பிரசவத்துக்கு இலவசம்லாம் கிடையாது... காரிலேயே குழந்தை பிறந்ததால் எக்கசக்கமாக பில் போட்ட டாக்ஸி நிறுவனம்..
கால்டாக்ஸியில் பெண்ணிற்கு பிரசவம் ஏற்பட்டு குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு வழக்கதை விட மூன்று மடங்கு பில் போடப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை காணலாம்.

தமிழகத்தில் ஆட்டோக்களில் எல்லாம் பிரசவத்திற்கு இலவசம் என எழுதிப்போட்டிருப்பார்கள். பிரசவ வலியில் ஒரு பெண் துடிக்கிறார் என்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் எதையும் பொருட்படுத்தாமல் எப்படியாவது அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இருப்பார்கள். ஆனால் சமீபத்தில் டாக்ஸி ஒன்றில் பெண்ணிற்கு பிரசவம் நடந்துள்ளது. ஆனால் அந்த பெண்ணிடம் அதற்கு அதிகமான பில் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பக்ஸ் நகரில் உள்ள ஹை வைகோம்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஃபரா காகானின்டின், 26 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் வழக்கமாக இவர் இருக்கம் பகுதியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கேப் புக் செய்து அதில் தான் பயணம் செய்வார். இவருக்கு ஏற்கனவே 15 மாத மகன் ஒருவனும் இருக்கிறான் இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இவர் சமீபத்தில் மருத்துவமனைக்கு தனது வழக்கமான செக்கப்பிற்காக செல்ல கேப் ஒன்றை புக் செய்திருந்தார். Vauxhall Vivaro என்ற வாகனம் இவரை அழைத்து செல்ல வந்திருந்தது. இவர் அந்த காரில் ஏறிய உடனேயே இவருக்கு பிரசவ வலி வந்துவிட்டது.இதை பார்த்தும் துடித்து போன அந்த கேப் டிரைவர் உடனடியாக ஃபராவிற்கு உதவும் வகையில் உடனடியாக மருத்துவமனையை தொடர்பு கொண்டு அவர்களை தயாராக இருக்கும் படி தகவல் கொடுத்தார்.

இதனால் ஃபராவிற்கு ஒரளவிற்கு தான் பிரவசத்திற்கு முன்னரே மருத்துவமனைக்கு சென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை வந்தது. ஆனால் கார் கிளம்பிய 5வது நிமிடத்திலேயே இவருக்கு கர்ப்பபையில் தண்ணீர் குடம் உடைந்துவிட்டது. இதை பார்த்து கேப் டிரைவர் பதறி போய் ஃபராவிடம் கேப்பை நிறுத்தலாமா என கேட்க ஃபரா வேண்டாம் முடிந்தளவிற்கு வேகமாக மருத்துவமனைக்கு செல்லுங்கள் என சொல்லியுள்ளார்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவருக்கு பிரசவமாகி அழகிய பெண் குழந்தை பிறந்துவிட்டது. பின்னர் கேப் மருத்துவமனைக்கு சென்றதும் அங்கிருந்த ஊழியர்கள் ஃபராவையும், குழந்தையையும் மீட்டு சிகிச்சை பணிகளை செய்துவிட்டனர். கேப் டிரைவரும் பின்னர் இவரிடம் இதற்கான பணத்தை வசூலித்துக்கொள்ளலாம் என அவரும் சென்றுவிட்டார்.

பின்னர் தான் இவர் கேப் பயணத்திற்காக பில் ஃபராவிற்கு வந்தது. இதற்கு மொத்தம் 90 பவுண்ட் பில் வந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ8500பில் வந்துள்ளது. வழக்கமா இந்த பயணத்திற்கு 30 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் ரூ2800 தான் பில் வர வேண்டும். ஆனால் இவருக்கு மூன்று மடங்கு அதிகமாக வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த பில்லில் 30 பவுண்ட் இவரது பயணத்திற்கான கட்டணமாகவும், மீதம் உள்ள 60 பவுண்ட் இவர் காரை அசுத்தப்படுத்தியதால் அதை சுத்தம் செய்வதற்காக 60 பவுண்ட் என மொத்தம் 90 பவுண்ட் பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கண்டு ஃபரா அதிர்ச்சியடைந்துள்ளார். இது மிக அதிகம் என ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

தற்போது ஃபராவும் அவரது மகளும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர். ஃபரா அவரது மகளுக்கு நையா என பெயரிட்டுள்ளார். தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து குறிப்பிட்ட டாக்ஸி நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications