5 கோடி ரூபாய் காருக்கு கோயிலில் சாதாரணமா பூஜை போட்டது இவரா! கப்சிப்னு வந்து வேலையை முடிச்சுட்டு போய்ட்டாங்க!
இந்தியாவில் முன்பெல்லாம் சூப்பர் கார்களை (Super Cars) காண்பது என்பது அபூர்வமான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. சென்னை (Chennai), பெங்களூர் (Bangalore) மற்றும் மும்பை (Mumbai) போன்ற பெரு நகரங்கள் மட்டுமல்லாது, திருச்சி (Trichy), கோவை (Coimbatore) போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் கூட சூப்பர் கார்களை பார்க்க முடிகிறது.
இந்தியாவில் சூப்பர் கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதுதான் இதற்கு காரணம். என்னதான் சூப்பர் கார்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தாலும் கூட, இந்தியர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறப்பதில்லை. சூப்பர் கார்களை வாங்கிய உடனேயே கோயிலுக்கு கொண்டு சென்று பூஜை (Pooja) உள்ளிட்ட சடங்குகளை (Rituals) செய்து விடுகின்றனர்.

மும்பையை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் இதற்கு சமீபத்திய உதாரணம். மிகவும் விலை உயர்ந்த மெக்லாரன் 720எஸ் (McLaren 720S) சூப்பர் காரை, மும்பையை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் சமீபத்தில் வாங்கினார். கார் அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட உடனேயே வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு எடுத்து சென்று, பூஜை உள்ளிட்ட சடங்குகளை அவர் முடித்து விட்டார்.
பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் மெக்லாரன் 720எஸ் சூப்பர் காருக்கு பூஜை உள்ளிட்ட சடங்குகள் செய்யப்படும் வீடியோ (Video), தற்போது யூடியூப் (YouTube) தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வைரல் வீடியோவை (Viral Video) பலரும் ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து வருகின்றனர்.

மும்பை நகரின் சாலைகளில் அந்த மெக்லாரன் 720எஸ் கார் பயணம் செய்வதையும் இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது பொதுமக்கள் பலரும் அந்த காருடன் மிகவும் ஆர்வமாக செல்ஃபி (Selfie) எடுத்து கொண்டனர். மெக்லாரன் 720எஸ் ஒரு தனித்துவமான கார் ஆகும்.
ஏனெனில் ஒட்டுமொத்தமாக வெறும் 400 மெக்லாரன் 720எஸ் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 400 பேர் மட்டுமே இந்த காருக்கு உரிமையாளர்களாக மாற முடியும். தற்போது நாம் பேசி கொண்டிருக்கும் மும்பையை சேர்ந்த கோடீஸ்வரர் அதில் ஒருவர் ஆகியுள்ளார்.
ஆனால் இந்திய கோடீஸ்வரர்கள் ஒரு சிலரிடம் ஏற்கனவே மெக்லாரன் 720எஸ் கார் உள்ளது. அம்பானி (Ambani) மற்றும் அடார் பூனாவல்லா (Adar Poonawalla) போன்றவர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். மெக்லாரன் 720எஸ் சூப்பர் காரில், 4.0 லிட்டர் வி8 ட்வின்-டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 710 பிஹெச்பி பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 2.8 வினாடிகளில் எட்டி விடும். அதாவது 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எட்டுவதற்கு கிட்டத்தட்ட கண்ணிமைக்கும் நேரத்தை மட்டுமே இந்த கார் எடுத்து கொள்ளும்.
அதே நேரத்தில் மெக்லாரன் 720எஸ் சூப்பர் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 341 கிலோ மீட்டர் ஆகும். இந்திய சந்தையில் மெக்லாரன் 720எஸ் காரின் ஆரம்ப விலையே (Price) 4.65 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 5.04 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
அமித் சிங் என்பவர்தான் தற்போது மெக்லாரன் 720எஸ் காருக்கு கோயிலில் பூஜை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மும்பை பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் தொழில் அதிபர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. அத்துடன் இவர் கார் ஆர்வலர் எனவும் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய வாகனங்களை வாங்கும்போது கோயிலில் பூஜை செய்வது இந்தியர்களின் வழக்கம். அப்போதுதான் வாகனம் நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்கும், சாலை விபத்துக்கள் (Road Accident) ஏற்படாது என மக்கள் நம்புகின்றனர். முன்னதாக புதிய ஹெலிகாப்டருக்கு (Helicopter) கூட, கோயிலில் பூஜை செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில்தான் தொழில் அதிபர் அமித் சிங்கும், தனது விலை உயர்ந்த புதிய காருக்கு கோயிலில் பூஜை செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications








