பிரபல கார் நிறுவனங்களும், அதன் தாய் நிறுவனங்களும்... படங்கள் வழியாக எளிமையான விளக்கம்!

Written By:

உலகின் மிக பிரபலமான கார் நிறுவனங்களின் தகவல்களை ஆராயும்போது, அந்த நிறுவனத்தின் பின்புலத் தகவல்களும், அந்த நிறுவனத்திற்கு மூலமாக செயல்படும் தாய் நிறுவனங்கள் பற்றிய தகவல்களும் வியக்க வைக்கிறது.

அவ்வாறு, மாபெரும் வாகன குழுமங்களையும், அதன் கீழ் செயல்படும் கார் நிறுவனங்களையும் மிக எளிமையாக தெரிந்து கொள்ளும் விதத்தில் ஸ்லைடரில் படங்களாக தந்திருக்கிறோம். ஆங்கில அகர வரிசைப்படி, கார் நிறுவனங்களும், அதன் உறவுமுறையை எளிமையாக விளக்கும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. அஸ்டன் மார்ட்டின்

01. அஸ்டன் மார்ட்டின்

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் லகோண்டா நிறுவனம் உயர்வகை கார் தயாரிப்பில் புகழ்பெற்றது. 1913ம் ஆண்டு லியோனெனல் மார்ட்டின் மற்றும் ராபர்ட் பாம்ஃபோர்டு ஆகியோரால் நிறுவப்பட்டது. 1950ம் ஆண்டிலிருந்து சொகுசு கார் மாடல்களை அறிமுகம் செய்தது. 1964ம் ஆண்டில் ஜேம்ஸ்பாண்ட் வரிசையிலான கோல்டுஃபிங்கர் சினிமாவில் அஸ்டன் மார்ட்டின் டிபி5 கார் பயன்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த நிறுவனத்தின் கார் மாடல்கள் உலக அளவில் பிரபலமடைந்தது. தற்போது வி8 வேண்டேஜ், வி12 வேண்டேஜ், டிபி9, வாங்கிஷ், வாங்கிஷ் வோலன்டே மற்றும் லகோண்டா ஆகிய கார் மாடல்களை விற்பனை செய்கிறது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இன்றுவரை ஆஸ்தான கார்களாகவும் இடம்பெற்று வருகிறது.

 02. பிஎம்டபிள்யூ

02. பிஎம்டபிள்யூ

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் உலக அளவில் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் கீழ் உலகின் புகழ்பெற்ற பிராண்டுகளான இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் மினி கார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

03. டெய்ம்லர்

03. டெய்ம்லர்

ஜெர்மனியை சேர்ந்த மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமங்களில் ஒன்றான டெய்ம்லர் பல்வேறு பிராண்டுகளில் கார் விற்பனை செய்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் என்பது அதன் முக்கியமான பிராண்டாக விளங்குகிறது. மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்களின் அதிசக்திவாய்ந்த மாடல்களை ஏஎம்ஜி என்ற பிராண்டில் விற்பனை செய்கிறது. இதுதவிர, ஸ்மார்ட் என்ற குட்டி கார் தயாரிப்பு நிறுவனமும் டெய்ம்லரின் கீழ்தான் செயல்படுகிறது. மேலும், கனரக மற்றும் வர்த்தக வாகன தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

04. ஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ்

04. ஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ்

இத்தாலியை சேர்ந்த ஃபியட் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த க்றைஸ்லர் ஆகியவை சமீபத்தில் ஒரே நிறுவனமாக மாற்றப்பட்டது. தற்போது ஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் என்ற இந்த நிறுவனத்தின் கீழ் ஆல்ஃபா ரோமியோ, க்றைஸ்லர், ஃபியட், லான்சியா, ஃபெராரி, டாட்ஜ், மசேரட்டி, ஜீப், ராம் போன்ற உலகின் மிக பிரபலமான பல கார் பிராண்டுகள் செயல்படுகின்றன.

05. ஃபோர்டு

05. ஃபோர்டு

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம், சாதாரண மக்களும் கார் வாங்கும் கனவை நிறைவேற்ற வித்திட்ட நிறுவனம் என்ற பெருமைக்குரியது. இந்த நிறுவனத்தின் கீழ் ஃபோர்டு, லிங்கன் மற்றும் ட்ரோலர் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.

