அந்த 200 பேருல அம்பானி-யின் பையனும் ஒருவரா! காருல அவர பாத்ததும் எல்லாரும் ஷாக்காயிட்டாங்க! வைரலாகும் வீடியோ!
வெகு சமீபத்தில் சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD) இந்தியாவில் தான் களமிறக்கிய புதுமுக கார் மாடலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துக் கொண்டிருப்பதாகவும், ஒரே நாளில் நாடு முழுவதிலும் 200-க்கும் மேற்பட்ட அந்த கார் மாடலின் யூனிட்டுகளை டெலிவரி வழங்கியதாகவும் அறிவித்து இருந்தது.
சீல் (Seal) எனும் எலெக்ட்ரிக் காரையே அது சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் செடான் ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதற்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. புக்கிங் தொடங்கப்பட்ட வெறும் மூன்று மாதங்களில் 1000 புக்கிங்குகளை அந்த கார் மாடல் குவித்தது குறிப்பிடத்தகுந்தது.

இதெல்லாம் ஒரு புக்கிங் எண்ணிக்கையா... மாருதி சுஸுகி, டாடா உள்ளிட்ட நிறுவனங்களின் கார் மாடல்கள் சில மாசத்து இதைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிக புக்கிங்கைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது என நீங்கள் நினைக்கலாம். பிஒய்டி சீல் ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
இதன் ஆரம்ப விலையே ரூ. 41 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ. 53 லட்சமாகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அதிக விலைக் கொண்ட கார் மாடல் என்பதாலேயே அதற்கு கிடைத்த ஆயிரம் புக்கிங் பெரும் பேசு பொருளாக மாறியது.
மேலும், இதற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரே நாளில் 200 பேருக்கு சீல் கார் மாடல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அம்பானியின் மகன், அணில் அம்பானிகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அது வேறு ஒன்றுமில்லைங்க, சீன நிறுவனம் சமீபத்தில் டெலிவரி தொடங்கியதாக கூறிப்படும் சீல் எலெக்ட்ரிக் காரில் வலம் வரும் வீடியோதான் அது ஆகும்.
இந்த காரை அவர் ஓட்டி வந்ததில் என்ன ஆச்சரியப்படுவதற்கு இருக்கு என நீங்கள் கேட்கலாம். ஏனெனில், முகேஷ் அம்பானியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மிகப் பெரிய ஆடம்பர கார் விரும்பிகளாக இருக்கின்றனர். இந்த குடும்பத்தினரித்தில் மட்டும் சுமார் 200க்கும் அதிகமான சொகுசு மற்றும் ஆடம்பர வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதில் சில அரிய வகை கார் மாடல்களும் அடங்கும். இந்த மாதிரியான சூழலிலேயே அவர் பிஒய்டி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கின்றார். இந்த கார் மாடல் அம்பானியின் குடும்பத்தினரைப் பொருத்த வரை ஏழைகளின் கார் என்று கூறலாம்.
அந்த அளவிற்கு அவர்கள் வைத்திருக்கும் மற்ற கார்கள் அனைத்தும் பல கோடி ரூபாய் விலையைக் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடுகையில், அணில் அம்பானி புதிதாக வாங்கி இருக்கும் கார் ஏழைகளின் கார் என கூறலாம். இதனால்தான் பலரின் ஆச்சரியத்திற்கு காரணமாக அவர் சீல் எலெக்ட்ரிக் காரில் பயணிக்கும் வீடியோ அமைந்திருக்கின்றது.
பிஒய்டி சீல் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3 விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. டைனமிக் (Dynamic), பிரீமியம் (Premium) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் (Performance) ஆகியவையே அவை ஆகும். இதில் டைனமிக் தேர்வு 204 பிஎஸ் பவர், 310 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.
இதில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 510 கிமீ தூரம் பயணிக்க முடியும். 61.4 kWh பேட்டரி பேக்கே இந்த தேர்வில் வழங்கபடுகின்றது. பிரீமியம் தேர்வில் 82.5 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 650 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.
மேலும், 313 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த தேர்வில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பதிலேயே அதிக பவரை வெளியேற்றக் கூடியதாக பெர்ஃபார்மன்ஸ் இருக்கின்றது. இது ஓர் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்ட தேர்வாகும். 530 பிஎஸ் மற்றும் 670 என்எம் டார்க்கை இது வெளியேற்றும்.
82.5 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் ஓர் முழு முழு சார்ஜில் 580 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இந்த எலெக்ட்ரிக் காரில் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹீட்டிங் மற்றும் வெண்டிலேஷன் வசதி கொண்ட பவர்டு முன் பக்க இருக்கை, 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தத. இத்துடன், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியன்ட் லைட் ஆகியவையும் சீல் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 9 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் அடாஸ் அம்சம் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமாதிரியான அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே சீல் எலெக்ட்ரிக் காரை அணில் அம்பானி வாங்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








