மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா?

திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஒரு பேக்கரியில், அதிரடியான சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா?

இந்தியாவில் சமீப நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா?

இதற்காக பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் கலால் வரி மற்றும் வாட் வரி ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வரை அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே வேறு வழியில்லாமல் அதிகப்படியான விலைக்கே வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் நிரப்பி வருகின்றனர்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் கார் மாஸ் காட்டுதா? மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய வீடியோ!

மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா?

இப்படிப்பட்ட ஒரு சூழலில், திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஒரு பேக்கரியில் வாகன ஓட்டிகளை கவரும் வகையிலான சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், இந்த பேக்கரியில் நீங்கள் ஒரு கிலோ கேக் வாங்கினால், உங்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கிடைக்கும். இந்த அறிவிப்பின் மூலம் பேக்கரி உரிமையாளர் சகாயராஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா?

திறப்பு விழா சலுகையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பேக்கரி திறப்பு விழாவின்போது, வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஒரு சலுகையை அறிவிக்க திட்டமிட்டிருந்ததாக, அதன் உரிமையாளர் சகாயராஜ் கூறியுள்ளார். தற்போது பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோலை இலவசமாக வழங்கினால் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது.

மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா?

மற்ற இலவசங்களை வழங்கினால், வாடிக்கையாளர்களுக்கு பெரிதாக பயன் இருக்காது என்பது அவரது கருத்து. இதன் விளைவாகதான் 1 கிலோ கேக் வாங்கினால், 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு வெளியானது. இது வாடிக்கையாளர்களை ஈர்க்க கூடிய ஒரு விஷயமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா?

ஒரு கிலோ கேக் வாங்கினால், 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற சலுகை ஒரு மாதம் வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் எனவும் சகாயராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக பிகைண்ட்வுட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளியாவது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா?

கடந்த காலங்களில் பெட்ரோல் விலை உயர்ந்த சமயங்களிலும், ஒரு சில பேக்கரிகளில் இப்படிப்பட்ட அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அத்துடன் திருமண விழாக்களில் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்குவது போன்ற வித்தியாசமான சம்பவங்களும் கூட கடந்த காலங்களில் பல முறை நடைபெற்றுள்ளன.

மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க போறாங்க... சூப்பரான ஆஃபரை அறிவித்த திருச்சி பேக்கரி... என்னனு தெரியுமா?

சமீபத்தில் கூட மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றவருக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ளதால், வரும் நாட்களில் பெட்ரோல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Buy Cake, Get Free Petrol - Trichy Bakery Owner Finds A Unique Way To Attract People: All Details Here. Read in Tamil
Story first published: Thursday, March 4, 2021, 20:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X