06. கீலி

06. கீலி

சீனாவை சேர்ந்த கீலி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கீழ் பல்வேறு வாகன பிராண்டுகள் செயல்படுகின்றன. அதில், முக்கியமானது ஸ்வீடனை சேர்ந்த வால்வோ வாகன தயாரிப்பு நிறுவனம். சொகுசு பஸ், டிரக்குகள் மற்றும் சொகுசு கார்கள் தயாரிப்பில் வால்வோ உலகின் பிரசித்தி பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.

 07. ஜெனரல் மோட்டார்ஸ்

07. ஜெனரல் மோட்டார்ஸ்

வாகன விற்பனையில் உலகின் டாப் 3 நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் பல்வேறு பிராண்டுகள் செயல்படுகின்றன. கேடில்லாக், புயிக், ஹோல்டன், ஜிஎம்சி, ஒபெல், செவர்லே, வாக்ஸ்ஹால் ஆகியவை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்றன.

 08 ஹோண்டா

08 ஹோண்டா

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா குழுமம் இருசக்கர வாகன உற்பத்தியில் உலகின் மாபெரும் நிறுவனமாக விளங்குகிறது. மேலும், கார் தயாரிப்பு, விமான தயாரிப்பு என பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது. தனது சொகுசு கார்களை அக்குரா என்ற பிராண்டில் ஹோண்டா குழுமம் விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, எஞ்சின் தயாரிப்பில் ஹோண்டா சிறந்து விளங்குகிறது.

09. ஹூண்டாய் மோட்டார் குழுமம்

09. ஹூண்டாய் மோட்டார் குழுமம்

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் குழுமம் உலக அளவில் அதிவேகமாக வளரும் கார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. குறுகிய காலத்தில் அதிவேகமாக பல்வேறு நாட்டு சந்தைகளில் வேகமாக விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய பிராண்டுகளில் இந்த நிறுவனம் கார்களை விற்பனை செய்கிறது.

10. பிஎஸ்ஏ பீஜோ சிட்ரோவன்

10. பிஎஸ்ஏ பீஜோ சிட்ரோவன்

பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமங்களில் ஒன்றான பிஎஸ்ஏ பீஜோ சிட்ரோவன் கீழ் பீஜோ, சிட்ரோவன், டிஎஸ் ஆட்டோமொபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

11. ரெனோ - நிசான்

11. ரெனோ - நிசான்

பிரான்ஸ் நாட்டின் ரெனோ மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் ஆகிய நிறுவனங்கள் சர்வதேச அளவில் கூட்டணி நிறுவனங்களாக செயல்படுகின்றன. இந்த நிறுவனத்தின் கீழ் நிசான், ரெனோ லடா, டேஸியா, டட்சன், இன்ஃபினிட்டி ஆகிய பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன.

12. சுஸுகி

12. சுஸுகி

ஜப்பானிய நிறுவனமான சுஸுகியின் துணை நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் மாபெரும் வாகன நிறுவனமாக செயல்படுகிறது. சுஸுகி நிறுவனத்தின் விற்பனையில் மாருதி சுஸுகி கார் நிறுவனத்தின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகிறது.

13. டாடா மோட்டார்ஸ்

13. டாடா மோட்டார்ஸ்

நம் நாட்டின் வாகன உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் டாடா மோட்டார்ஸ் கீழ் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார், லேண்ட்ரோவர், டாடா மோட்டார்ஸ், டாடா தேவூ ஆகிய பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன.

14. டொயோட்டா

14. டொயோட்டா

ஜப்பானிய நிறுவனமான டொயோட்டாதான் விற்பனையில் உலகின் முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது. டொயோட்டா நிறுவனத்தின் கீழ் டொயோட்டா, லெக்சஸ், டைகட்சூ, சியோன் ஆகிய பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன.

 15. ஃபோக்ஸ்வேகன்

15. ஃபோக்ஸ்வேகன்

உலகிலேயே அதிக கார் பிராண்டுகளை வைத்திருக்கும் நிறுவனமாக ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் விளங்குகிறது. ஆடி, பென்ட்லீ, ஃபோக்ஸ்வேகன், புகாட்டி, ஸ்கோடா ஆட்டோ, லம்போர்கினி, போர்ஷே மற்றும் சீட் ஆகிய பல பிரபல கார் பிராண்டுகள் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Familiar Car brands and their parent companies.
Story first published: Wednesday, September 9, 2015, 11:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark