துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

ஹெல்மெட்டைப் போல் பாதுகாப்பு வழங்கக் கூடிய தலைப்பாகையை பிரபல வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பளிப்பதில் ஹெல்மெட் முக்கிய பங்களிக்கின்றது. எனவேதான் உலக நாடுகள் பல இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசத்தை அணிய வேண்டும் என கூறுகின்றன. இந்தியாவிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அவர்களுடன் சேர்ந்து பயணிப்பவரும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்ற விதி நடைமுறைப்படுத்தியிருக்கின்றது.

துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

இந்த நிலையில், தலைக்கவசத்திற்கு இணையான திறன் கொண்ட தலைப் பாகை (Turban) ஒன்றை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா நாட்டை சேர்ந்த ஸ்பார்க் இன்னோவேசன்ஸ் எனும் நிறுவனமே இந்த தலைப் பாகையை உருவாக்கிய நிறுவனம் ஆகும்.

துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

கனடா நாட்டில் கணிசமான அளவில் சிங்குகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென பிரத்யேகமாக சிக் மோட்டார்சைக்கிள் எனும் கிளப் அந்நாட்டில் செயல்பட்டு வருகின்றது. இந்த கிளப்புடன் இணைந்தே அதிக உறுதியான தலைப்பாகையை ஸ்பார்க் இன்னோவேசன்ஸ் உருவாக்கியிருக்கின்றது.

துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

சிங்குகள் டர்பனுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆவார். எனவேதான் இந்தியாவில் ஒரு சில மாநில அரசுகள் இவர்களுக்கு மட்டும் தலைக் கவசம் அணிவதில் விளக்களித்திருக்கின்றது. டர்பன்கள், தலைக்கவசத்திற்கு இணையாக கணிசமான பாதுகாப்பை வழங்கும் என்கிற காரணத்தினால் இத்தகைய சலுகை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டஃப் டர்பன் எனம் பெயரில் கனடாவைச் சேர்ந்த நிறுவனம் அதிக பாதுகாப்பான டர்பனை உருவாக்கியிருக்கின்றது. பாதுகாப்பு வசதிக்காக மூன்று விதமான அடுக்குகள் இந்த டர்பனின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

முதலில் ஈரத்தை உறிஞ்சும் அடுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 3டி பிரிண்ட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. கடைசியாக, புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட டைனீமா ஃபேப்ரிக் லேயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது வழக்கமான உலோகத்தைவிட பத்து மடங்கு அதிக உறுதியானதாகும்.

துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

ஆகையால், இதை அணிந்தால் தலைக்கவசத்தை விட பல மடங்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. இத்தகைய டர்பனையே கனடாவின் ஸ்பார்க் இன்னோவேசன்ஸ் அங்குள்ள சீக்கியர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கியிருக்கின்றது.

துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

டஃப் டர்பன் அதிக உறுதியானதாக இருந்தாலும் வழக்கமான துணிகளை போல் சுலபமாக இதனை தலையில் மடித்துக் கட்டிக் கொள்ள முடியும். இதுவும் டர்பனின் ஓர் தனிச் சிறப்பாகும். மேலும், இதனை டர்பன் அல்லது தலைக்கவசம் ஆகிய இரண்டாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அதன் வடிவமைப்பாளர் கிரிஸ் பியரன் கூறியுள்ளார்.

துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

தொடர்ந்து, டஃப் டர்பனை உருவாக்குவதற்கான ப்ளூ பிரிண்டை வடிவமைப்பாளர்கள் திறந்தவெளியாக வெளியிட்டுள்ளனர். ஆகையால், யார் வேண்டுமானாலும் இந்த ப்ளூ பிரிண்டை டவுண்லோடு செய்து தங்களுக்கான டஃப் டர்பனை தயார் செய்து கொள்ளலாம்.

துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

இந்தியாவில் சில மாநிலங்களில் வழங்குவதைப் போல் கனடாவிலும் சீக்கியர்கள் தலைக்கவசம் இன்றி, டர்பனுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் ஓர் ஆய்வின்படி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்தியாவில் சாலை விபத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் இறப்பதற்கு தலைக்கவசம் அணியாததே காரணம் என்பது தெரியவந்திருக்கின்றது.

துப்பாக்கி குண்டால்கூட இதை ஓட்டைபோட முடியாது! சிங்குகளுக்கான அதிக பாதுகாப்பு திறனுடைய டர்பன் அறிமுகம்!

இதுபோன்ற கசப்பான சம்பவங்களின் காரணமாகவே ஹெல்மெட் விவகாரத்தில் போக்குவரத்து காவலர்கல் மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அண்மையில்கூட ஐஎஸ்ஐ தர சான்று இல்லாத வாகனங்களை இனி பயன்படுத்தக் கூடாது என்ற புதிய விதியை அரசு வெளியிட்டிருந்தது. இந்த விதி வரும் ஜூன் 1 முதல் கட்டாயமாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Canadian company introduced Tough Turban: It Gives You More Safety More Than Helmet. Read In Tamil.
Story first published: Friday, June 25, 2021, 19:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X