காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் சாதக, பாதகங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆட்டோமொபைல் துறையில் தொடர்ச்சியாக புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது. விற்பனையை அதிகரிப்பதற்காக பல புதிய யுக்திகளை கார் உற்பத்தி நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகளை வழங்குவது எல்லாம் நம்பியார் காலத்து டெக்னிக். தற்போது 'ட்ரெண்ட்' மாறி விட்டது.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்தியாவில் புதிய யுக்தி ஒன்றை கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. கார்களை லீஸ் (Lease) அடிப்படையில், அதாவது குத்தகை அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுதான் கார் நிறுவனங்கள் தற்போது புதிதாக கையில் எடுத்திருக்கும் யுக்தி.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

கார்களை குத்தகைக்கு எடுப்பதில் இருக்கும் சாதக, பாதகங்களை இந்த செய்தி தொகுப்பு விரிவாக அலசுகிறது. காரை சொந்தமாக வாங்குவதா? அல்லது குத்தகைக்கு எடுப்பதா? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள், அவர்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம்.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

கார் குத்தகை என்றால் என்ன? அடிப்படை தகவல்!

காரை குத்தகைக்கு எடுப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது போன்றது. புதிய காரை சொந்தமாக வாங்கினால் நீங்கள் மிகப்பெரிய தொகையை முன்பணமாக செலுத்த வேண்டியிருக்கும். அதன் பின் மீதி தொகையை ரொக்கமாகவோ அல்லது வங்கி லோன் மூலமாகவோ நீங்கள் செலுத்தலாம். ஆனால் கார் குத்தகை திட்டத்தில் இந்த தலைவலிகள் இல்லை.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காரை குத்தகைக்கு எடுக்கும்போது நீங்கள் முன் பணம் செலுத்த வேண்டியதில்லை. அப்படியே இருந்தாலும் அது மிகவும் குறைவாகதான் இருக்கும். காரை குத்தகைக்கு எடுத்த பின் நீங்கள் மாதந்தோறும் கட்டணம் செலுத்தி கொள்ளலாம். பராமரிப்பு, பதிவு கட்டணம் மற்றும் காப்பீடு புதுப்பிப்பது போன்ற செலவுகளை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவே 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய காருக்கு மாறி விட வேண்டும் என நினைப்பவர்களுக்கும், பராமரிப்பு செலவு உள்பட காரை சொந்தமாக வைத்திருப்பதால் ஏற்படும் செலவுகளை விரும்பாதவர்களுக்கும் இந்த திட்டம் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பதை போல், இந்த திட்டத்திலும் ஒரு சில சாதங்களும், ஒரு சில பாதகங்களும் இருக்கின்றன.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காரை குத்தகைக்கு எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

காரை குத்தகைக்கு எடுத்தால், நீங்கள் கார் லோன் கேட்டு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. எனவே கால்குலேட்டரை கையில் வைத்து கொண்டு வட்டி எவ்வளவு? என தலையை பிய்த்து கொண்டிருக்க வேண்டாம். எல்லாவற்றையும் விட நீங்கள் பல லட்ச ரூபாய் கடனுக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மாதாந்திர கட்டணத்தை செலுத்துவது மட்டும்தான்.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் லோன் வாங்கி புதிய காரை வாங்கினால், அதற்கு மாதந்தோறும் இஎம்ஐ செலுத்த வேண்டும். சில சமயங்களில் இந்த இஎம்ஐ-யை விட, குத்தகை திட்டத்தில் பெறப்படும் காருக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர கட்டணம் குறைவாக இருக்கும். இவை எல்லாம் குத்தகையில் கார் வாங்குவதன் மூலம் கிடைக்கும் மிக முக்கியமான நன்மைகள்.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் 2-3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு காரை வைத்திருக்க கூடாது என விரும்ப கூடியவர்களுக்கும் இது மிகச்சிறந்த தேர்வு. ஏனெனில் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோமோ, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். குத்தகை காலம் முடிவடைந்த பிறகு, அதனை கார் நிறுவனத்திடமே மீண்டும் ஒப்படைத்து விட்டு, வேறு ஒரு புதிய காருக்கு மாறி கொள்ளலாம்.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் காரை குத்தகைக்கு எடுத்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் டீலர்ஷிப்பே பராமரிப்பு மற்றும் ரிப்பேர் வேலைகளை கவனித்து கொள்ளும். எனவே குறிப்பிட்ட இடைவெளிகளில் அவ்வப்போது நடக்க வேண்டிய பராமரிப்பு பணிகளுக்கு நீங்கள் பொறுப்பாக வேண்டியதில்லை. அதேபோல் காரின் மறு விற்பனை (Resale) குறித்தும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் காரை குத்தகைக்கு எடுத்தால், அதன் மறு விற்பனை மதிப்பு மற்றும் மறு விற்பனை வழிமுறைகள் ஆகியவை குறித்து எல்லாம் யோசித்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. உங்கள் குத்தகை காலம் முடிவடைந்த பிறகு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் டீலர்ஷிப்பில் காரை ஒப்படைத்து விட்டு, அடுத்த வேலைகளை பார்க்கலாம்.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் ஒரு சில கார்களை நம்மால் வாங்க முடியாது. அந்த அளவிற்கு விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால் அந்த காரை ஓட்ட வேண்டும் என்பது நம்முடைய கனவாக இருக்கும். அப்படிப்பட்ட கார்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஓட்டுவதற்கு குத்தகை திட்டம்தான் ஏற்றது. சாலையில் மிகவும் விலை உயர்ந்த கார்களை பார்க்கும்போது, இந்த கார்களை எப்படி இவர்களால் வாங்க முடிகிறது? என்ற எண்ணம் தோன்றும்.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அவர்கள் ஏன் சொந்தமாக வாங்கியிருக்க வேண்டும்? குத்தகைக்கு கூட எடுத்திருக்கலாம் அல்லவா? எனவே விலை உயர்ந்த கார்களை ஓட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு குத்தகை திட்டம்தான் ஏற்றது. சரி, இவ்வளவு நன்மைகள் இருக்கும்போது ஏன் அனைவரும் குத்தகை திட்டத்தை தேர்ந்து எடுப்பதில்லை? என்ற உங்களுடைய கேள்வி புரிகிறது. குத்தகை திட்டத்தில் உள்ள ஒரு சில பாதகங்கள்தான் இதற்கு காரணம்.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காரை குத்தகைக்கு எடுப்பதால் ஏற்படும் தீமைகள்!

