2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

2,500 கிலோ எடை கொண்ட காரை, வெறும் 150 சிசி யமஹா பைக் இழுக்குமா? இழுக்காதா? என உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியானால் இந்த வீடியோவை பாருங்கள்.

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த மாடல்களில் ஒன்றான யமஹா ஆர்15 வி2 (Yamaha R15 V2) பைக், கடந்த 2013ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 149.8 சிசி, லிக்யூட்-கூல்டு, 4-ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 17 பிஎஸ் பவரையும், 15 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் கூடியது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே யமஹா ஆர்15 வி2 ''ஹிட்'' அடித்தது.

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

ஆனால் பின்னால் அமர்ந்து செல்பவரின் தலை மேகத்தை இடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் அதன்பின் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட யமஹா ஆர்15 வி3 பைக்கில் அது மாற்றப்பட்டு விட்டது.

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

சரி, யமஹா ஆர்15 வி2 பைக்கிற்கு வருவோம். யூ-டியூப்பரான MR. INDIAN HACKER யமஹா ஆர்15 வி2 பைக்கை ஒரு சோதனை உட்படுத்த முடிவு செய்தார். யமஹா ஆர்15 வி2 பைக் மூலம் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை கயிறு கட்டி இழுப்பதுதான் அந்த சோதனை.

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

யமஹா ஆர்15 வி2 வெறும் 150 சிசி பைக்தான் என்றாலும் கூட, மஹிந்திரா ஸ்கார்பியோ காரை இழுக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்ததுதான். ஆனால் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை அது இழுக்குமா? இழுக்காதா? என்பதை சோதனை செய்து பார்க்காமல் சொல்ல முடியாது அல்லவா?

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் எடை சுமார் 2,510 கிலோ. இது எஸ்யூவி ரக கார் ஆகும். மறுபக்கம் ஆர்15 வி2 பைக்கின் எடை 136 கிலோ மட்டுமே. என்றாலும் கூட அது சுறுசுறுப்பான பைக்தான். எனவேதான் இந்த பைக் மூலம் ஸ்கார்பியோ காரை இழுத்து பார்ப்பது என்ற துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டது.

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

இதன்படி மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் டோ ஹூக்கில் (Tow Hook) கயிறு கட்டப்பட்டு, அந்த கயிறு யமஹா ஆர்15 வி2 பைக்கில் இணைக்கப்பட்டது. மஹிந்திரா ஸ்கார்பியோ காரை இழுப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்தவுடன், ரைடர் யமஹா ஆர்15 வி2 பைக்கில் வந்து அமர்ந்தார்.

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

அவர் கிளட்டை மெதுவாக ரிலீஸ் செய்ய, பைக் முன்னோக்கி நகர்ந்தது. ஆச்சரியம் அளிக்கும் விதமாக மஹிந்திரா ஸ்கார்பியோ காரும், யமஹா ஆர்15 வி2 பைக்கின் பாதையிலேயே பயணித்தது. ஆர்15 வி2 ரைடர், பைக்கை நிலையான வேகத்தில் ஓட்டி சென்றார்.

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

இதன்மூலம் குறிப்பிடத்தக்க தூரத்திற்கு மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இழுத்து செல்லப்பட்டது. முதல் ரவுண்டில், மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் முன் பகுதியில் இருந்து கயிறு கட்டி இழுக்கப்பட்டது. இரண்டாவது ரவுண்டில் பின் பகுதியில் இருந்து கயிறு கட்டி இழுத்து சோதிக்கப்பட்டது.

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

150 சிசி இன்ஜின் கொண்ட பைக்தான் என்றாலும் கூட, சுமார் 2.5 டன் எடை (2,500 கிலோ) கொண்ட மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரை யமஹா ஆர்15 வி2 இம்முறையும் எளிதாக இழுத்து சென்றது. சோதனை செய்யப்பட்ட வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வழங்கும் மோட்டார்சைக்கிள்களை தயாரித்து வருகிறது. யமஹா நிறுவனத்தின் குறைவான சிசி திறன் கொண்ட இன்ஜின்கள் கூட, நல்ல பெர்ஃபார்மென்ஸை கொடுக்கின்றன.

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

அதனால்தான் பெர்ஃபார்மென்ஸை விரும்புவர்கள் மத்தியில் யமஹா முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. யமஹா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த மார்ச் மாதம் எம்டி-15 பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

2,500 கிலோ காரை சாதாரண யமஹா பைக் இழுக்குமா? இந்த வீடியோ பார்த்தால் உங்கள் கண்களை நம்ப மாட்டீர்கள்

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட யமஹா எம்டி-15 பைக், அதிகப்படியான விலை காரணமாக ஆரம்பத்தில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இருந்தபோதும் தற்போது அந்த தடைகளை கடந்து ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Can a 150cc Yamaha R15 V2 Pull a 2.5 Tonnes Mahindra Scorpio SUV? Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X