இவி காரை கரெண்ட் செலவே இல்லாம சார்ஜ் போட இப்படி ஒரு வழி இருக்குதா?
இந்தியாவில் இவி பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜ் போட்டு பயணித்தால் பெட்ரோல் செலவை விட செலவு குறைவாக இருக்கும் என கருதுகின்றனர். ஆனால் ஒரு படி மேலே சென்று நீங்கள் வீட்டின் மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைத்துவிட்டால் அந்த செலவையும் இல்லாமல் செய்யலாம் என உங்களுக்கு தெரியுமா?
இன்று எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பலர் சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஏற்ற முடியுமா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஏற்றலாம். இப்படியாக சார்ஜ் ஏற்றினால் லாபமா அல்லது வீட்டில் உள்ள கரெண்டை பயன்படுத்தினால் லாபமா என நாம் இங்கே உத்தேசமாக கணக்கிட்டு பார்ப்போம்.

வீட்டின் மொட்டை மாடியில் ஆன் கிரிட் சோலர் பவர் மூலம் தான் பெரும்பாலான வீடுகளில் சோலார் பேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வீட்டின் மாடியில் பொருத்தப்பட்டு அதன் நேரடியாக வீட்டின் மின்வாரிய மீட்டரில் இணைக்கப்படும். இதை நீங்கள் வீட்டில் உள்ள உபயோகத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்படியாக ஆன் கிரிட் மூலம் நீங்கள் 3 கிலோ வாட் கொண்ட ஒரு சோலார் பேனல் அமைத்தால் சோலார் அதற்கு சுமார் ரூ2 லட்சம் செலவாகும். ஆனால் இப்படியாக சோலார் பேனல் அமைக்க தமிழகத்தில் மானியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு பிரதம மந்திரி சூர்ய கர் முஃப்த் பிஜிலி யோஜனா என்ற பெயரில் இந்த மானியத்தை வழங்குகி வருகிறது அதன்படி 1 கிலோ வாட்டிற்கு ரூ30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ60,000 மற்றும் 3 கிலோ வாட்டிற்கு ரூ78,000, மானியமாக வழங்கப்படும்.

அப்படி பார்த்தால் ரூ2 லட்சத்தில் ரூ78,000 ஆயிரம் மானியம் போக உங்களுக்கு செலவு ரூ1.22 லட்சம் தான் செலவாகும். இதை செய்தால் நீஉங்கள் வீட்டிற்கும் நீங்கள் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் காருக்கும் சார்ஜ் போட்டுக்கொள்ள முடியும். சரி வீட்டில் சார்ஜ் போடுவதற்கும் சோலர் பேனல் அமைத்து சார்ஜ் போடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை காணலாம்.
நீங்கள் 40 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட ஒரு சார்ஜை வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் 3 கிலோ வாட் சோலார் பேனலை பயன்படுத்தி காரை முழுமையாக சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஏற்ற விரும்பினால் நீங்கள் 12-13 மணி நேரம் சார்ஜ் ஏற்ற வேண்டியது வரும். அப்பொழுது தான் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏறும்.
இதுவே நீங்கள் மின்வாரிய கரெண்ட் மூலம் சார்ஜ் ஏற்றினால் உங்களுக்கு 40யூனிட் மின்சாரம் தேவைப்படும். ஒர யூனிட்டிற்கு அதிகபட்சமாக ரூ10 என கணக்கிட்டால் ஒரு முறை சார்ஜ் ஏற்ற ரூ400 செலவாகும். அப்படி கணக்கிட்டால் நீங்கள் சோலார் பேனல் அமைக்கும் கட்டணத்தை ஈடு செய்ய 305 முறை சார்ஜ் ஏற்ற வேண்டும்.
40 கிவாட் ஹவர் பேட்டரி கொண்ட கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ குறைந்த பட்சம் கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். நீங்கள் சோலார் பேனல் அமைப்பதற்காக செய்த செலவை ஈடு செய்ய நீங்கள் 76 ஆயிரம் கி.மீ வாகனத்தை இயக்க வேண்டும் அதன் பிறகு தான் லாபத்தை பார்க்க முடியும். ஆனால் இதில் அடுத்த லபாம் என்னவென்றால் வீட்டில் வாகனத்தில் சார்ஜ் ஏற்றாத நேரம் வீட்டு பயன்பாட்டிற்காக இந்த மின்சாரத்தை பயன்படுத்தி கரெண்ட் செலவை மிச்சம் செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் அதிக அளவில் வாகனங்களை பயன்படுத்துகிறீர்கள்? அல்லது தினந்தோறும் நீண்ட தூரம் பயணிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால் உங்கள் வாகனத்தை சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஏற்றினால் அதிக லாபம் பெற முடியும். அரசு இதற்காக மானியம் வழங்குவது நமக்கு பெரிய அளவில் லாபத்தை ஈட்டி தரும்.


Click it and Unblock the Notifications








