2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா?

பஜாஜ் டோமினார் 400 பைக் மூலம் டிராக்டரை இழுக்கும் ஸ்டண்ட்டில் ஒருவர் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

By Arun

பஜாஜ் டோமினார் 400 பைக் மூலம் டிராக்டரை இழுக்கும் ஸ்டண்ட்டில் ஒருவர் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. 2,300 கிலோ எடை கொண்ட அந்த டிராக்டரை, டோமினார் 400 பைக் இழுத்து சென்றதா? என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா?

கயிறு கட்டி டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை இழுப்பது போன்ற மசில் பவரை வெளிப்படுத்தும் ஸ்டண்ட்களில் ராயல் என்பீல்டு பைக்குகளை ஈடுபடுத்துவதே பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள பஜாஜ் டோமினார் 400 பைக்கின் உரிமையாளர்கள் சிலரும் கூட அத்தகைய ஸ்டண்ட்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா?

இந்த வகையில் பஜாஜ் டோமினார் 400 பைக்கில் கயிறு கட்டி, டிராக்டரை இழுக்கும் ஸ்டண்ட்டில், அதன் உரிமையாளர் ஒருவர் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதற்காக அவர் முதலில் டிராக்டரில் கயிறை கட்டி கொண்டுள்ளார். பின்னர் அந்த கயிறு பஜாஜ் டோமினார் 400 பைக்கில் இணைக்கப்பட்டது.

2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா?

ஸ்டண்ட்டில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டரில் டிராலியும் பொருத்தப்பட்டிருந்தது. இதனால் டிராக்டரின் எடை ஒட்டுமொத்தமாக 2,500 கிலோ இருக்கலாம் என தெரிகிறது. இது ஒரு முழு அளவு எஸ்யூவி காரின் எடைக்கு சமமானது.

2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா?

பின்னர் பஜாஜ் டோமினார் 400 பைக்கில், அதன் உரிமையாளர் அமர்ந்து கொண்டு, பைக்கை இயக்க தொடங்குகிறார். இதன்பின்பு அந்த டிராக்டரை, பஜாஜ் டோமினார் 400 பைக் மெல்ல மெல்ல இழுத்து கொண்டு சிறிது தூரம் செல்கிறது.

2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா?

இதனிடையே அந்த டிராக்டரின் டிரைவரும் இந்த ஸ்டண்ட்டில் கலந்து கொள்கிறார். அதாவது டிராக்டர் நேர் திசையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக, ஸ்டியரிங்கை கண்ட்ரோல் செய்யும் பணியில் மட்டும் அவர் ஈடுபடுகிறார். டிராக்டரின் இன்ஜின் ஆன் செய்யப்படவில்லை. டிரைவர் அமர்ந்திருந்தாலும் கூட, அவருடன் சேர்த்து டிராக்டரையும், பஜாஜ் டோமினார் 400 பைக் இழுத்து செல்கிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

மிகப்பெரிய எடையுடைய பொருட்களை இதுபோன்று இழுக்கும் ஸ்டண்ட்களில் எஸ்யூவி கார்களையும் கூட ஈடுபடுத்துவார்கள். அத்தகைய எஸ்யூவி கார்கள், தங்கள் முழு பலத்தை காட்ட, விமானம், ரயில்களை இழுத்த வரலாறுகளும் உண்டு.

2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா?

டார்க் பவர் சிறப்பாக இருந்தால் எத்தகைய எடையுடைய பொருட்களையும் இழுக்க முடியும் என்பதற்கு பஜாஜ் டோமினார் 400 பைக் ஒரு சான்றாக உள்ளது. பஜாஜ் டோமினார் 400 பைக்கில், 373 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8,000 ஆர்பிஎம்மில் 35 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 35 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா?

முன்னதாக ஸ்டண்டில் ஈடுபட்ட பஜாஜ் டோமினார் 400 பைக்கின் உரிமையாளர், ஒட்டுமொத்த ஸ்டண்ட் முழுவதும், தான் 2,500 ஆர்பிஎம்முக்கு மேல் பைக்கை செலுத்தவே இல்லை என சொல்கிறார். அதாவது பஜாஜ் டோமினார் 400 பைக், 2,500 ஆர்பிஎம்மை கடக்கவே இல்லை. அதிகபட்ச டார்க் திறனை வெளிப்படுத்துவதற்கு முன்னதாகவே, டிராக்டரை அந்த பைக் இழுத்து விட்டது என்பதே இதற்கு பொருள்.

2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா?

இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் தரமான பைக்குகளில் ஒன்றாக பஜாஜ் டோமினார் 400 பைக் விளங்குகிறது. இந்த பைக்கில் ஸ்டேண்டர்டு ஸ்லிப்பர் கிளட்ச், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெய்ல் லேம்ப்ஸ் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா?

டோமினார் 400 பைக்குடன் ஆப்ஷனலாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியையும் பஜாஜ் நிறுவனம் வழங்குகிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ள பைக்குகளே பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன. ஆனால் பஜாஜ் டோமினார் 400 பைக்கின் போட்டியாளரான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எந்த பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா?

ஆனால் ராயல் என்பீல்டு பைக்குகளில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவில் விற்பனையாகும் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகளில் ஏபிஎஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்தியாவிலும் அத்தகைய வசதி கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: Indian Stuff

Article Published On: Tuesday, June 5, 2018, 8:30 [IST]
English summary
Can the Bajaj Dominar 400 pull a 2,300 KG heavy tractor: Video. read in tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+