அதிவேகத்தில் ஓட்டிச்சென்ற காரை கட்டிடத்தின் இரண்டாம் தள ஜன்னல் வழியே பார்க் செய்த போதை ஆசாமி...!!

Posted By:
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

சாலை விபத்தில் கார் ஒன்று ஒரு கட்டிடத்தின் இராண்டாம் மாடிக்கு தூக்கிவீசப்பட்டு அங்கே சிக்கிகொண்டு நின்ற சம்பவம் இணையதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

போதை ஆசாமியால் கட்டிடத்திற்கும் காருக்கும் நடந்த விபரீதம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணம் ஹாலிவுட் திரையுலகின் தலைமையிடமாக உள்ளது.

சினிமாவிற்கு பெயர்போன இந்த மாகாணம் தற்போது திரைப்படம் போலவே நடைபெற்ற விபத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போதை ஆசாமியால் கட்டிடத்திற்கும் காருக்கும் நடந்த விபரீதம்..!!

கலிஃபோர்னியாவின் ஞாயிற்றுகிழமை பொழுதில், சான்டே ஏனா போலீசாருக்கு புதுவிதமான கார் விபத்தைக்குறித்து புகார் வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சான்டே ஏனா காவலர்கள், ஆச்சர்யத்தில் வாயடைந்து நின்றனர். காரணம், விபத்து நடந்த சம்பவம் அப்படி.

போதை ஆசாமியால் கட்டிடத்திற்கும் காருக்கும் நடந்த விபரீதம்..!!

நிஸானின் அல்டிமா செடான் மாடல் கார் ஒன்று, ஒரு கட்டிடத்தின் இரண்டாம் தளத்தின் வெளிப்புற பகுதியில் சிக்கி தொங்கிக்கொண்டு இருந்தது.

போதை ஆசாமியால் கட்டிடத்திற்கும் காருக்கும் நடந்த விபரீதம்..!!

இரண்டாம் தளத்தின் ஜன்னல் வழியாக கார் பாய்ந்து, உள்ளே அதன் முன்பாகமும், பின்பகுதி வெளியேவும் இருந்தது. இது போலீசாரை அதிரவைத்தன.

Trending On DriveSpark Tamil:

7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் சோதனை: படங்களுடன் தகவல்கள்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கிராஃபைட் ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்டது டிவிஎஸ்..!!

போதை ஆசாமியால் கட்டிடத்திற்கும் காருக்கும் நடந்த விபரீதம்..!!

உடனே உள்ளூர் தீ அனைப்பு அதிகாரிகளாக ஆரஞ்சு கன்டி அதிகாரிகளுக்கு (OCFA) தகவல் அளிக்கப்பட்டு, தீ அனைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர்.

போதை ஆசாமியால் கட்டிடத்திற்கும் காருக்கும் நடந்த விபரீதம்..!!

ஒரு கிரேன் மற்றும் ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு இராண்டாம் தளத்தில் சிக்கிய நிஸான் அல்டிமா காரை மீட்பதற்கான பணிகள் தொடங்கின.

காலை 5.30 பணிக்கு இந்த பகுதிகுக்கு நிஸான் அல்டிமா காரை படுவேகமாக ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார்.

அதிவேக காரணத்தினால் நடைபாதை பகுதியை கார் இடித்த போது, சட்டென தூக்கிவீசப்பட்ட கார்,

இராண்டாம் தளத்தில் கோரமான நிலையில் பார்க்கிங் செய்துள்ளது.

மோதிய வேகத்தில் காரிலிருந்து சிறியளவில் தீ பற்ற துவங்க, அதை அணைக்க முடியாமல் அப்பகுதி வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போதை ஆசாமியால் கட்டிடத்திற்கும் காருக்கும் நடந்த விபரீதம்..!!

இந்த விபத்தை பற்றி மேலும் தகவல்களை ஆராய்ந்த போலீசார், காரை ஓட்டி வந்த ஓட்டுநர் போதை மருந்து உட்கொண்டுயிருந்தது தெரியவந்தது.

Trending On DriveSpark Tamil:

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி இந்தியாவில் களமிறங்குகிறது... க்ரெட்டாவுக்குதான் எத்தனை போட்டி!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

போதை ஆசாமியால் கட்டிடத்திற்கும் காருக்கும் நடந்த விபரீதம்..!!

காரை ஓட்டியவருடன் சேர்ந்து மேலும் ஒரு பயணி உள்ளே இருந்துள்ளார். முதற்கட்ட பணிகளின் போது காரை ஓட்டிவந்தவரை போலீசார்கள் மீட்டனர்.

போதை ஆசாமியால் கட்டிடத்திற்கும் காருக்கும் நடந்த விபரீதம்..!!

பிறகு சிறிது இடைவெளிக்கு பிறகு காரிலிருந்த மற்றொரு பயணி மீட்கப்பட்டுள்ளனர். தவிர, இரு பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று போலீசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

போதை ஆசாமியால் கட்டிடத்திற்கும் காருக்கும் நடந்த விபரீதம்..!!

கார் போய் சிக்கிய கட்டிடம் சிறியளவில் இருந்ததால், பேசிய சேதம் ஏற்படவில்லை. அதனால் கார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. எனினும் போதை பொருள் உட்கொண்டுவிட்டு காரை ஓட்டியது மற்றும் வேகக்கட்டுபாட்டை மீறியது ஆகிய பிரிவுகளில் நிஸான் அல்டிமா காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Car Carashes Into the Second Floor Of a Building. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark