11 வருட கடின உழைப்பின் பலன்! விதை விதைச்சாங்க பிஎம்டபிள்யூ காராக அறுவடை செய்றாங்க!
இன்றைய காலத்தில் மக்கள் அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கேற்ப ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் புதியது புதியதாக வந்துக்கொண்டே இருக்கின்றன. மேலும், மக்களை கவர்வதற்காக ஃபிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) போன்றவை அவ்வப்போது எதாவது ஒரு காரணம் காட்டி சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாகவே, சமீப காலமாக அதிகமாக துணி கடை வியாபாரங்கள் துவங்கப்படுவது இல்லை. நீண்ட வருட அனுபவமிக்க சில கம்பெனிகள் மட்டுமே இன்னமும் நிலைத்து நின்று ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றன.
அத்தகைய துணி கடைகளுள் ஒன்றுதான், கோழிக்கோடு டெக்ஸ்டைல்ஸ் (Calicut Textiles) ஆகும். இப்படி ஒரு பெயரில் எந்த துணி கடையையும் கேள்விப்பட்டது இல்லையே...? என நீங்கள் கேட்பது புரிகிறது. பெயரை பார்த்ததுமே தெரிந்திருக்கும், இது கேரளாவில் செயல்படும் துணி கடை ஆகும்.

நம்ம ஊரில் போத்தீஸ், சென்னை சில்க்ஸை போன்று கேரளாவில் பிரபலமான துணி கடையாக கோழிக்கோடு சில்க்ஸ் விளங்குகிறது. எந்த அளவிற்கு பிரபலமானது என்றால், கோழிக்கோடு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் புதியதாக விலையுயர்ந்த பிராண்ட்-நியூ பிஎம்டபிள்யூ கார் (BMW Car) ஒன்றை வாங்கியுள்ளனர். இதற்கு காரை விற்ற சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில், "லீகசி மீட்ஸ் லக்சரி" என குறிப்பிட்டுள்ளது.
மேலும், கோழிக்கோடு டெக்ஸ்டைல்ஸின் உரிமையாளர்கள் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5-சீரிஸ் (5-Series) காரின் 530 எல்.ஐ எம் ஸ்போர்ட் (530Li M Sport) வேரியண்ட்டை வாங்கியிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூம் தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 11 வருடங்களாக செயல்பட்டுவரும் கோழிக்கோடு டெக்ஸ்டைல்ஸின் உரிமையாளர்களாக அதுவதில் மேளா ஜீஷ் மற்றும் படிபோயில் ரஜனி என்கிற இருவர் உள்ளனர்.

இந்த இருவரது குடும்பத்தினர் தான் கோழிக்கோடு டெக்ஸ்டைல்ஸில் அதிகமாக முதலீடு செய்து பார்ட்னர்களாக உள்ளனர். இதனாலேயே, அதுவதில் மேளா ஜீஷ் மற்றும் படிபோயில் ரஜனி இருவரும் தங்களது குடும்பத்துடன் ஷோரூமுக்கு வந்து தங்களது பிராண்ட்-நியூ பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரை டெலிவிரி பெற்றுள்ளனர். இருவரது குடும்பத்தையும் தனித்தனியாக பார்ப்பதற்கு ஏதுவாக இரு குடும்பத்தினரும் வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடைகளில் ஷோரூமுக்கு வந்துள்ளனர்.
இவர்கள் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார் ஆனது பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் உள்ளது. வழக்கமாக மற்றவர்களை போலவே, கோழிக்கோடு டெக்ஸ்டைல்ஸ் குடும்பத்தினரும் ஷோரூமில் கேக் வெட்டி, குளிர்பானங்களை அருந்தி மகிழ்ச்சியுடன் காரை டெலிவிரி பெற்றுள்ளனர். 5-சீரிஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லக்சரி செடான் ரக கார் ஆகும்.

முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக இடைவெளியை கொண்ட லாங்-வீல்பேஸ் காரான பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் இந்தியாவில் '530 எல்.ஐ ஸ்போர்ட்' (530Li Sport) என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இது, அலுமினியம் சாட்டினேட்டட் மற்றும் டைட்டானியம் வெண்கலம் என 2 விதமான ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், கோழிக்கோடு டெக்ஸ்டைல்ஸின் ஓனர்கள் அலுமினியம் சாட்டினேட்டட் ஆப்ஷனில் இந்த காரை வாங்கி உள்ளனர்.
ஏனெனில், அது மட்டுமே வெள்ளை நிற பெயிண்ட் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த இரு ஆப்ஷன்களிலும் 5-சீரிஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஒன்றே ஆகும்; ரூ.72 லட்சத்து 90 ஆயிரம். இந்த பிஎம்டபிள்யூ கார் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரில் பொருத்தப்படும் 2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 256 பிஎச்பி மற்றும் 400 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை நிச்சயமாக ரூ.1 கோடி அருகே வந்துவிடும். 11 வருடங்களாக துணி வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும், இவ்வளவு அதிக விலையில் ஒரு லக்சரி காரை வாங்குவது என்பது அவர்களுக்கு மறக்க முடியாத தருணம் ஆகும். காரை டெலிவிரி பெறும்போது அதனை அவர்கள் ஒவ்வொருவரது முகத்திலும் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications









