இனி இந்த ஆட்டோலாம் ஓட கூடாது... மொத்தமா ஒழிச்சு கட்ட போறாங்க... திடீர் உத்தரவால் உரிமையாளர்கள் நடுக்கம்!

இந்தியாவின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR - National Capital Region) காற்று மாசுபாடு பிரச்னை (Air Pollution) மிகவும் அதிகமாக உள்ளது. டெல்லி (Delhi) முழுவதும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ளடங்கியுள்ளது. இதுதவிர ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வருகின்றன.

இங்கு காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக வரும் 2026ம் ஆண்டின் இறுதிக்குள் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் டீசல் ஆட்டோக்களின் இயக்கத்தை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சிஏக்யூஎம் என சுருக்கமாக அழைக்கப்படும் காற்று தர மேலாண்மைக்கான ஆணையம்தான் (CAQM - Commission For Air Quality Management) இந்த அதிரடியான உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது.

இனி இந்த ஆட்டோலாம் ஓட கூடாது... மொத்தமா ஒழிச்சு கட்ட போறாங்க... திடீர் உத்தரவால் உரிமையாளர்கள் நடுக்கம்!

Image used for representation purpose only

முதற்கட்டமாக காஸியாபாத், கௌதம புத்தா நகர், ஃபரிதாபாத் மற்றும் குர்கான் உள்ளிட்ட நகரங்களில் வரும் 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ள டீசல் ஆட்டோக்களின் இயக்கம் நிறுத்தப்பட வேண்டும் என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் சோனிபட், ரோஹ்டக், ஜஜ்ஜர் மற்றும் பாஹ்பட் ஆகிய நகரங்களில் வரும் 2025ம் ஆண்டின் இறுதிக்குள் டீசல் ஆட்டோக்களின் இயக்கம் நிறுத்தப்பட வேண்டும். அதே சமயம் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில் வரும் 2026ம் ஆண்டின் இறுதிக்குள் டீசல் ஆட்டோக்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வரும் 2026ம் ஆண்டிற்குள் டீசல் ஆட்டோக்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு விடும். டெல்லியில் தற்போதைய நிலையிலேயே டீசல் ஆட்டோக்களின் சேவை வழங்கப்படுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த 1998ம் ஆண்டிலேயே அங்கு பெரும்பாலான ஆட்டோக்கள் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வகையில் மாற்றப்பட்டு விட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டீசல் வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கின்றன.

எனவேதான் காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் தற்போது இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னை ஓரளவிற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி உத்தரவின் காரணமாக வரும் 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி (CNG) மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் (Electric Autos) மட்டுமே இயங்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானவை. எனவே அந்த ஆட்டோக்களை இயக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் தற்போது சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை தயாரித்து வருகின்றன. இதில், பஜாஜ் (Bajaj) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்தவை. வரும் காலங்களில் இந்த நிறுவனங்களின் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் விற்பனை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், பஜாஜ் நிறுவனத்தை பொறுத்தவரையில் தற்போது சேத்தக் (Bajaj Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விற்பனை செய்து வருகிறது. மறுபக்கம் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) என்ற காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த புதிய எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வந்து விட்டது.

ஆனால் இந்த காரின் விலை (Price) இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் இந்த காரின் விலை அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்திய சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும், டாடா நிறுவனத்தின் நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு (Tata Nexon EV), மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய தயாரிப்பு விற்பனையில் மிகவும் கடுமையான சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Caqm orders ncr to phase out diesel autorickshaws by 2026
Story first published: Friday, December 2, 2022, 15:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X