உங்க கார் கலர வச்சே உங்கள பத்தி சொல்ல முடியும்! எந்த கலர் கார் பெஸ்ட் தெரியுமா?
வாகனம் வாங்கும் பலர் அதன் கலரை தேர்வு செய்வதில் மிக முக்கியமாக கவனம் செலுத்துவார்கள். அது அவர்களின் விருப்பம் சார்ந்ததாக மட்டுமல்லாமல் அவர் எப்படிபட்டவர் என்பதை பிரதிபலிக்கும் விஷயமாக கூட இருக்கும். இப்படியாக எந்தெந்த கலர் காரை தேர்வு செய்பவர்கள் எப்படிபட்டவர்கள்? விரிவான காணலாம் வாருங்கள்.
நீங்கள் ஒரு காரை வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அது என்ன கலரில் இருக்க வேண்டும் என நீங்கள் தான் தேர்வு செய்கிறீர்கள். காரின் மற்ற விஷயங்கள் உங்கள் தேவையை பொருத்து நீங்கள் முடிவு செய்தாலும் கலர் என்பது உங்கள் விருப்பதை பொருத்து முடிவு செய்ய வேண்டியது. இந்த கலர் தேர்வு உங்களது பெர்சனாலிட்டி, எமோசனல் முக்கியத்துவம், லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இது பல்வேறு இடங்களில் உள்ள தரவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிறம்
இந்தியாவில் வெள்ளை நிற காரை தேர்வு செய்பவர்கள் பலர் வாழ்க்கையில் தெளிவு பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிம்பிளான நபர்களாகவும், வெப்பம் அதிகம் அதிகமாக இருக்கும் இடத்தில் இந்த கலர் காரை தேர்வு செய்பவர்கள் அதிக பிராக்கடிக்கல் திறன் கொண்டதாகவும் இருப்பார்கள்.
கருப்பு நிறம்
இந்தியாவில் கருப்பு நிறத்தை அதிகம் தேர்வு செய்பவர்கள் தொழில் வளர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக சொந்தமாக பல தொழில்களை செய்பவர்கள் சமூகத்தில் தனக்கு ஒரு அந்தஸ்து மற்றும் தனது ஸ்டேட்டஸை காட்டுவதற்காக கருப்பு நிற காரை தேர்வு செய்கிறார்கள். இந்த காருக்கு பராமரிப்பு அதிகம் தேவைப்படும்.

சிவப்பு நிறம்
சிவப்பு நிற காரை தேர்வு செய்பவர்கள் கவனத்தை ஈர்க்கும் விரும்பிகளாக இருக்கின்றனர். சாலையில் செல்லும் மற்றவர்கள் நம்மை கவனிக்க வேண்டிய திறன் கொண்டவராக இருப்பார்கள். முக்கியமாக ஸ்டோர்ட்ஸ் ரக காரை விரும்புபவர்கள் சிவப்பு நிறத்தையும் விரும்ப வாய்ப்பு அதிகம் உள்ளது.
சில்வர்/ கிரே
சில்வர் மற்றும் கிரே நிறத்தை தேர்வு செய்பவர்கள் புரோஃபஷனல் பண்பு கொண்டவர்களாகவும் அதிக நம்பதன்மை கொண்டவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. நல்ல லுக்கை விட சிறப்பான செயல்பாட்டை விரும்பும் நபர்களாக இருப்பார்கள்.

நீலம்
நீல நிற காரை தேர்வு செய்பவர்கள் திறந்து மனது கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த கலரை தேர்வு செய்பவர்கள் பொறுப்புணர்வு மற்றும் சார்பு தன்மை கொண்டவர்களாகவும் இரப்பார்கள். இந்த கலர் பெரும்பாலும் குடும்பங்களுடன் பயணிக்கும் ரக கார்களில் அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.
பச்சை
பச்சை கலரில் காரை அவ்வளவு அதிகமாக சாலைகளில் கான முடியாது. இயற்கை மற்றும் வளத்தை விரும்பும் மக்கள் இந்த கலர் காரை தேர்வு செய்கின்றனர். இந்த கலருடன் விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கையே குறைவாக இருக்கிறது.

பிரெளன் நிறத்தில் காரை தேர்வு செய்பவர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் சுயசார்பை விரும்பும் மக்களாக இருப்பார்கள் மற்றவர்களை எதற்காகவும் சார்ந்திருப்பதை விரும்பமாட்டார்கள். பண்பாடு, கலாச்சாம் போன்ற விஷயங்களில் தீவிர பற்று கொண்டவ்ரகளாக இருப்பார்கள்.
மஞ்சள்
மஞ்சள் நிறம் பிரகாசமாக ஒரு நிறமாக இருக்கிறது. இந்த கலரில் கார்கள் விற்பனைக்கு வருவது அரிது தான். வெகு சில கார்கள் மட்டுமே இந்த கலரில் கிடைக்கிறது. இந்த கலரை விரும்புபவர்கள் ஃபன் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். கூட்டத்தில் தான் தனியாக தெரிய வேண்டும் என்ற விருப்பம் கொண்டவ்ரகளாக இருப்பார்கள். இவர்களது செயல்பாடுகளும் ்ப்படி தான் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார் கலர் பல வகைகளில் கிடைக்கிறது. பெரும்பாலும் கார் கலரை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் மனநிலை மேலே சொன்னதுபடி இருக்க அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









