ஆப்போசிட்ல ஏறி வந்த பஸ்சுக்கு பாடம் புகட்டிய கார் டிரைவர்! இனி எல்லாரும் இதயே பண்ணணும்! அப்பதான் திருந்துவாங்க
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களால் (Road Accidents) பல லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். வானிலை, பழுதான சாலைகள் மற்றும் வாகன பழுது என இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் கூட, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற மறுப்பதே முதன்மையான காரணமாக இருக்கிறது. இதனால் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து, அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மற்றும் பத்திரிக்கைகளும் வாகன ஓட்டிகளுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே உள்ளன. ஆனால் இது இன்னும் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.
குறிப்பாக ராங் சைடில் பயணம் செய்பவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ராங் சைடில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. இதை உணராமல் வாகன ஓட்டிகள் பலரும் ராங் சைடில் பயணம் செய்து கொண்டு உள்ளனர். இது தொடர்பான செய்திகள் பலவற்றை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமே கடந்த காலங்களில் வாசகர்களுக்கு பல முறை வழங்கியுள்ளது.

இந்த வரிசையில் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் ஒரு வைரல் வீடியோ (Viral Video) தற்போது நமது கவனத்திற்கு வந்துள்ளது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், ராங் சைடில் வந்த தனியார் பஸ் ஒன்றுக்கு, கார் டிரைவர் ஒருவர் தக்க பாடம் புகட்டியதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த வைரல் வீடியோவின் தொடக்கத்தில் ராங் சைடு பயணங்கள் தொடர்பான ஒரு சில காட்சிகள் காட்டப்படுகின்றன. அதற்கு பிறகுதான் தற்போது நாம் பேசி கொண்டுள்ள சம்பவம் வருகிறது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்றால், ஒரு குறுகலான சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பஸ்ஸின் டிரைவர் தனக்கு முன்னால் சென்று வாகனத்தை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்பதற்காக எதிர் திசையில் இருந்த லேனுக்கு வந்து விட்டார். அவர் வந்தது தவறான லேன். அதாவது ராங் சைடில் வந்து விட்டார். அந்த லேனில் அவர் பஸ்ஸை இயக்கியிருக்க கூடாது.
இது சரியான லேனில் வந்து கொண்டிருந்த கார் டிரைவருக்கு பிரச்னையை ஏற்படுத்தி விட்டது. அதாவது அவரால் முன்னோக்கி செல்ல முடியவில்லை. இந்த சம்பவத்தில் முழுக்க முழுக்க தவறு பஸ் டிரைவருடையதுதான். எனவே அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என கார் டிரைவர் விரும்பினார். இதற்காக அவர் என்ன செய்தார்? என்பதுதான் ஹைலைட்.
பஸ் ராங் சைடில் வந்த காரணத்தால், காருக்கு மிக நெருக்கமாக வந்து நின்றது. எனவே கார் டிரைவர் வழி விட்டால் மட்டுமே, அந்த பஸ்ஸால் முன்னோக்கி செல்ல முடியும் என்ற சூழல் இருந்தது. இல்லாவிட்டால் பஸ் டிரைவர் ரிவர்ஸில் சென்ற பிறகுதான் மீண்டும் சரியான லேனுக்கு வர முடியும்.
ஆனால் கார் டிரைவர் பஸ்சுக்கு வழி விடவில்லை. காரை அப்படியே நிறுத்தி கொண்டார். எனவே பஸ் டிரைவர் ரிவர்ஸில் சென்று, பிறகு மீண்டும் சரியான லேனுக்கு வந்தார். இதன் மூலம் பஸ் டிரைவருக்கு, கார் டிரைவர் தக்க பாடத்தை புகட்டியிருப்பதாக சமூக வலை தளங்களில் பலரும், பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனியார் பஸ் டிரைவர்களுக்கு நேரம் மிக மிக முக்கியம். நேரம் தொடர்பாக பஸ் ஸ்டாண்டுகளில், டிரைவர்களும், கண்டக்டர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் பலவற்றை நீங்கள் நேரில் பார்த்திருக்கலாம். எனவே நேர பிரச்னையை சமாளிப்பதற்காக தனியார் பஸ் டிரைவர்கள் மின்னல் வேகத்தில் பஸ்களை இயக்குகின்றனர்.
அப்போது ராங் சைடில் வந்து, மறுபக்கம் வரும் வாகனங்களுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்றனர். சில சமயங்களில் தனியார் பஸ் டிரைவர்கள் எதிர் திசையில் ஏறி வருவதால், மறுபக்கம் வரும் வாகனங்கள் சாலையோரமாக இருக்கும் பள்ளங்களில் இறங்க வேண்டிய அளவுக்கு சூழல் மோசமாகிறது. இது பயங்கரமான சாலை விபத்துக்களுக்கு வழி வகுக்கும் என்பதை பஸ் டிரைவர்கள் உணர வேண்டிய நேரமிது.


Click it and Unblock the Notifications








