கார்ல இந்த பட்டனை எதுக்கு குடுக்கறாங்க தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய விஷயங்கள் மறஞ்சிருக்கா!
தொழில்நுட்பம் நன்றாக வளர்ச்சியடைந்து விட்ட இன்றைய காலகட்டத்தில், கார்களில் (Cars) நமது வசதிக்காக பல்வேறு அதிநவீன வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன. இதில் ஒரு சில வசதிகள் எதற்காக வழங்கப்படுகின்றன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது, அந்த கார்களின் உரிமையாளர்களுக்கே தெரிவதில்லை.
எனவே கார் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு பயன்படும் வகையில், பல்வேறு வசதிகள் பற்றிய விரிவான விளக்கத்தை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வழங்கி வருகிறது. இந்த வகையில், கார்களில் நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு வசதி குறித்த விரிவான தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

பொதுவாக குளிர்காலங்களில் கார்களை ஓட்டுவது மிகவும் கடினம். இந்த காலகட்டத்தில் கார் டிரைவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 'ஜில்' என்று இருக்கும் ஸ்டியரிங் வீலை பிடித்து காரை ஓட்டுவதும் அதில் ஒன்று. மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் ஸ்டியரிங் வீலை பிடித்து காரை ஓட்டுவது அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
கார்கள் பாதுகாப்பாக இயங்குவதில் ஸ்டியரிங் வீல்கள் மிக முக்கியமான பங்கை ஆற்றுகின்றன. அதன் கண்ட்ரோல் சரியாக இல்லாவிட்டால், கோரமான விபத்துக்களை சந்திக்க நேரிடும். குளிர்காலங்களில் நடைபெறும் பல்வேறு விபத்துக்களுக்கு, அதிகப்படியான குளிர்ச்சியால் டிரைவர்கள் ஸ்டியரிங் வீலை சரியாக பிடிக்க முடியாமல் போவதும் ஒரு காரணமாக உள்ளது.

இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக கார்களில் வழங்கப்படும் ஒரு வசதிதான் ஹீட்டட் ஸ்டியரிங் வீல் (Heated Steering Wheel). ஒரு காலத்தில் சொகுசு கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த வசதியை தற்போது சாதாரண கார்களில் கூட பார்க்க முடிகிறது. அதிக குளிரான சூழல்களில் காரை ஓட்டும்போது, டிரைவர்களுக்கு இந்த வசதி பேருதவி செய்கிறது.
குளிர் காலங்களிலும், அதிக குளிர் நிலவும் பகுதிகளிலும் காரை ஓட்டும்போது, இந்த வசதி உங்கள் கைகளை வெதுவெதுப்பாக வைத்திருக்கும். ஸ்டியரிங் வீலுக்கு உள்ளே வழங்கப்பட்டிருக்கும் சூடாக்கும் கருவிதான் இதற்கு காரணம். இது நீண்ட நேரத்திற்கு ஸ்டியரிங் வீலை சூடாக வைத்திருக்கும். எனவே நீங்கள் சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் காரை ஓட்டலாம்.
நாங்கள் ஏற்கனவே கூறியபடி, குளிரான சூழல்களில் வெறும் கையில் காரை ஓட்டுவது சவாலான விஷயம். எனவே ஒரு சிலர் 'க்ளவுஸ்' அணிந்து கொண்டு கார் ஓட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் 'க்ளவுஸ்' அணியும்போது சரியான அளவில் 'க்ரிப்' கிடைப்பதில்லை என்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன.
இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் சரியான ஒரு தீர்வாகதான் 'ஹீட்டட் ஸ்டியரிங் வீல்' வசதி இருக்கிறது. குளிர்காலங்களில் கார் ஓட்டும்போது 'க்ளவுஸ்' அணிய வேண்டிய தேவையையும் இது நீக்குகிறது. கார்களில் 'ஹீட்டட் ஸ்டியரிங் வீல்' வசதி எதற்காக வழங்கப்படுகிறது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
தொழில்நுட்ப வளர்ச்சியால் கார்களில் வழங்கப்படும் வசதிகள், நமது டிரைவிங் அனுபவத்தை சொகுசாக மாற்றுகின்றன. ஆனால் அறியாமை காரணமாக இந்த வசதிகளில் பலவற்றை நிறைய பேர் பயன்படுத்துவதில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம். கார்களில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் பற்றிய சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம்.


Click it and Unblock the Notifications