5ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதம்.. எங்க வந்து முடிஞ்சிருக்கு பாத்தீங்களா! டெல்லியில் அரங்கேறிய ஷாக் சம்பவம்!
மஹிந்திரா நுவோ ஸ்போர்ட், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்த சூப்பரான எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த கார் மாடலைக் கொண்டே, அதன் உரிமையாளர் அவரை எதிர்த்த கும்பலை ஒட்டுமொத்தமாக ஏற்றும் விதமாக செயல்பட்டு இருக்கின்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
பார்ப்போரை பதைபதைக்க செய்யக் கூடிய ஓர் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. சாலையில் கும்பலாக சிலர் சிவப்பு நிற காரை விரட்டிச் செல்ல அந்த கார் திரும்பி வந்து, தன்னை விரட்டியவர்களை ஏற்ற முயலும் வீடியோவே அது ஆகும். இந்த அதிர்ச்சிமிகுந்த சம்பவம் வடக்கு டெல்லியில் உள்ள சிக்னேச்சர் மேம்பாலத்திற்கு அருகிலேயே அரங்கேறியிருக்கின்றது.

மேலும், ஓர் ஐந்து ரூபாய்க்காக தொடங்கிய வாக்குவாதமே இந்த மோசமான மோதலுக்கு வித்திட்டு இருக்கின்றது. சிவப்பு நிற எஸ்யூவி ரக காரில் வந்தவர்கள் சிலர் அந்த கடையில் எந்த பொருளையும் வாங்காமல் தண்ணீர் மட்டும் அருந்தியததாகக் கூறப்படுகின்றது. கிடைத்திருக்கும் தகவல்களின்படி அந்த காரில் இருவர் மட்டுமே வந்திருக்கின்றனர்.
அவர்களே கடையில் தாகத்திற்காக தண்ணீரை கேட்டு வாங்கிக் குடித்திருக்கின்றனர். தண்ணீரை கொடுத்ததற்காக அந்த கடையின் உரிமையாளர் ரூ. 5ஐ கட்டணமாகக் கேட்டிருக்கின்றார். இங்கேயே வாக்குவாதம் தொடங்கி இருக்கின்றது. ரெண்டு கிளாஸ் தண்ணீர் குடித்ததற்கு ரூ. 5 தர வேண்டாமா என அந்த காரில் வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும், அதை தர முடியாது என மறுப்பு தெரிவித்தும் இருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கடைக்காரர் காரில் வந்தவர்களை கடுமையாக வார்த்தைகளால் தாக்கியதாகக் கூறப்படுகின்றது. இதனால் மேலும் கடுப்பாகிய காரில் வந்தவர்கள் கடைக்காரரை தாக்கி இருக்கின்றனர். இதனால், கடைக்காரருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
இதைக் கண்டு அதிர்ந்துபோன அக்கம் பக்கத்துக் கடைக்காரர்கள் சக கடைக்காரரை வெளியூர் காரர்கள் தாக்குவதைக் கண்டு ஆதரவு தெரிவிக்க சென்றிருக்கின்றனர். இது மேலும் முற்றவே அவர்கள் அனைவரும் இணைந்து காரில் வந்தவர்களை தாக்க முற்பட்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே அங்கிருந்து தப்பியோடிய அவர்கள் காரை கொண்டு தங்களை தாக்க முயன்றவர்களை ஏற்ற முயன்றிருக்கின்றனர்.

இருப்பினும், அந்த பகுதி வாசிகள் காரில் வந்தவர்களை விட்டதாகத் தெரியவில்லை. உருட்டு கட்டை, சாலையில் இருந்து கற்கள் ஆகியவற்றைக் கொண்டு காரையும், காருக்குள் இருந்தவர்களையும் தாக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதில் கார் கடுமையாக சேதமடைந்தது. மேலும், காருக்குள் இருந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
ஒன்றிற்கு, இரண்டு முறை திரும்பி வந்து காரை வைத்து தன்னை தாக்க வந்தவர்களை ஏற்ற முயற்சித்திருக்கின்றனர். ஆனால், நிலைமை மோசமாகியதை அடுத்து கார் அங்கிருந்து யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சென்றது. இத்தகைய மோசமான செயல் குறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

கடைக்காரர்கள் கொடுத்த புகாரின்பேரில் அந்த சிவப்பு நிற காரையும், அதில் வந்தவர்களையும் போலீஸார் தேடத் தொடங்கி இருக்கின்றனர். மோதலுக்கு பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா நுவோ ஸ்போர்ட் எஸ்யூவி கார் மாடல் ஆகும். இந்த எஸ்யூவி கார் தற்போது சந்தையில் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேவேளையில், இதுபோன்று வாகனங்களை வைத்து மோதல் சம்பவங்களை நிகழ்த்துபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால், இந்த சம்பவத்திலும் மஹிந்திரா நுவோ ஸ்போர்ட் எஸ்யூவி காரை ஓட்டு வந்தவர் மீது மிக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக, ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டியது, பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது மற்றும் வேண்டும் என்றே பிறர் மீது வாகனத்தை மோத வந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழே அவர்கள் மீது காவல்துறை வழக்கைப் பதிவை செய்திருக்கின்றது. இதன்கீழே நடவடிக்கையையும் அது எடுக்க இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தவித்த வாய்க்கு தண்ணீர் தர வேண்டும் என்பது பழமொழி. இந்த தண்ணீருக்கு விலை கேட்டது தவறுதான். இருப்பினும் இத்தகைய வன்முறையே இரு தரப்பினரும் கையாண்டது மிகப் பெரிய தவறாகும். ஆகையால், காவல்துறை ஒரு தரப்பு மீது மட்டுமின்றி இரு தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









