யார் கண்ணும் பட்ற கூடாது! ஏழரை கோடி ரூபா காருக்கு கோயிலில் பூஜை போட்டது அவரா! வாழ்ந்தா இவரை மாதிரி வாழணும்!
இந்தியாவில் தொழில் அதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர், கார் ஆர்வலர்களாக இருக்கின்றனர். எனவே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அவர்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இந்த வரிசையில் ஏற்கனவே ஏராளமான சொகுசு கார்களை வைத்துள்ள தொழில் அதிபர் ஒருவர், விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காரை தற்போது வாங்கியுள்ளார்.
அவர் பர்வீன் அகர்வால் (Parveen Agarwal) ஆவார். கொல்கத்தாவை (Kolkata) சேர்ந்த இவரிடம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஏராளமாக உள்ளன. இதில், ஃபெராரி 296 ஜிடிஎஸ் (Ferrari 296 GTS), லம்போர்கினி அவென்டெடார் எஸ் ரோட்ஸ்டர் (Lamborghini Aventador S Roadster) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, (Lamborghini Urus), (McLaren 720S), மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes Benz G63 AMG) ஆகிய விலை உயர்ந்த கார்களையும், பர்வீன் அகர்வால் வைத்துள்ளார். இந்த வரிசையில் தற்போது புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் (Rolls Royce Spectre) கார் ஒன்றை அவர் வாங்கியுள்ளார்.
இதுதான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் எலெக்ட்ரிக் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 7.50 கோடி ரூபாய் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரில், 102 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 530 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். இது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 593 பிஎஸ் மற்றும் 900 என்எம் ஆக உள்ளது.
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை, ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார், வெறும் 4.5 வினாடிகளிலேயே எட்டி விடும். இவ்வளவு விலை உயர்ந்த மற்றும் செயல்திறன் மிக்க ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரை வாங்கியவுடன், அதற்கு ஹிந்து பாரம்பரிய முறைப்படி, பர்வீன் அகர்வால் பூஜை செய்துள்ளார்.
புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காருக்கு, கோயிலில் பூஜை செய்யப்படும் வைரல் வீடியோ (Viral Video), பர்வீன் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக பர்வீன் அகர்வாலுக்கு சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய வாகனங்களை வாங்கினால், கோயிலில் பூஜை செய்வது ஹிந்துக்கள் பின்பற்றும் சம்பிரதாயங்களில் ஒன்று. இது கண் திருஷ்டி போன்ற பிரச்னைகளை தவிர்த்து, வாகனம் பாதுகாப்பாக இயங்க உதவி செய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. எனவே புதிய வாகனங்களை டெலிவரி எடுத்தவுடன் பலரும் நேராக கோயிலுக்குதான் செல்கின்றனர்.
இதனால் வாகனங்களுக்கு கோயில்களில் பூஜை நடைபெறவது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல. ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் போன்ற ஒரு காருக்கு கோயிலில் பூஜை நடைபெறுவது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாகதான் கருதப்படுகிறது. ஏனெனில் இந்தியாவை பொறுத்தவரையில், இது மிகவும் அரிதான ஒரு கார் ஆகும்.
ஆனால் இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரை வைத்துள்ள தொழில் அதிபர்கள் மற்றும் பிரபலங்களின் எண்ணிக்கை தற்போது மிக வேகமாக உயர்ந்து வருகிறது. முன்னதாக தொழில் அதிபர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) மற்றும் நடிகர்கள் ராம் சரண் (Ram Charan), தனுஷ் (Dhanush) போன்றவர்களிடமும், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
Image Source: @parveen212 via Instagram


Click it and Unblock the Notifications








