ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்கு உள்ளே போய்ட்டு வந்தவர் சொன்ன விஷயம்! உண்மையை ஒரே அடியா போட்டு ஒடச்சுட்டாரு!

ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் கார்களை சாலையில் பார்ப்பது என்பதெல்லாம் மிகவும் அரிதான ஒரு விஷயம். உண்மையை சொல்வதென்றால், நம்மில் பலரும் வாழ்க்கையில் இன்னும் ஒரு முறை கூட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை நேரில் பார்த்திருக்க மாட்டோம். ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அவ்வளவு அபூர்வமானவை.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஷோரூம்களும் கூட அப்படிப்பட்டவைதான். மாருதி (Maruti), ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா (Tata) போன்ற நிறுவனங்களின் ஷோரூம்கள் வீதிக்கு வீதி முளைத்து கொண்டிருக்கும் நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு ஷோரூம்கள் இருக்கிறதா? என்பதே பலருக்கும் சந்தேகமாக உள்ளது.

Rolls Royce Cars

அத்துடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஷோரூம்களுக்குள் சாதாரண மனிதர்களை அனுமதிப்பார்களா? என்ற சந்தேகமும் பலர் மத்தியில் காணப்படுகிறது. உங்களின் இந்த சந்தேகங்களை எல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு உள்ளது. முதல் சந்தேகத்தை முதலில் நிவர்த்தி செய்து விடுகிறோம்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கும் ஷோரூம்கள் இருக்கின்றன. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவில் சென்னை, ஐதராபாத் மற்றும் புது டெல்லி போன்ற நகரங்களில், அந்நிறுவனத்திற்கு ஷோரூம்கள் உள்ளன. சரி, முக்கியமான 2வது சந்தேகத்திற்கு வருவோம். சாமானிய மனிதர்களாலும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம்களுக்கு உறுதியாக செல்ல முடியும்.

Cars In Rolls Royce Showroom

Quora தளத்தில், ஆதிஷ் பச்சேச் என்பவர் எழுதியிருப்பது பின்வருமாறு: மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம்களுக்கு சென்றுள்ளேன். இத்தனைக்கும் நான் முன்கூட்டியே அப்பாயிண்மெண்ட் கூட வாங்கவில்லை. இருப்பினும் அவர்கள் எனக்கு காரை மகிழ்ச்சியாக காட்டினார்கள் (ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் அப்போது டிஸ்ப்ளேவில் இருந்தது).

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக வாங்குவதற்கான அளவுகோல்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வதில் எனக்கு இருந்த ஆர்வமே நான் அங்கு செல்ல காரணம் (ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும், காரை ஒப்படைப்பதற்கு முன்பு உங்களின் பின்புலத்தை ரோல்ஸ் ராய்ஸ் ஆராயும், பணம் இருந்தால் மட்டும் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி விட முடியாது என்ற புரளிகள் உலாவி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது).

ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்குவதற்கு தேவைப்படுவது பணம் மட்டுமே எனவும், பின்புலத்தை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பரிசோதிக்கும் என்பது உள்பட நீங்கள் கேட்ட அத்தனையும் கட்டுக்கதைகள் என அங்கிருந்தவர் என்னிடம் சொன்னார். இவ்வாறு ஆதிஷ் பச்சேச் எழுதியுள்ளார். எனவே சாதாரண மனிதர்களும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம்களுக்கு செல்லலாம்.

அத்துடன் பணம் இருந்தால், நீங்களும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கலாம். ஆனால் கோடீஸ்வரர்களால் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெய்த் (Rolls Royce Wraith) கார்தான், இந்தியாவில் மிகவும் விலை (Price) குறைவான ரோல்ஸ் ராய்ஸ் ஆகும். ஆனால் அதன் ஆரம்ப விலையே 6.22 கோடி ரூபாயாக உள்ளது!

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை பற்றி இணையதளங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் உலா வரும் கட்டுக்கதைகளை யாரும் கண் மூடித்தனமாக அப்படியே நம்பி விட வேண்டாம். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அது உண்மையா? அல்லது பொய்யா? என அலசி ஆராய்வது நல்லது.

Article Published On: Wednesday, May 3, 2023, 17:26 [IST]
English summary
Can common man visit rolls royce car showroom know all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+