கார் நிறுவனங்களின் சின்னங்களும், அதன் வியக்க வைக்கும் சுவாரஸ்யங்களும்...!!

By Saravana

ஒவ்வொரு கார் நிறுவனமும் தனது பிராண்டை பிரபலப்படுத்தவும், வர்த்தகத்தில் தனி அடையாளத்தை ஏற்படுத்தவும் லோகோ எனப்படும் பிரத்யேக அடையாளச் சின்னங்களை பயன்படுத்துகின்றன.

ஆனால், அந்த அடையாளச் சின்னங்களை சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்கள் வடிவமைத்ததற்கான காரணங்கள் அல்லது அதன் வடிவம் ஆகியவற்றின் பின்னால் பல சுவாரஸ்யத் தகவல்கள் ஒளிந்திருக்கின்றன. அப்படி என்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன என்பதை ஸ்லைடரில் வந்து பார்க்கலாம்.

01. மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ

01. மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ

உலகம் முழுவதும் பிரபல்யமான கார் நிறுவனத்தின் சின்னங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மூன்று முனை நட்சத்திர அமைப்பு கொண்ட சின்னத்தை பலர் தங்களது அந்தஸ்தாக கருதுகின்றனர். ஆனால், அதன் பின்னால் இருக்கும் விஷயத்தை அடுத்த ஸ்லைடில் படித்து ஆச்சரியப்படுவீர்கள்.

பென்ஸ் லோகோ தொடர்ச்சி...

பென்ஸ் லோகோ தொடர்ச்சி...

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டெய்ம்லர் குழுமம், நீர், நிலம், ஆகாயம் என மூன்றிற்குமான மோட்டார் வாகனங்களை தயாரிப்பதை குறிப்பதற்காக மூன்று முனை கொண்ட நட்சத்திர அமைப்பு. அப்படியே பக்கத்தில் உள்ள லோகோவை பாருங்கள். ஒன்று ஆகாயத்தை குறிப்பிடும் வகையில் மேல்நோக்கியும், நிலம், நீர் ஆகியவற்றை குறிப்பிடுவதற்கு இரு முனைகள் சற்று சரிந்த நிலையில் கீழ் நோக்கியும் இருக்கின்றன.

02. ஆடி லோகோ

02. ஆடி லோகோ

கார் நிறுவனங்களின் சின்னங்களில் மிகவும் சிறப்பான வடிவமைப்பு கொண்டது ஆடி லோகோ. 4 வளையங்கள் இணைந்திருப்பது போன்ற இந்த லோகோவின் பின்னால் இருக்கும் சுவாரஸ்யம் என்ன தெரியுமா? அடுத்த ஸ்லைடுக்கு வந்துவிடுங்கள்.

ஆடி லோகோ தொடர்ச்சி...

ஆடி லோகோ தொடர்ச்சி...

ஆடி, ஹார்ச், டிகேடபிள்யூ மற்றும் வான்டரர் என வெவ்வேறு கார் நிறுவனங்களை இணைத்து உருவாக்கப்பட்டதுதான் ஆடி நிறுவனம். 4 நிறுவனங்களை உள்ளடக்கி, இணைந்ததை குறிப்பிடும் வகையில்தான் இந்த 4 வளையங்கள் இணைந்த லோகோ. இதில், ஆடி மற்றும் ஹார்ச் நிறுவனங்களை உருவாக்கியவர் ஆகஸ்ட் ஹார்ச். ஆட்டோமொபைல் பொறியியல் உலகின் பிதாமகன்களில் ஒருவராக இவர் குறிப்பிடப்படுகிறார்.

03. பிஎம்டபிள்யூ லோகோ

03. பிஎம்டபிள்யூ லோகோ

ஜெர்மனியின் ஒரு மாகாணமான பவேரியாவை சேர்ந்ததுதான் பிஎம்டபிள்யூ நிறுவனம். எனவே, அந்த மாகாணத்தின் அதிகாரப்பூர்வ கொடியின் வண்ணத்தை அடிப்படையாக கொண்டதுதான் இந்த லோகோ. மேலும், பவேரிய அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வண்ணங்களாக நீலம் மற்றும் வெள்ளை பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை, சக்கரங்களின் உள்ளிருக்கும் விசிறி போன்ற அமைப்பு விமான எஞ்சினை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 பிஎம்டபிள்யூ தொடர்ச்சி...

பிஎம்டபிள்யூ தொடர்ச்சி...