நீங்கள் ஒரு காரை மிக நீண்ட காலமாக ஓட்டி கொண்டுள்ளீர்கள் என்றால், அதனை உங்கள் ரசனைக்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்ய விரும்புவீர்கள். ஆனால் குத்தகை திட்டத்தில் இதற்கு சாத்தியம் இல்லை. ஏனெனில் அது உங்களுக்கு சொந்தமான கார் கிடையாது. நீங்கள் காரை குத்தகைக்கு எடுத்தால் எரிபொருள் நிரப்பி ஓட்டலாம். அவ்வளவுதான். வேறு எதுவும் செய்ய முடியாது.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் குறிப்பிட்ட கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓட்ட முடியும் என்பது காரை குத்தகைக்கு எடுப்பதில் இருக்கும் மற்றொரு குறைபாடு. குறிப்பிட்ட கிலோ மீட்டர்களை கடந்து விட்டால், குத்தகை காலம் முடியாவிட்டாலும், அதாவது கார் உங்களிடமே இருந்தாலும் நீங்கள் மேற்கொண்டு ஓட்ட முடியாது. உதாரணத்திற்கு நீங்கள் காரை 1 மாதத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளீர்கள் என வைத்து கொள்வோம்.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் 2 ஆயிரம் கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓட்ட முடியும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் உங்களிடம் கூறுகிறது எனவும் வைத்து கொள்வோம். இந்த 2 ஆயிரம் கிலோ மீட்டர்களை நீங்கள் வெறும் 15 நாட்களில் ஓட்டி விட்டால், எஞ்சிய 15 நாட்கள் கார் உங்களிடம் இருந்தாலும் மேற்கொண்டு ஓட்ட முடியாது. மீறி ஓட்டினால், அதற்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

குத்தகை காலம் முடிவடைந்து காரை திரும்ப ஒப்படைக்கும்போது, நீங்கள் பயணம் செய்த ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். நீங்கள் எவ்வளவு கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என்பதெல்லாம், குத்தகை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வரம்பை மீறினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் காரை குத்தகைக்கு எடுத்தால், கார் உரிமையாளர் என்ற அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. இந்தியாவை பொறுத்தவரை கார் வாங்குவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அது ஒரு உற்சாகமான அனுபவம். காரை வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவு. ஆனால் காரை குத்தகைக்கு எடுப்பதன் மூலம் இந்த கனவை நீங்கள் நிறைவேற்றி கொள்ள முடியாது.

காரை சொந்தமாக வாங்குவதற்கு பதில் லீசுக்கு எடுக்கலாம்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஏனெனில் அது கிட்டத்தட்ட வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனம். அதை நீங்கள் ஓட்டி கொண்டுள்ளீர்கள். அவ்வளவுதான். காரை குத்தகைக்கு எடுப்பதில் இருக்கும் சாதக, பாதகங்களை கூறி விட்டோம். இதை நீங்கள் தெளிவாக படித்திருப்பீர்கள் என நம்புகிறோம். காரை சொந்தமாக வாங்குவதா? அல்லது குத்தகைக்கு எடுப்பதா? என்பது முழுக்க முழுக்க உங்கள் தேவைகளை பொறுத்தது. எனவே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Buying vs leasing a car which one you should opt for
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X