சட்டை பட்டன் போடாத கார் டிரைவருக்கு கடும் அபராதம்... எவ்வளவு என தெரிந்தால் இன்னும் ஷாக் ஆயிடுவீங்க
சட்டை பட்டன் போடாத டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை, மிக கடுமையாக உயர்த்தியிருப்பதே இதற்கு காரணம். புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அன்று முதல் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் சிலருக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதுதவிர சில வினோதமான காரணங்களுக்காகவும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

செருப்பு அணிந்து கொண்டு டூவீலரை ஓட்டியதற்காக வாகன ஓட்டி ஒருவருக்கு சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சூழலில் மற்றொரு வினோதமான காரணத்திற்காக கேப் டிரைவர் ஒருவருக்கு தற்போது போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆக கூடும்.

இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றுள்ளது. ஜெய்ப்பூர் நகரில் உள்ள சஞ்சய் சர்க்கிள் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேப் ஒன்றை போலீசார் நிறுத்தினர். இதன்பின் ஆவணங்களை பரிசோதித்த போலீசார், அந்த டிரைவருக்கு 1,600 ரூபாய் அபராதம் விதித்து அதற்கான ரசீதை வழங்கினர்.

இதில் அபராதம் விதித்ததற்காக குறிப்பிடப்பட்டிருந்த காரணத்தை பார்த்து, அந்த கேப் டிரைவர் அதிர்ச்சியடைந்து விட்டார். ஆம், செருப்பு அணிந்திருந்தது மற்றும் சட்டை பட்டன்கள் திறந்திருந்தது ஆகியவைதான் அபராதம் விதித்ததற்கான காரணங்களாக அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் நடைபெற்றபோது கேப் டிரைவர் டியூட்டியில் இருந்தார்.

சட்டை பட்டனை போடாததற்காக கேப் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 6ம் தேதியன்று நடைபெற்றுள்ளது. அதாவது புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த உடனேயே நடைபெற்றுள்ளது. இந்த கேப் டிரைவருக்கு ஸ்பாட்டிலேயே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது கோர்ட் சலான் ஆகும்.

அந்த டிரைவர் ஏற்கனவே அபராதத்தை செலுத்தி விட்டாரா? அல்லது அபராதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட போகிறாரா? என்பது தெரியவில்லை. இந்தியாவை பொறுத்தவரை, டியூட்டியில் இருக்கும் கேப் டிரைவர்கள் டிரெஸ் கோடை (Dress Code) பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறை பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது.

கேப் டிரைவர்கள் சீருடை அணிய வேண்டும் மற்றும் ஐடி கார்டை அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளன. ஆனால் யூனிபார்ம் கோடு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. ராஜஸ்தானை பொறுத்தவரை டியூட்டியில் இருக்கும் கேப் டிரைவர்கள் நீல நிற சர்ட் மற்றும் பேண்ட் அணிந்திருக்க வேண்டும். அத்துடன் கேப் டிரைவர்கள் ஷு அணிந்திருப்பதும் அவசியம்.
கேப் டிரைவர்களுக்கு சீருடை இருக்கும் சூழலில், பிரைவேட் கார் டிரைவர்கள் தொடர்பாக விதிமுறை புத்தகத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதே சமயம் இரு சக்கர வாகன ஓட்டிகள் செருப்பு அணிந்து கொண்டு டூவீலரை ஓட்ட முடியாது. செருப்பு அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது சட்ட விரோதமானது.

விதிமுறைகளின்படி இதற்காக இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். ஆனால் இவை திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விதிமுறைகள் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கேப் டிரைவர்கள் சீருடை மற்றும் டூவீலர் ஓட்டும்போது செருப்பு அணிய கூடாது ஆகியவை தொடர்பான விதிகள் பல ஆண்டுகளாகவே உள்ளன. ஆனால் அவற்றை சமீப காலமாகதான் போலீசார் தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








