கனடாவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை செல்லும் காரா இது!! மணப்பெண்ணின் ரியாக்‌ஷன் தான் ஹைலைட்டே...

முந்தைய காலங்களில் இருந்தே திருமணம் என்பது பலத்தரப்பட்ட மக்களால் தனித்துவமாக பார்க்கப்பட்டு வரும் ஒன்று. அதுவும், இன்றைய மாடர்ன் காலக்கட்டத்தில் சற்று கூடுதல் ஆர்வத்துடன் திருமணங்கள் நடத்தப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். திருமணத்திற்கு முந்தைய மாப்பிள்ளை-மணப்பெண் போட்டோ ஷூட்டில் இருந்து திருமணம் முடித்து தேனிலவிற்கு செல்லும் வரையில் பணம் சற்று கூடுதலாக செலவாகினாலும் பரவாயில்லை, ஆனால் மற்றவர்களை கவரும் வகையில் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று நினைப்போரே அதிக பேர் உள்ளனர்.

ஆனால் இங்கு ஒருத்தர் மணப்பெண்ணை லக்சரி கார்களை எல்லாம் விட்டுவிட்டு பழமையான மாருதி 800 காரில் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதற்காக இவரிடம் பணம் அல்லது லக்சரி கார்கள் இல்லாமல் இருந்திருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். ஏனெனில் இந்த செய்தியில் நாம் பார்க்கும் மாப்பிள்ளை கனடாவில் வேலை பார்த்து கொண்டிருப்பவர் ஆவார். திருமணத்திற்காக தனது சொந்த மாநிலமான பஞ்சாப்பிற்கு வந்துள்ளார்.

கனடாவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை செல்லும் காரா இது!!

இருப்பினும் லக்சரி கார்களை தவிர்த்து இத்தகைய பழைய காரை இவர் தேர்வு செய்திருப்பதற்கு காரணம், இந்த மாருதி 800 கார் ஆனது தனது தந்தை பயன்படுத்திய கார் எனவும், இந்த காருடன் தனக்கு நெருங்கிய பிணைப்பும், ஏராளமான அனுபவங்களும் உள்ளதாக திருமணத்தின்போது அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். திருமணத்தில் மாப்பிள்ளை - மணப்பெண்ணை அழைத்து செல்லும் வாகனம் மலர்களாலும், வண்ண அலங்காரங்களாலும் அலங்கரிக்கப்படுவது வழக்கமே.

அதேபோன்று இந்த பழைய மாருதி 800 காரையும் மலர்களால் அட்டகாசமாக அலங்கரித்து இருந்தனர். திருமணம் என்பது பல உறவுகளும், நட்பு வட்டாரமும் கலந்துக்கொள்ள, இரு வெவ்வேறு வீட்டார்கள் நடத்தும் நிகழ்ச்சி என்பதை நான் கூற வேண்டிய அவசியமில்லை, உங்களுக்கே தெரியும். ஆகையால் மாப்பிள்ளையாக இருந்தாலும் திருமணத்தில் பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் எடுக்கும் முடிவுகளை அனைவரும் ஏற்று கொள்வார்கள் என்று சொல்லிவிட முடியாது.

குறிப்பாக, மணப்பெண் தனது திருமணம் குறித்து பல்வேறு கனவுகளுடன் இருக்கலாம். அவர் இத்தகைய பழைய காரில் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல விரும்புவரா என்பதை உறுதியாக கூறிவிட முடியாது. ஆனால், இந்த சம்பவத்தில் கனடா மாப்பிள்ளை எடுத்த முடிவை மகிழ்ச்சியுடனும், முழு சம்மந்தத்துடனும் ஏற்றுக்கொண்ட மணப்பெண், "இது அவரது மனதை காட்டுகிறது. அவர் கடந்து வந்த பாதைக்கு அவர் மதிப்பளிக்கிறார்" என திருமணத்தின்போது அளித்த பேட்டியில் கூறி, மாப்பிள்ளை உள்பட மாப்பிள்ளையின் குடும்பத்தாரையும் கவர்ந்துள்ளார்.

கனடா வரையில் வேலைக்கு சென்றாலும், இப்போதும் இந்த மாப்பிள்ளை விரும்பும் மாருதி 800 கார் ஆனது இவருக்கு மட்டுமல்ல, நம் நாட்டில் பலருக்கு நெருக்கமான கார் என்றால் அது மிகையில்லை. தற்சமயம் விற்பனையில் இல்லாவிடினும், 1980, 90களில் பலர் வாங்கிய முதல் கார் மாருதி 800 தான். இதனாலேயே இப்போதும் கூட இந்த மாருதி காருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதில் ஒருவர் தான் இந்த பஞ்சாப்பை சேர்ந்த மாப்பிள்ளை.

கனடாவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை செல்லும் காரா இது!!

இந்தியாவின் நகர்புறத்திற்கான கார் என்று அழைக்கப்பட்டுவந்த மாருதி 800 -ஐ மாருதி சுஸுகி நிறுவனம் 1983இல் இருந்து 2014 வரையில் தயாரித்து வந்தது. ஜப்பானில் விற்பனையில் இருந்த சுஸுகி ஆல்டோ காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மாருதி 800-இல் 800சிசி எஃப்8பி என்ஜின் பொருத்தப்பட்டது. இந்த என்ஜினின் 800 பெயரே காரின் பெயராக சூட்டப்பட்டது. 1983இல் இருந்து 2014 வரையில் 31 வருடங்களில் மொத்தம் 28.7 லட்ச மாருதி 800 கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன.

இதில் கிட்டத்தட்ட 26.6 லட்ச மாருதி 800 கார்கள் விற்பனையாகின. அறிமுகமான சமயத்தில், முன்பக்கமாக இயங்கும் கார் மற்றும் அதிவேகமாக இயங்கும் அளவில்-சிறிய கார் என பல்வேறு அம்சங்களில் முதல் வாகனமாக விளங்கிய மாருதி 800-க்கு இந்த காரணங்களிலேயே ஆரம்பம் முதலே முன்பதிவுகள் குவிய துவங்கின. இதில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால், இந்த காரை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை ஆரம்ப காலக்கட்டத்தில் நேரடியாக மத்திய அரசாங்கமே மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Canadian nri groom bring his bride to home in his dads maruti 800
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X