ஆஃபீஸ்ல இப்படிலாம் கூட ரூல்ஸ் போடுவாங்களா! காசு இருந்தும் கார் வாங்க முடியாம தவிக்கும் ஊழியர்! மனுஷன் பாவம்யா!

வாழ்க்கையில் சொந்தமாக ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்ற கனவு நம் அனைவருக்கும் நிச்சயமாக இருக்கும். ஒரு சிலரோ, வாங்கினால் இந்த காரைதான் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பார்கள். உதாரணத்திற்கு வாங்கினால், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) காரைதான் வாங்குவேன் என ஒரு சிலர் முடிவோடு இருப்பார்கள்.

இந்த கனவை நிறைவேற்றுவதற்காக பல வருடங்கள் கடுமையாக உழைக்கவும் செய்வார்கள். அப்படி கடுமையாக உழைத்து பணத்தை சேர்ந்த பிறகும், அலுவலக கொள்கைகள் காரணமாக கனவு காரை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இப்படியான ஒரு சூழல் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அதை பற்றிய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). வாங்கினால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரைதான் வாங்குவேன் என்ற பெரிய லட்சியத்துடன், அவர் சமீப காலமாக மிக கடுமையாக உழைத்து வந்தார்.

2024 Mahindra XUV700

இந்த கடின உழைப்பின் மூலம் அவரது கனவு காரான மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்குவதற்கான பணத்தை அவர் சேர்த்து விட்டார். பிறகு என்ன காரை வாங்க வேண்டியதுதானே? என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் இங்கேதான் ஒரு ட்விஸ்ட். நாம் இங்கே பேசி கொண்டுள்ள நபர், ஒரு கார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

அந்த நிறுவனத்தின் கொள்கைப்படி, அவர்களுடைய நிறுவனத்தின் கார்களில் வரும் ஊழியர்களுக்கு மட்டுமே அலுவலக வளாகத்தில் உள்ள பார்க்கிங் ஏரியாவில், காரை நிறுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படும். மற்ற நிறுவனங்களின் கார்களில் ஊழியர்கள் வந்தால், அலுவலக வளாகத்திற்கு வெளியேதான் பார்க்கிங் செய்து கொள்ள வேண்டும்.

Mahindra XUV700

இந்த பிரச்னை காரணமாகதான் நாம் தற்போது பேசி கொண்டுள்ள நபர், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்க முடியாமல் தவிக்கிறார். மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்கினால், அவரது அலுவலக வளாகத்தில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் பாதுகாப்பாக நிறுத்த முடியாது. இதற்கு அனுமதி தர மாட்டார்கள். வெளியே நிறுத்தி கொள்ளலாம் என்றால், அங்கே முறையான பார்க்கிங் இடவசதி கிடையாது. எனவே கார் பாதுகாப்பாக இருக்குமா? என்பது சந்தேகம்தான். இப்படி ஒரு கொள்கை காரணமாக, தன்னுடைய கனவு காரை வாங்க முடியாமல், சமூக வலை தளத்தில் அந்நபர் புலம்பி தள்ளியுள்ளார்.

இது போன்ற விதிமுறைகளை எல்லாம் விதித்தால், வேலையை விட்டு விடுங்கள் என அந்த நபருக்கு பலரும் அறிவுரை கூறி வருகின்றனர். வேறு வேலை பார்த்து கொள்ளலாம் என்பது அவர்களுடைய கருத்து. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையில் ஒரு சில கார் நிறுவனங்கள் இது போன்ற கொள்கைகளை பின்பற்றவே செய்கின்றன. எங்கள் ஊழியர்கள் எங்கள் கார்களைதான் வாங்குகிறார்கள் என வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்காக ஒரு சில கார் நிறுவனங்கள் இது போன்ற கொள்கைகளை வைத்துள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். இதன் விளைவாக விற்பனையும் அதிகரிக்கும்.

ஆனால் ஒரு சில ஊழியர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் காரை வாங்க விரும்புவதில்லை. சமையல் செய்பவர்களிடம் ஒரு பழக்கத்தை பார்க்கலாம். அவர்கள் சமைத்ததை அவர்கள் சாப்பிட மாட்டார்கள். அல்லது எவ்வளவு சுவையாக இருந்தாலும், அது அவர்களுக்கு பிடிக்காது. அதே போன்றுதான் ஒரு சில கார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்கள் நிறுவன காரை விரும்புவதில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, May 9, 2024, 22:32 [IST]
English summary
Car company employee cant buy mahindra xuv700 here is why
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+