திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Written By:

2016ம் ஆண்டு பாராளுமன்றத்தில் அனுமதியளிக்கப்பட்ட புதிய மோட்டார் வாகன மசோதாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

மோட்டார் வாகன சட்டம 1989ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது, இதை தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு மேம்படுத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டமாக வரவு செய்யப்பட்டு அமைச்சரவையிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் விரைவில் இந்த சட்ட விதிகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

மக்களைவியில் கடந்த 2016ம் ஆண்டில் புதிய திருத்தங்கள் கொண்ட மோட்டார் வாகன சட்ட மசோதா தாக்கல் செயப்பட்டது. இதில் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டினால் ரூ. 10,000அபாரதம், ஹெல்மெட் இல்லாமல் இருச்சக்கர வாகனத்தை ஓட்டினால் ரூ. 5000 அபராதம் மற்றும் மூன்று மாதங்கள் வரை ஓட்டுநர் உரிமம் முடக்கப்படும் உள்ளிட்ட திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

முன்பிருந்த சட்டவிதிகள் படி மது அருந்திவிட்டு வாகனத்தை ஒட்டினால், ரூ. 2000 மட்டுமே அதிகபட்சமாக அபராதமாக விதிக்க முடியும். தற்போது மேம்படுத்தப்பட்ட சட்ட முன்வரையில் அதிகப்பட்சமாக ரூ. 10,000 வரை அபாரதாம் விதிக்கலாம்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

வாகனத்தை இயங்கும் போது, ஓட்டுநர் கைப்பேசியை பயன்படுத்தினால் முன்பு அபராதத் தொகையாக ரூ. 1000 விதிக்கப்படும், தற்போது அது ரூ. 5000மாக உயர்த்தப்படுகிறது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்வது, காரின் இருக்கைக்கான பெல்டை அணியாமல் ஓட்டுவது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் போவது ஆகியவற்றுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

மேலும் 3 மாதம் வரை ஓட்டுநர் உரிமம் முடக்கப்படும். இதுபோன்ற விதிகள் பொதுமக்களுக்கு மட்டுமின்றி மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

மக்கள் பிரதிநிகள் மற்றும் அரசு ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் இருமடங்காக வசூலிக்கப்படும் வகையில் புதிய மோட்டார் வாகன சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கான விதிகளும் கடுமையாகப்பட்டுள்ளது. குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படுத்தினால், அவை குற்றமாக கருதப்படும். மேலும் அந்த சிறுவர்களின் பெற்றோருக்கும் ரூ. 25,000 அபராதமும் மற்றும் 3 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

விபத்தில் பாதிக்கப்படுவர்களுக்கும், உயிரழப்பவர்களும்மான இழப்பீடு தொகை குறித்த விவரங்களும் புதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவில் உள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

விபத்தால் உயர் இழப்பு ஏற்படுகின்றன குடும்பத்திற்கு, விபத்து நடந்து நான்கு மாதங்களுக்குள் ரூ. 10 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கப்படும். அதேபோல படுகாயம் அடைபவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக தரப்படும். இதற்காக மருத்துவ காப்பீடு துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

முன்னர் மோட்டார் வாகன சட்ட நடைமுறைப்படி விபத்து நடந்து 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

மேலும், அடையாளம் தெரியாத வகையில் விபத்தில் உயிர் இழப்பர்வர்களின் குடும்பத்திற்கு நடைமுறையில் உள்ளதை விட இழப்பீடு தொகை எட்டு மடங்கு கூடுதலாக உயர்த்தப்பட்டுகிறது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

உபேர் , ஓலா போன்ற கால் டாக்சி சேவைகளை அளித்து வரும் நிறுவனங்களும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுகிறது. அந்த நிறுவனங்கள் உரிமம் பெறுவது தொடர்பான நடைமுறையிலிருந்து மீறினால், ரூ. 25,000 முதல் அதிகப்பட்சமாக ரூ. 1,00,000 வரை அபராதம் விதிக்கப்படும்

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

உரிமம் பெறுவதில் முறைகேடுகளை தடுப்பதற்கான வழிமுறைகளையும் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதனால் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் பெறுவது ஆகியவற்றுக்கு ஆதார் எண் இனி கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் எல்லாமே இணையதளம் மூலமே வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

பொதுமக்கள், வாகன பயன்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமின்றி வாகன தயாரிப்பாளர்களுக்கான செயல்பாடுகள் குறித்தும் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களை தயாரிக்கும் தரத்தில் ஏதேனும் குறைப்பாட்டை உருவாக்கியிருந்தால், தயாரிப்பாளர்களுக்கு ரூ. 500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

இவற்றுடன் அவசர கால ஊர்திகளுக்கு மற்ற வாகனங்கள் வழிவிடவில்லை எனில் ரூ. 10000 மற்றும் பேருந்து உட்பட பொது போக்குவரத்து வசதிகளில் பயணசீட்டு இல்லாமல் பயணித்தால் ரூ. 500 அபராதங்களாக வசூலிக்கப்படும் என புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்கள்

போக்குவரத்து விதிமுறை மீறல்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவே, புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையாகப்பட்டுள்ளது. மேலும் அலுவல் பணிசார்ந்த அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டுள்ளது.

விரைவில் அமல்படுத்தப்படவுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தால், நாட்டில் முறைகேடுகள் அகன்று, விபத்துகள் நீங்கி தெளிவான சாலை போக்குவரத்து அமையும் என எதிர்பார்க்கலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Cabinet on Friday approved changes in proposed motor vehicle bill, 2016.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark