ரயிலை மிஸ் பண்ணிட்டீங்களா?.. அதே டிக்கெட்டை வச்சு வேறொரு ரயில்ல பயணிக்கலாமா?

நாம் ரிசவர்வ் செய்த ரயிலை தவறவிடும்பட்சத்தில், அந்த ரயிலுக்கான டிக்கெட்டைக் கொண்டு வேறொரு ரயிலில் பயணிக்க முடியுமா? என்கிற கேள்வி பலருக்கு எழும்பி இருக்கும். இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

உரிய நேரத்தில் ரயில் நிலையத்திற்கு செல்லவில்லை என்றால் நாம் பிடிக்க வேண்டிய ரயிலை தவறவிட நேரிடலாம். எனவேதான் ஒரு சிலர் தங்களுடைய பயண நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ரயில் நிலையத்திற்கு வந்துவிடுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் பயணத்தை மேற்கொள்பவர்கள் சீக்கிரமே ரயில் நிலையத்திற்கு வந்தடைந்து விடுகின்றனர். சில நேரங்களில் என்னதான் முன்கூட்டியே புறப்பட்டாலும் ரயிலை தவற விடும் சூழல் உருவாகி விடுகின்றது.

ரயில் டிக்கெட்

விதி வலியது

குறிப்பாக, போக்குவரத்து நெரிசல், திடீர் வாகன விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதி வழியிலேயே சிக்கிக் கொள்ள நேரிடுகின்றது. இந்த மாதிரியான சூழல் தானாகவே ரயிலை தவறவிட செய்துவிடுகின்றது. இதனால், நாம் பல நாட்களுக்கு முன்னதாகவே பிளான் போட்டு எடுத்து வைத்த பயண டிக்கெட் வீணாகிவிடுகின்றது. இவ்வாறு ஆகும்போது தவறவிட்ட அந்த ரயிலின் டிக்கெட்டைக் கொண்டு வேறு ரயிலில் பயணிக்க முடியுமா? என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.

இந்த கிளாஸ் டிக்கெட் இருந்தா எந்த ரயிலில் வேண்டுமானாலும் பயணிக்கலாம்

இப்போதைய நிலவரப்படி இதற்கான எந்த வழிகளையும் இந்தியன் ரயில்வேஸ் உருவாக்கவில்லை. அதேவேளையில், நீங்கள் ரிசர்வ் அல்லாத டிக்கெட்டை வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் உங்களால் எந்த ரயிலில் வேண்டுமானாலும் ஏறி பயணிக்க முடியும். ஆனால், அந்த ரயில் நீங்கள் டிக்கெட் அந்த இடத்திற்கு அது பயணிக்க வேண்டும். பல்வேறு சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலேயே தவறவிட்ட ரயில் டிக்கெட்டை வைத்துக் கொண்டு வேறு ஒரு ரயில் பயணிப்பதற்கான வழிகளை ரயில்வேத்துறை உருவாக்கவில்லை.

ரயில் டிக்கெட்

ஏன் பயன்படுத்த முடியவில்லை

குறிப்பாக, நாம் பயணிக்க விரும்பும் வேறு ஒரு ரயிலில் உறுதி செய்யப்பட்ட இருக்கைக் கிடைப்பது கேள்விக் குறியே. இதுமட்டுமில்லைங்க, தவறவிடப்பட்ட ரயில் செல்லும் அதே இடத்திற்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே வேறு ஒரு ரயில் போகுமா என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது. இதுபோன்ற சூழலினாலேயே தவறவிட்ட ரயில் டிக்கெட்டை வேறொரு ரயிலுக்கு பயன்படுத்த முடியாத நிலை தென்படுகின்றது.

ஒருவேளை அதே டிக்கெட்டை வச்சு பயணிச்சா என்ன செய்வாங்க?

ஒரு வேளை நீங்கள் தவறிவிட்ட ரயிலின் டிக்கெட்டைக் கொண்டு வேறொரு ரயிலில் பயணித்தீர்கள் என்றால், டிக்கெட் இல்லாத நபராகவே கருதப்பட்டு, உங்களுக்கு அபராதம் வழங்க நேரிடும். இதுமட்டுமில்லைங்க, ரயில்வே சட்டத்தின்கீழ் வேறு சில நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில், அந்த டிக்கெட்டை நம்மால் கேன்சல் செய்வதும் கடினமே. ரயிலுக்கான அட்டவணை தயார் செய்துவிட்ட பின்னர் டிக்கெட்டை கேன்சல் செய்தால் பணம் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை.

ரயில் டிக்கெட்

வேற வழி இருக்கா?

அதேவேளையில், நீங்கள் டிடிஆர்-இல் இதுகுறித்து பதிவிடலாம். உங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் அதை டிடிஆரில் சமர்பிக்க வேண்டும். ரயிலை நீங்கள் தவறவிட்டதற்கான காரணம் உரியதாக இருந்தால், அந்த டிக்கெட்டுக்கான தொகை திரும்பி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கட்டாயம் அந்த நேரத்தில் நீங்கள் பயணித்த வேண்டும் வேறு ரயிலுக்கு டிக்கெட்டை புக் செய்வது அல்லது அன்-ரிசர்வ்டு டிக்கெட்டை எடுத்து பொது கம்பார்ட்மென்டில் பயணிப்பதைத் தவிற வேறு வழியே இல்லை.

வேறொரு தேதிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி

இந்த விஷயத்தில் இன்னும் பயணிகளுக்கு சாதகமான சூழலை இந்தியன் ரயில்வேஸ் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றாலும், மற்ற வழிகளில் பயணத்தை சுலபமாக்கும் வழிகளை ரயில்வேத்துறை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், சமீபத்தில் புக்கிங் செய்த டிக்கெட்டில் புக் செய்த தேதியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அந்த டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் வேறு ஒரு தேதிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

பயண நீட்டிப்பு திட்டம்

இந்த திட்டத்தை மட்டுமில்லைங்க, இதேபோல், புக் செய்த ஸ்டேஷனைத் தாண்டி இறங்குவதற்கான பயண நீட்டிப்பு திட்டத்தையும் (Ticket Extend Service) இந்தியன் ரயில்வேஸ் அண்மையில் அறிமுகப்படுத்தியது. டிடிஇ-யை அணுகினாலே இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும். அதேவேளையில், இது இலவச சேவை அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆம், இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்துள்ளது. பாயிண்ட்-டூ-பாயிண்ட் திட்டத்தின் அடிப்படையில் இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Can travel same ticket of missed train
Story first published: Wednesday, January 18, 2023, 19:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X