது கூட உங்களால் பார்க்க முடியும். பிஸ்டா ஸ்பைடர் மாடல் ஆனது ஃபெராரி 488 வரிசையிலேயே மிகவும் விலையியர்ந்த காராக விளங்குகிறது. கஸ்டமைஸ்ட் நம்பர் ப்ளேட் உடன் நீல நிறத்தில் கண்ணை கவரும் வகையில் காட்சியளிக்கும் இந்த ஃபெராரி 488 காரின் விலை ஏறக்குறைய ரூ.5 கோடி ஆகும்.

2. பெண்ட்லீ முல்சன்னே ஸ்பீடு
இந்த பெண்ட்லீ கார் தற்சமயம் எந்தவொரு நாட்டிலும் விற்பனையில் இல்லை. உற்பத்தி 2020இல் நிறுத்தப்படுவதற்கு முன்பு வரையில் சுமார் 10 வருடங்களுக்கு முல்சன்னே கார்கள் தான் இருப்பதிலேயே விலையுயர்ந்த பெண்ட்லீ கார்களாக விளங்கி வந்தன. முல்சன்னே, முல்சன்னே ஸ்பீடு (லலித் மோடியிடம் உள்ளது) மற்றும் முல்சன்னே நீண்ட வீல்பேஸ் என 3 விதமான மாடல்களில் உலகில் முல்சன்னே கார்கள் விற்கப்பட்டன.

3. மெக்லாரன் 720எஸ்
View this post on Instagram
இந்தியாவிலும் விற்பனையில் உள்ள இந்த மெக்லாரன் காரை லலித் மோடி பயன்படுத்தி வந்தாலும், இந்த காரை வாங்கியது என்னவோ அவரது மகன் ருச்சிர் மோடி ஆகும். வேரியண்ட்டை பொறுத்து மெக்லாரன் 720எஸ் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.65 கோடியில் இருந்து ரூ.5.04 கோடி வரையில் தற்சமயம் உள்ளன. 720எஸ் என இந்த காருக்கு பெயர் வருவதற்கு காரணம், இதில் பொருத்தப்படும் 4.0 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 720 பிஎஸ் மற்றும் 770 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

4. ஃபெராரி எஃப்12 பெர்லினெட்டா
View this post on Instagram
இதுவும் ருச்சிர் மோடி வாங்கியதுதான். லலித் மோடியின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இந்த காரை ருச்சிர் மோடி பரிசாக வழங்கினார். முன்பு இந்தியாவிலும் விற்பனையில் இருந்த இந்த காரின் விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன்பு கடைசியாக இருந்த விலை ரூ.5.60 கோடி ஆகும். இந்த ஃபெராரி காரில் லலித் மோடிக்கும் கிரிக்கெட்டிற்கும் இடையேயான பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக 'CRI3KET' என நம்பர் ப்ளேட் பொருத்தப்பட்டுள்ளது.

5. ஃபெராரி 812 ஜிடிஎஸ்
View this post on Instagram
லலித் மோடியிடம் உள்ள மற்றொரு லக்சரி ஸ்போர்ட்ஸ் கார். ஆனால் இதனை அவர் ஒரு நாளும் ஓட்டியது இல்லை. ஏனெனில் இதனை அவர் தனது மகனின் பிறந்த நாளுக்காக பரிசளித்தார். கடந்த 2021ஆம் ஆண்டில் லலித் மோடியால் வாங்கப்பட்ட இந்த ஃபெராரி 812 ஜிடிஎஸ் கார் பளபளக்கும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. கிட்டத்தட்ட ரூ.6 கோடி மதிப்பிலான இந்த ஃபெராரி காரானது வெறும் 2 இருக்கைகளை மட்டுமே கொண்டதாக உள்ளது.

6. பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் 760 எல்ஐ
பிஎம்டபிள்யூவின் லக்சரி செடான் காரான 7-சீரிஸ் 760 எல்ஐ காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய ரூ.2 கோடியாக உள்ளது. இதில் பொருத்தப்படும் 6 லிட்டர் வி12 பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 540 பிஎச்பி மற்றும் 760 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பிஎம்டபிள்யூ வைத்துள்ள கார்களிலேயே இதனை மிகவும் லக்சரி கார் என்று கூட சொல்லலாம்.

7. அஸ்டன் மார்டின் ராபிடே
இறந்த தனது மனைவி மினலுக்கு லலித் மோடி பரிசாக வழங்கிய கார் இதுவாகும். தற்சமயம் அஸ்டன் மார்டின் ராபிடே மாடல் உற்பத்தி செய்யப்படுவதில்லை. முதன்முதலாக 2010இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அதி-செயல்திறன்மிக்க ஸ்போர்ட்ஸ் சலூன் காரில் 6 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் பொருத்தப்பட்டது. இந்த 4 இருக்கை காரின் விலை ரூ.4.4 கோடியாக மதிப்பிடப்பட்டது.


Click it and Unblock the Notifications








