கார்களில் அதிகம் பயணிப்பவரா நீங்க... கேன்சர் வர அதிகம் வாய்ப்பு இருக்காம்! சொன்னது யாரு தெரியுமா?
நீரின்றி அமையாது உலகு என்பதைப் போல, கார் இன்றி அமையாது வாழ்க்கை என கூறும் அளவிற்கு கார்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் ஒன்றிணைந்துவிட்டது. நம்மில் பலர் ஆட்டோ, பஸ் மற்றும் டிரெயின் உள்ளிட்டவற்றில் பயணிப்பதைக் காட்டிலும் மிக அதிகளவில் கார்களிலேயே பயணித்தி வருகின்றோம்.
இந்த மாதிரியான சூழலிலேயே கார்களில் நீண்ட நேரம் செலவழிப்போருக்கு கேன்சர் வர வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. வாஷிங்டன்னைச் சேர்ந்த அறிவியல் இதழைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கேன்சர் நோயை உருவாக்கும் கார்சினோஜென்ஸ் (Carcinogens) அதிகளவில் தனிப்பட்ட கார்களில் இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.

வாகனங்களின் இருக்கை மெத்தைகள் மற்றும் திணிப்புகளில் தீயை தவிர்க்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் ஓர் வேதி பொருளே கார்களில் அதிக கார்சினோஜென்ஸ் உருவாக காரணமாக இருப்பதாக இந்த புதிய ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன. ஆர்கனோ பாஸ்பேட் எஸ்டர்ஸே (organophosphate esters) தீயை தவிர்க்கும் பொருட்டு கார்களின் இருக்கைகள் மற்றும் திணிப்பான்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஆர்கனோ பாஸ்பேட் எஸ்டர்ஸ் உருவாக்கத்தில் டிசிஐபிபி (TCIPP) எனும் கெமிக்கல் மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த கெமிக்கல்தான் கேன்சர் உருவாக்கத்தின் மிக மிக முக்கியமான காரணி என கூறப்படுகின்றது. இந்த டிசிஐபிபி ஓர் மிகவும் நச்சுத் தன்மைக் கொண்ட ரசாயனம் என்பதால் அமெரிக்க தேசிய நச்சுயியல் திட்டத்தின் விசாரணையில் அந்த ரசாயனம் தற்போது இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய ஓர் ரசாயனத்தையே அதிகளவில் தீயை தவிர்ப்பதற்காக கார்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தி வருக்கின்றது. இந்த ரசாயனம் மட்டுமல்ல தீயை தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் டிடிசிஐபிபி (TDCIPP) மற்றும் டிசிஇபி (TCEP) ஆகியவற்றிலும் கேன்சர் நோயை உருவாக்கும் தன்மை மிக அதிகளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இதை தவிர்க்க சில வழிகளை பிரபல மருத்துவர் கூறி இருக்கின்றார். முழமையாக அடைக்கப்பட்ட நிலையில் கார்களில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதே முக்கிய அறிவுறுத்தலாக இருக்கின்றது. இதுதவிர, கார்களில் பயணிக்கும்போது எப்போதும் அதில் காற்றோட்டம் அதிகளவில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.
இதுதவிர, கார்களின் உருவாக்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் மிக அதிகளவில் அரசு சார்பில் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை தவிர்க்கும் பொருட்டு கார்களில் கார்சினோஜென்களின் வெளிப்பாடு அதிகரித்து நுரையீரல் புற்று நோய், சிறுநீர்ப்பை புற்று நோய் மற்றும் மீசோதெலியோமா போன்ற வியாதிகளின் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்றும் அவர் எச்சரித்திருக்கின்றார்.
இதுதவிர, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்னை மற்றும் இருதய நோய்களைக் கூட அதிக கார்சினோஜென்களின் வெளிப்பாடு ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, புதிய கார்களிலேயே இந்த ரிஸ்க் மிகவும் அதிகம் இருக்கின்றது என்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. எனவே காரில் காற்றோட்டம் இன்றி பயணிப்பதை தவிர்ப்பதே அனைவருக்கும் நல்லது என்பது தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய வாகனங்களை வாங்கும்போது நாம் பல்வேறு விஷயங்களைக் கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். அதில் ஒன்றாகவே தற்போது இந்த தகவல் அமைந்திருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி சந்தையில் அதிகளவில் சுற்றுச் சூழலுக்கு உகந்த மற்றும் காற்றை மாசை குறைவாக ஏற்படுத்தக் கூடிய வாகனங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதனால் இதுபோன்ற மிகப் பெரிய ரிஸ்க்குகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








