டிசம்பர் மாசம் கார் வாங்குனா லட்சகணக்குல பணம் மிச்சம் பண்ணலாமா?
வழக்கமாக மற்ற மாதங்களில் கார் வாங்குவதை விட டிசம்பர் மாதம் கார் வாங்கினால் அதிக பணத்தை மிச்சப்படுத்த முடியும் என சிலர் கூறுகிறார்கள். இதற்கான காரணம் என்ன? டிசம்பர் மாதம் அப்படி என்ன ஸ்பெஷல்? இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வழக்கமாக மாற்ற மாதங்களில் கார் வாங்குவதை விட டிசம்பர் மாதம் கார் வாங்கினால் அதிக சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இருப்பது உண்மை தான் அதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளது. இந்த மாதம் கார் வாங்கும் திட்டத்தில் இருந்தால் இந்த மாதம் எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என பார்க்கலாம் வாருங்கள்.

வழக்கமாக டிசம்பர் மாதம் வருட கடைசி மாதம் என்பதால் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் இந்த ஆண்டே விற்க வேண்டும் என எண்ணம் டீலர்களுக்கு இருக்கம் 2026 பிறந்துவிட்டால் 2025ல் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஒரு ஆண்டு பழைய வாகனங்களாக கருதப்படும் என்பதால் இந்தாண்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஸ்டாக்கில் இருப்பதை காலி செய்ய சலுகைகளை வழங்குவார்கள்.
இதனால் டிசம்பர் மாதம் மற்ற மாதங்களில் இல்லாத சலுகைகள் கிடைக்கும். இது மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வாகனங்கள் விற்பனை செய்கிறது என்ற கணக்கு இருக்கும். கடந்தாண்டு விற்பனை செய்த இலக்கை தாண்டு பிரஷர் டீலர்களுக்கு இருக்கும். இதனால் இந்த மாதம் கார்கள் விற்பனையை அதிகரிக்க டீலர் தரப்பிலிருந்து தள்ளுபடிகள் வழங்கப்படலாம்.

சில நேரம் நேரடி தள்ளுபடியாக அல்லாமல் இலவச இன்சூரன்ஸ், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, இலவச ஆக்ஸசரீஸ்கள், சிறப்பு வட்டி விகிதத்தில் ஃபைனான்ஸ் ஆப்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு மற்ற மாதங்களைவிட டிசம்பர் மாதங்களில் பணம் சேமிக்க அதிக வாய்ப்புள்ளது.
இது போக பண்டிகை காலம் சமீபத்தில் தான் முடிந்ததால் கார் வாங்கும் எண்ணத்தில் இருந்த பலர் கார்களை தீபாவளியை ஒட்டியே வாங்கியிருப்பார்கள். இதனால் டிசம்பர் மாதம் பெரும்பாலும் டீலர்ஷிப்களில் வாடிக்கையாளர்கள் வருகை குறைவாக இருக்கும். இந்த நேரட்டில் நீங்கள் சென்றால் உங்களுக்கு பேரம் பேசி வாகனத்தின் விலையை குறைக்க அதிக நேரம் கிடைக்கும்.
இது மட்டுமல்ல குறைவாக விற்பனையாகும் கார்களை எப்படியாவது தள்ளி விட டீலர்ஷிப்களில் தள்ளுபடிகள் வழங்கப்படலாம். இதனால் வேரியன்ட், கலர் போன்று அதிகம் பிரபலம் இல்லாத வேரியன்டை நீங்கள் விரும்பினாலோ அல்லது மாற்ற நினைத்தாலோ உங்களுக்கு தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நீங்கள் சமரசம் செய்ய வாய்ப்பு உள்ளது. சமரசம் செய்ய ரெடியாக இருந்தால் நிச்சயம் லட்சகணக்கில் கூட நீங்கள் பணத்தை மிச்சம் பண்ண வாய்ப்பு உள்ளது. இது மிகப்பெரிய அளவில் உங்களுக்கு பணத்தை மிச்சம் செய்து தரும்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிசம்பர் மாதம் வழக்கமாக அதிக தள்ளுபடிகள் வழங்கப்படும் காலம் என்பதால் இந்த காலகட்டத்தில் கார் வாங்கினால் அதிக பணத்தை மிச்சம் பண்ண வாய்ப்புள்ளது. இது மட்டுமல்ல இந்த காலகட்டத்தில் விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் எப்படியாவது அதிகரிக்க தள்ளுபடிகள் அதிகமாக வழங்கப்படலாம். இதனால் லட்சகணக்கில் கூட பணம் மிச்சம் செய்ய வாய்ப்புள்ளது. இது குறித்த உங்கள் கரத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