படத்தில் நீங்கள் பார்ப்பது ராப் மோட்டார் நிறுவனத்தின் லோகோ. ராப் மோட்டார்தான் 1917ல் பிஎம்டபிள்யூ நிறுவனமாக மாறியது. பிஎம்டபிள்யூவின் லோகோவின் சக்கர வடிவம் இந்த லோகோவை அடிப்படையாக கொண்டிருப்பதை பார்க்கலாம். 1913ல் ராப் மோட்டார்ஸ் துவங்கபப்பட்டது. பல்வேறு மாற்றங்களுக்கு பின்னர் பிஎம்டபிள்யூவாக மாறியது.

 04. லம்போர்கினி லோகோ

04. லம்போர்கினி லோகோ

பெருஷியோ லம்போர்கினி ரிஷப ராசிக்கான எருது சின்னத்தை தனது நிறுவனத்தின் அடையாளச்சின்னமாக கொண்டு உருவாக்கினார். அந்த சின்னத்தை பற்றிய கூடுதல் சுவாரஸ்யங்களை அடுத்த ஸ்லைடில் காத்திருக்கின்றன.

 லம்போர்கினி லோகோ தொடர்ச்சி...

லம்போர்கினி லோகோ தொடர்ச்சி...

லோகோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தங்க வண்ணம் நீண்ட பாரம்பரியம் கொண்ட நிறுவனம், உயர் தரத்தையும் வெளிப்படுத்துகிறது. பின்னால் இருக்கும் கருப்பு வண்ணம் சக்தியையும், அந்தஸ்தையும் குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி நாட்டின் பராம்பரிய எருது விளையாட்டை குறிக்கும் வகையில், கடுஞ்சினம் கொண்ட காளைமாடு முக்கிய சின்னமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

05. ஃபெராரி லோகோ

05. ஃபெராரி லோகோ

கனவு பிராண்டாக இருக்கும் ஃபெராரியின் அடையாளச்சின்னத்தில் முக்கியமாக இடம்பெற்றிருப்பது துள்ளும் குதிரை சின்னம். இந்த குதிரைச்சின்னத்தின் பின்னால் ஒரு வீரனின் கதை பொதிந்திருக்கிறது.

ஃபெராரி லோகோ தொடர்ச்சி...

ஃபெராரி லோகோ தொடர்ச்சி...

முதலாம் உலகப் போரில் இத்தாலி நாட்டின் வீரதீரமான போர் விமான ஓட்டியாக செயல்பட்ட பராக்கா என்பவர் தனது விமானத்தின் இருபுறத்திலும் பயன்படுத்திய துள்ளும் குதிரைச் சின்னத்தையே ஃபெராரி நிறுவனர் என்ஸோ தனது நிறுவனத்தின் அடையாளச் சின்னமாக்கினார். பராக்கா விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவரது வீரதீரத்திற்கு மரியாதை செலுத்தும் விதத்தில், ஃபெராரி சின்னத்தில் இருக்கும் குதிரை கருப்பு வண்ணத்தில் இருப்பதை காணலாம்.

06. போர்ஷே லோகோ

06. போர்ஷே லோகோ

1950களில் போர்ஷே நிறுவனத்திற்கு புதிய அடையாளச் சின்னத்தை வடிவமைக்க பெர்டினான்ட் போர்ஷே மற்றும் அவரது மகன் ஃபெர்ரி முடிவு செய்தனர். அதற்காக, வடிவமைக்கப்பட்ட போர்ஷே சின்னத்தின் ஸ்பெஷல் என்ன, அடுத்த ஸ்லைடில் காணலாம்.

போர்ஷே லோகோ தொடர்ச்சி...

போர்ஷே லோகோ தொடர்ச்சி...

ஜெர்மனியின், ஸ்டட்கர்ட் பகுதியில் குதிரை வளப்புப் பண்ணையாக இருந்த இடத்தில்தான் போர்ஷே கார் நிறுவனம் அமைக்கப்பட்டது. அதனை நினைவூட்டும் வையில், குதிரை உருவத்துடன் போர்ஷே லோகோ வடிவமைக்கப்பட்டது.

