சித்தார்த் மல்கோத்ரா - கியாரா அத்வானி திருமணம்... இந்த இளம் பாலிவுட் தம்பதி இத்தனை சொகுசு கார்களுக்கு ஓனரா!!
சமீப காலமாக சினிமா வட்டாரங்களில் அதிகமாக திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகையர் கூட சமீப காலத்தில் புது தம்பதியனராக வாழ்க்கையை துவங்கியுள்ளனர். கடந்த ஜனவரி மாத இறுதியில் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கும், இளம் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கு நடந்த திருமணத்தை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அவர்களை தொடர்ந்து, பாலிவுட்டில் மிகவும் பிரபலமான காதல் ஜோடியாக வலம் வந்த நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் நடிகை கியாரா அதானியின் திருமணம் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. தங்களது திருமணத்தை உறுதிப்படுத்தும் பதிவுகளை திருமண புகைப்படங்களுடன் இவர்கள் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானியிடம் உள்ள சொகுசு கார் & பைக்குகளை பற்றி பார்ப்பதற்கு இது சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

சித்தார்த் மல்கோத்ராவின் கலெக்ஷன்ஸ்
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக்
நடிகர் சித்தார்த் மல்கோத்ராவிடம் பழைய தலைமுறை லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரின் எஸ்.இ வேரியண்ட் உள்ளது. இந்த லக்சரி எஸ்யூவி காரில் தான் இவர் பலமுறை காட்சி தந்துள்ளார். சித்தார்த் மல்கோத்ராவிடம் உள்ள வோக் காரில் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜினின் மூலம் அதிகப்பட்சமாக 335 பிஎச்பி மற்றும் 740 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடிகிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் எம்.எல்350
நடிகராக பிரபலமான பிறகு சித்தார்த் மல்கோத்ரா வாங்கிய முதல் லக்சரி கார் மெர்சிடிஸ்-பென்ஸ் எம்.எல் 350 4மேட்டிக் ஆகும். இந்த கார் தற்சமயம் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ என்ற பெயரில் விற்பனை செயப்படுகிறது. முன்பு பயன்படுத்தி வந்த ஃபியாட் லினேயா காரை விற்று சித்தார்த் வாங்கிய கார் இதுவாகும். கருப்பு நிற பெயிண்ட்டில் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் உள்ள இந்த மெர்சிடிஸ் காரில் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாப்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலையுயர்ந்த பைக்குகளுள் ஹார்லி-டேவிட்சனின் ஃபேட் பாப் மாடலும் ஒன்று. இந்த பைக்கை வாங்கிய போது சித்தார்த் சமூக ஊடகங்களில் செய்தியாக மாறினார். இருப்பினும், கருப்பு நிறத்தில் சித்தார்திடம் இருப்பது பழைய தலைமுறை ஃபேட் பாப் பைக் ஆகும். அதாவது இந்த பைக்கை அதன்பின் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அப்டேட் செய்துவிட்டது. இந்த பைக்கில் 1585சிசி வி-ட்வின் என்ஜின் பொருத்தப்படுகிறது.
கியாரா அதானியின் கலெக்ஷன்ஸ்
ஆடி ஏ8எல்
பாலிவுட் சினிமா துறையில் முன்னணி நடிகையாக விளங்கும் கியாரா அதானிக்கு ஆடி இந்தியா நிறுவனம் தனது விலையுயர்ந்த கார்களுள் ஒன்றான ஏ8எல் -ஐ கடந்த 2020இல் பரிசாக வழங்கியது. கியாராவுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஏ8எல் கார் அடர் நீல நிற பெயிண்ட்டை கொண்டது. இந்த சொகுசு செடான் காரில் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ்
கியாரா அதானியிடம் உள்ள மற்றொரு லக்சரி கார் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் மிட்-சைஸ் செடான் ஆகும். இந்த காரை கியாரா வெள்ளை நிறத்தில் வைத்துள்ளார். மேலும், கியாராவின் இந்த மெர்சிடிஸ் லக்சரி செடான் காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினின் மூலமாக அதிகப்பட்சமாக 192 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பெற முடிகிறது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்5
கியாரா அத்வானி வைத்துள்ள ஒரேயொரு லக்சரி எஸ்யூவி கார் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ஆகும். கருப்பு நிறத்தில் உள்ள இந்த பிஎம்டபிள்யூ காரில் தான் சினிமா துறையில் நுழைந்த சமயத்தில் கியாரா அதானி பலமுறை காட்சி தந்துள்ளார். இவரிடம் உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி காரில் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 261 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications









