ஒரே நாளில் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியது அவரா! விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஒரு நிமிஷம் ஆடி போயிருவாரு!
ரோல்ஸ் ராய்ஸ் கார்களை (Rolls Royce Cars) வாங்க வேண்டும் என்ற கனவு நிச்சயமாக நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அந்த கனவை நிறைவேற்ற முடிகிறது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலை பல கோடி ரூபாய் என்பதுதான் இதற்கு காரணம். எனவே பலரும், விலை குறைவான எளிமையான கார்களுடன் திருப்தியடைந்து கொள்கின்றனர்.
நிலைமை இப்படி இருக்கும்போது இந்தியாவை சேர்ந்த சஞ்சய் கோடவட் (Sanjay Ghodawat) என்ற தொழில் அதிபர் (Businessman) ஒருவர், ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியுள்ளார். அதுவும் ஒரே நாளில்! இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II (Rolls Royce Cullinan Series II), ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II (Rolls Royce Ghost Series II) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் இவி (Rolls Royce Spectre EV) ஆகிய 3 கார்களைதான், தொழில் அதிபர் சஞ்சய் கோடவட் ஒரே நாளில் டெலிவரி எடுத்துள்ளார்.
இந்த 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உடன் அவர் நிற்கும் புகைப்படம், சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II காரின் விலை 10.50 கோடி ரூபாய் ஆகும். இந்த காரின் பிளாக் பேட்ஜ் எடிசனின் விலையோ 12.25 கோடி ரூபாயாக இருக்கிறது.

இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி12 பெட்ரோல் இன்ஜின் ஆகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த இன்ஜின் அதிகபட்சமாக 571 ஹெச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II காரின் விலை 8.95 கோடி ரூபாய் ஆகும். இந்த காரிலும், 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி12 பெட்ரோல் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 563 பிஹெச்பி மற்றும் 850 என்எம் டார்க் ஆக உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II காரில், ஸ்டாண்டர்டு வெர்ஷன் மட்டுமல்லாது, எக்ஸ்டெண்டட் வீல்பேஸ் (10.19 கோடி ரூபாய்) மற்றும் பிளாக் பேட்ஜ் (10.52 கோடி ரூபாய்) ஆகிய 2 வெர்ஷன்களும் விற்பனை செய்யப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மறுபக்கம் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் இவி காரின் விலை 7.50 கோடி ரூபாயாக உள்ளது. இது எலெக்ட்ரிக் கார் ஆகும். 102 kWh பேட்டரியை, ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் இவி பெற்றுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 530 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும்.
இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் அதிகமாக வரும் என்பதால், ஒரே நாளில் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியுள்ள தொழில் அதிபர் சஞ்சய் கோடவட்டை மக்கள் ஆச்சரியமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் கோடவட் குழுமத்தின் (Sanjay Ghodawat Group) தலைவராக இவர் இருந்து வருகிறார். இவரது சஞ்சய் கோடவட் குழுமம், டெக்ஸ்டைல்ஸ், சாஃப்ட்வேர், கல்வி, ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்கம் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவை சேர்ந்த பிரபலமான தொழில் அதிபர்கள் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்குவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். அவர்களது பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உறுதி செய்கின்றன. ஆனால் ஒரே நாளில் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை டெலிவரி எடுத்திருப்பதன் மூலம் சஞ்சய் கோடவட் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications









