இனி ஒரு பஸ் கூட ஆப்போசிட்ல ஏறி வர கூடாது... தரமான சம்பவத்தை செஞ்சு விட்ட கார் டிரைவர்... சாரே கொல மாஸ்...
இந்திய சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை (Traffic Rules) மீறும் வாகன ஓட்டிகளை நீங்கள் அடிக்கடி பார்க்க முடியும். அரசு பஸ்களை இயக்கும் சில டிரைவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அரசு பஸ் டிரைவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால், கடந்த காலங்களில் நிறைய சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெற்றுள்ளன. ஒரு சில சமயங்களில் அரசு பஸ் டிரைவர்கள் மிகவும் அபாயகரமான முறையில் ஓவர்டேக் (Overtake) செய்கின்றனர். அப்படி அபாயகரமான வகையில் ஓவர்டேக் செய்ய முயன்ற அரசு பஸ் டிரைவர் ஒருவருக்கு, கார் டிரைவர் ஒருவர் தக்க பாடம் புகட்டியுள்ளார்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த சம்பவம் கேரள (Kerala) மாநிலத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அங்கே எதிர் திசையில் இருந்த லேனுக்கு (Opposite Lane) வந்து மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்ய முயன்ற அரசு பஸ்ஸை, மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV) காரின் டிரைவர் ஒருவர் வழிவிடாமல் தடுத்துள்ளார்.

இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் டேஷ்போர்டு கேமராவில் (Dashboard Camera) பதிவாகியிருந்த இந்த வீடியோ, யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதை பலரும் சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வைரல் வீடியோவில், மஹிந்திரா தார் எஸ்யூவி கார், சற்று குறுகலான சாலை ஒன்றில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு எதிர் திசையில், கேஎஸ்ஆர்டிசி (KSRTC) என அழைக்கப்படும் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் ஒன்று வருகிறது.
அப்போது அந்த பஸ்ஸின் டிரைவர், தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களை 'ஓவர்டேக்' செய்ய முயற்சி செய்கிறார். அவர் எதிர் திசையில் இருந்த லேனுக்கு வந்து, அதாவது மறுபுறத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த லேனுக்கு வந்து, 'ஓவர்டேக்' செய்ய முயற்சி செய்வதை நம்மால் காண முடிகிறது.
இது மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் டிரைவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அது அவரது கார் செல்ல வேண்டிய லேன் ஆகும். எனவே அவர் பஸ்சுக்கு வழி கொடுக்கவில்லை. மாறாக பஸ் மேற்கொண்டு செல்ல முடியாதபடி தடுத்து, தனது மஹிந்திரா தார் எஸ்யூவி காரை நிறுத்தி விட்டார்.
எனவே பஸ் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் பஸ் டிரைவருக்கும் தனது லேனுக்கு செல்லும் எண்ணம் வரவில்லை என்பது போல் தோன்றுகிறது. ஏனெனில் இருவரும் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தி விட்டனர். கார் டிரைவர் வழிவிட வேண்டும் என பஸ் டிரைவரும், பஸ் டிரைவர் அவரது லேனுக்கு சென்றாக வேண்டும் என கார் டிரைவரும், தங்கள் வாகனங்களை நிறுத்தி கொண்டனர்.
இதனால் சிறிது நேரம் 2 வாகனங்களும் அப்படியே நின்று கொண்டிருந்தன. இந்த யுத்தத்தில் இறுதியில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் டிரைவரே வென்றார். அவர் வழி விட மறுத்ததால், சிறிது நேரத்திற்கு பின்னர், பஸ் டிரைவர் மெதுவாக ஸ்டியரிங்கை தனது லேனை நோக்கி திருப்புவதை நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் இந்த வீடியோ முடிந்து விடுவதால், இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடந்தது? என்பது சரியாக தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 'ஓவர்டேக்' செய்ய முயற்சிக்கும்போது, எதிரே வரும் வாகனங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதற்கு பிறகே 'ஓவர்டேக்' செய்ய வேண்டும். இதுதான் 'ஓவர்டேக்' செய்வதற்கான அடிப்படை. எதிர் திசையில் வாகனங்கள் வந்தால், எக்காரணத்தை கொண்டும் 'ஓவர்டேக்' செய்ய வேண்டாம்.
கேரளாவில் நடந்துள்ள சம்பவத்தை பொறுத்தவரை, எதிர்திசையில் மஹிந்திரா தார் எஸ்யூவி கார் வருவதை, பஸ் டிரைவர் நிச்சயம் பார்த்திருப்பார் என்றுதான் நாங்கள் கருதுகிறோம். இருந்தாலும் கூட அவர் 'ஓவர்டேக்' செய்யும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறார். இது போன்ற செயல்கள் சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கலாம்.
எங்களுடைய கருத்து என்னவென்றால், எதிர் திசையில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பார்த்த உடன், பஸ் டிரைவர் அவரது லேனுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாத காரணத்தால், அவருடைய நேரம் மட்டுமின்றி, பஸ் பயணிகள் அனைவரின் நேரமும் வீணாகியுள்ளது. நல்ல வேளையாக சாலை விபத்து நடக்கவில்லை என்ற அளவில் எங்களுக்கு மகிழ்ச்சி!


Click it and Unblock the Notifications








