செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, சாதாரண டிரைவர் ஒருவர் வழி கண்டுபிடித்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், ஆரம்பத்தில் அந்நாட்டில்தான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சீனாவிற்கு வெளியே தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

ஆனால் சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது நல்ல விஷயம்தான். ஆனால் இத்தாலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில், தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் பல மடங்கு அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் இதற்கு தப்பவில்லை.

செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

உலகில் ஒரு சில நாடுகளை காட்டிலும், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருந்தாலும், இங்கும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால், கர்நாடக மாநிலத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட முதல் பலி என கூறப்படுகிறது.

செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

உலகை அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் அரசுகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தேவையான சிகிச்சை வழங்கப்படுகிறது.

செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் ஏராளமான விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. வீடுகளை விட்டு வெளியே வரவே மக்கள் அச்சம் காட்டுகின்றனர். இந்தியாவில் நிலைமை இன்னும் அந்த அளவிற்கு செல்லவில்லை என்றாலும் கூட, இத்தாலி உள்ளிட்ட ஒரு சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர பயப்படுகின்றனர்.

செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த கேப் டிரைவர் ஒருவர் வித்தியாசமான வழியை கண்டுபிடித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக, பிளாஸ்டிக் கவர் உதவியுடன் அவர் தனது காரில் தனியாக ஒரு கம்பார்ட்மெண்ட்டை ஏற்படுத்தியுள்ளார்.

செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

அவரை சுற்றி பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டு இந்த கம்பார்ட்மெண்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கார் ஓட்டும்போது, பயணிகளிடம் இருந்து அவர் தன்னை முற்றிலும் தனிமைப்படுத்தி கொள்கிறார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு இது உண்மையிலேயே நல்ல ஐடியாதான். phildoeshair என்ற இன்ஸ்டாகிராம் பயனர் கடந்த மார்ச் 10ம் தேதி இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.

செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

உடனடியாக சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவ தொடங்கி விட்டது. இந்த வீடியோவை பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பயனர், லிஃப்ட் நிறுவனத்தின் கேப்பில் பயணம் செய்யும்போது, இந்த காட்சியை கண்டதாக கூறியுள்ளார். மற்றவர்களுக்கும் பயன்படுமே என்ற நல்ல எண்ணத்தில் உடனடியாக அதை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

லிஃப்ட் அல்லது உபேர் நிறுவனங்களுக்காக வேலை செய்யும் டிரைவர்கள் அனைவரும் இந்த டெக்னிக்கை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலமாக அந்த டிரைவர்கள் தங்களையும், மற்றவர்களையும் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

இந்தியாவை பொறுத்தவரை ஓலா நிறுவனம்தான் கேப் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுதவிர உபேர் நிறுவனத்தின் கேப்களும் குறிப்பிடத்தக்க அளவில் இயங்கி வருகின்றன. அத்துடன் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களும் இந்தியாவில் அதிகளவில் இயங்கி வருகின்றன. அவற்றின் டிரைவர்கள் எல்லாம் இந்த டெக்னிக்கை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்.

செம ஐடியா... கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்... என்னனு தெரியுமா?

இதன் மூலமாக கொரோனா வைரஸில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். அத்துடன் பயணிகளையும் பாதுகாக்கலாம். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அமெரிக்க டிரைவரின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தன்னை தனிமைப்படுத்தி கொண்டு வேலை செய்ய சமயோசிதமாக வழி கண்டுபிடித்த அந்த டிரைவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு தெரிந்த கேப், டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள். இதன் மூலம் அவர்களும் பயன்பெறுவார்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cab Driver Makes Compartment In Car To Prevent Coronavirus - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X