07. ஃபோக்ஸ்வேகன் லோகோ

07. ஃபோக்ஸ்வேகன் லோகோ

அடையாளச்சின்னத்தை மட்டும் பார்த்து கார் வாங்குவோராக இருந்தால், அது நிச்சயம் ஃபோக்ஸ்வேகன் வாடிக்கையாளராக, ரசிகராக மட்டுமே இருக்க முடியும். இந்த சிறப்பான லோகோவை வடிவமைத்தவர் பற்றி இருமாறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன. ஒருசாரார் இந்த லோகோவை போர்ஷே நிறுவனத்தின் ஊழியர் பிரான்ஸ் ஸேவர் வடிவமைத்ததாகவும், மற்றொரு சாரார் இதனை மார்ட்டின் ப்ரேயர் என்பவர் வடிவமைத்ததாகவும் கூறுகின்றனர்.

 ஃபோக்ஸ்வேகன் லோகோ தொடர்ச்சி...

ஃபோக்ஸ்வேகன் லோகோ தொடர்ச்சி...

லோகோவில் இடம்பெற்றிருக்கும் நீல வண்ணம் உயர்தரத்தை குறிப்பிடுகிறதாம். வெள்ளை நிறம் தூய்மையையும், மகிழ்ச்சியையும் குறிப்பிடுகிறதாம். 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் இந்த லோகோவின் வண்ணம் மற்றும் முப்பரிமாணத்தில் மாற்றி அறிமுகம் செய்யப்பட்டது.

 08. வால்வோ லோகோ

08. வால்வோ லோகோ

வால்வோவின் அடையாளச்சின்னம் ஆண் பாலினத்தை குறிக்கும் விதத்தில் இருக்கிறது. இதனை கார்ல் எரிக் பார்ஸ்பெர்க் என்ற கையெழுத்துக்கலை நிபுணர் கையால் வரைந்து உருவாக்கியதாக கூறுகின்றனர்.

வால்வோ லோகோ தொடர்ச்சி...

வால்வோ லோகோ தொடர்ச்சி...

வால்வோ சின்னத்தை மட்டுமின்றி, அதன் பெயரில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. வால்வோ என்றால் நகர்வு என்று பொருள்படுகிறதாம்.

 09. ஜாகுவார் லோகோ

09. ஜாகுவார் லோகோ

ஜாகுவாரின் பாயும் சிறுத்தை லோகோவுக்கு உலக அளவில் தனி மதிப்பும், அடையாளமும் இருக்கிறது. வேகம், வலிமை, சக்தி இவற்றை குறிப்பிடும் வகையில், பாயும் சிறுத்தை லோகோவை ஜாகுவார் பயன்படுத்துகிறது. இந்த லோகோவிற்கு பின்னால் இருக்கும் விஷயங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 ஜாகுவார் லோகோ தொடர்ச்சி...

ஜாகுவார் லோகோ தொடர்ச்சி...

ஜாகுவார் சின்னத்தில் இருக்கும் கருப்பு நிறம் நேர்த்தியான வடிவமைப்பையம், உயர் செயல்திறன் மிக்கதாக குறிப்பிடுகிறது. சாம்பல் வண்ணம் மற்றும் தங்க நிறம் நிறுவனத்தின் நவீன தொழில்நுட்ப வல்லமை,கச்சிதமான டிசைன் போன்றவற்றை குறிக்கிறது.

 10. ஆல்ஃபா ரோமியோ

10. ஆல்ஃபா ரோமியோ

1910ம் ஆண்டு இந்த லோகோவை ஆல்ஃபா ரோமியோ கார் நிறுவனம் பெற்றது. ஆல்ஃபா ரோமியோ நிறுவனத்தின் லோகோவின் இடதுபுறம் அந்நிறுவனத்தின் தலைமையகமான மிலன் நகரை குறிப்பிடும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், வலது பக்கம் டிசைனில் என்ன மறைந்திருக்கிறது. அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

 ஆல்ஃபா ரோமியோ தொடர்ச்சி...

ஆல்ஃபா ரோமியோ தொடர்ச்சி...

ஒரு மனிதனை பாம்பு விழுங்குவது போன்று தோற்றமளிக்கிறது. ஆனால், ஒரு மனிதன் மீண்டு வருவதாகவும் காரணம் கற்பிக்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் தோலுரித்து, தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பாம்பு போல ஆல்ஃபா ரோமியோ தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் இந்த லோகோ உருவாக்கப்பட்டதாம்.

 

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Carmaker logos usually have an interesting story to tell, which is why we thought we'd take you for a little historical tour through the stories behind some of world's most famous and much-loved emblems. We've included some great pictures of older-gen cars from these manufacturers, so read on and enjoy!
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more