கார் நிறுவனங்களின் லோகோவும், அதன் உண்மைகளும்!!

பல ஆயிரம் கோடி முதலீட்டில் கார் நிறுவனங்களுக்கு அடையாளம் தருவது என்னவோ அதன் பிராண்டை பிரதிபலிக்கும் லோகோ எனப்படும் சின்னங்கள்தான்.

தங்களது அடையாளச் சின்னங்களை உருவாக்குவதற்கு கோடிகளை கொட்டி கொடுத்து உருவாக்கிய நிறுவனங்கள் பல உண்டு. அந்த வகையில், கார் நிறுவனங்களுக்கு அடையாளம் தரும் சின்னங்கள் பற்றிய ஸ்லைடரில் காணலாம். இந்தியாவில் பிரபலமாக திகழும் செவர்லே, ஃபோர்டு, ரெனோ உள்ளிட்ட பிராண்டுகளின் அடையாளச் சின்னங்கள் பற்றிய தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

01. செவர்லே

01. செவர்லே

உலக அளவில் பிரபலமான செவர்லே லோகோவை அதன் இணை நிறுவனர் வில்லியம் சி.துரந்த் மூலமாக உருவானது. 1913ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிரான்ஸில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த வால்பேப்பரின் கண்டு வியந்து அதன் அடிப்படையிலேயே இந்த போ - டை லோகோவை அவர் உருவாக்கியதாக கூறப்படுகிறது.

செவர்லே தொடர்ச்சி...

செவர்லே தொடர்ச்சி...

1961ம் ஆண்டு செவர்லே பிராண்டின் பொன்விழாவுக்காக வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் செவர்லே லோகோ உருவான வரலாறு குறித்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், 1986ல் துரந்த் மனைவி கேத்தரின் அளித்த பேட்டி ஒன்றில், நாளிதழில் வெளியான விளம்பரத்தில் போ- டை போன்ற விளம்பரத்தை பார்த்தே செவர்லே லோகோ உருவாக்கப்பட்டதாக நினைவுகூர்ந்தார். ஆனாலும், செவர்லே பிராண்டு சின்னம் உருவானதற்கு இன்னும் பிற காரணங்களும் கற்பிக்கப்படுகிறது. இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

02. ரெனோ லோகோ

02. ரெனோ லோகோ

பிரான்ஸ் நாட்டு நிறுவனம் ரெனோவின் லோகோவும் உலக அளவில் பிரபலமானது. இந்தியாவில் டஸ்ட்டர் மூலம் எட்டுத் திக்கும் இந்த லோகோவுக்கு தனி மரியாதை கிட்டியிருக்கிறது. 1900ம் ஆண்டில் ரெனோ நிறுவனத்தின் முதல் லோகோ வெளியிடப்பட்டது. ஆனால், வைரம் போன்ற தோற்றம் கொண்ட தற்போதைய லோகோவிற்கான வித்து 1925ல் வெளியிடப்பட்டது. 1972ல் பிரபல டிசைனர் விக்டர் கைவண்ணத்தில் ரெனோ லோகோ பெரிய அளவிலான மாற்றத்தை கண்டது.

ரெனோ லோகோ தொடர்ச்சி...

ரெனோ லோகோ தொடர்ச்சி...

ரெனோ லோகோவின் சதுரமான கட்டத்தின் பின்னணியில் இருக்கும் மஞ்சள் வண்ணம் செழிப்பு, ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை போன்றவற்றையும், சில்வர் வண்ணத்திலான வைர கல் போன்ற தோற்றம் நேர்த்தி, நவீனம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றையும் உணர்த்துகிறது.

03. ஸ்கோடா ஆட்டோ

03. ஸ்கோடா ஆட்டோ

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோவின் பிராண்டு சின்னமும் பாரம்பரியம் மிக்கது. 1923ல் உருவானதாக ஆட்டோமொபைல் வரலாற்றுத் தகவல்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. 1923ல் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு இயக்குனராக இருந்த ஸென். டி எண்ணத்தில் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்கோடா ஆட்டோ லோகோ தொடர்ச்சி...

ஸ்கோடா ஆட்டோ லோகோ தொடர்ச்சி...

கருப்பு நிறம் கொண்ட வளையத்திற்குள் றெக்கைகள் கொண்ட அம்பு பறப்பது போன்ற அமைப்பை கொண்டிருக்கிறது. கருப்பு நிறம் நிறுவனத்தின் 100 ஆண்டுகால பாரம்பரியத்தையும், பச்சை நிற பறவை போன்ற அம்பு சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பாகவும் குறிப்பிடுகிறது.

04. மிட்சுபிஷி லோகோ

04. மிட்சுபிஷி லோகோ

ஜப்பானிய மொழியில் மிட்சு என்றால் மூன்று என்று பொருள். ஹிஷி என்ற நீர் கொம்பு விதையை குறிப்பிடும் வகையில் மூன்று நீர்கொம்பு விதைகளுடன் அந்த லோகோ உருவானது. ஹிஷி என்ற சொல் பின்னாளில் மருவி பிஷி என்று மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மிட்சுபிஷி நிறுவனத்தை முதல்முதலில் நிறுவிய யட்டாரோ வசாகிதான் இந்த லோகோவை உருவாக்கினாராம்.

மிட்சுபிஷி லோகோ தொடர்ச்சி...

மிட்சுபிஷி லோகோ தொடர்ச்சி...

1980களில் மிட்சுபிஷி நிறுவனரின் சுகுமோ ஷோகாய் என்ற பெயரில் கப்பல் நிறுவனத்தை நடத்தினார். அந்த கப்பல்களின் கொடியில் இடம்பெற்றிருந்த சின்னம்தான் பின்னாளில், மிட்சுபிஷி நிறுவனத்தின் லோகோவிற்கு அடித்தளமாக இருந்தது.

 05. பீஜோ லோகோ

05. பீஜோ லோகோ

பீஜோவின் சிங்க தோற்றம் கொண்ட லோகோவை ஜஸ்டின் பிளேசர் என்பவர் வடிவமைத்தார். 1847ல் பீஜோவின் பிளேடு மற்றும் இதர ஸ்டீல் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 1889ல் முதல்முதலாக ட்ரைசைக்கிள் ஒன்றை வெளியிட்டது. அந்த ட்ரைசைக்கிளிலும் அந்த லோகோ இடம்பெற்றிருந்தது.

பீஜோ லோகோ தொடர்ச்சி...

பீஜோ லோகோ தொடர்ச்சி...

பீஜோ பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த கார்களில் பீஜோ சிங்க சின்னம் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு 1930களில் மாற்றங்கள் செய்யப்பட்டது. சில மாறுதல்களுடன் தற்போதும் இந்த லோகோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிக பழமையும், பாரம்பரியமும் மிக்க கார் லோகோக்களில் பீஜோவினுடையதும் ஒன்றாக நிலைத்து நிற்கிறது.

06. ஹோண்டா

06. ஹோண்டா

விமானம், ரோபோ, கார், மோட்டார்சைக்கிள்,விவசாய போக்குவரத்து சாதனங்கள் என அனைத்து போக்குவரத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் ஹோண்டா கார் நிறுவனத்தின் லோகோ அதன் ஆங்கில பெயரின் முதல் எழுத்தை தாங்கியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எச் என்ற அந்த ஆங்கில எழுத்துக்கு நீடித்த உழைப்பையும், தன்னம்பிக்கையும் குறிப்பதாக ஹோண்டா தெரிவிக்கிறது.

ஹோண்டா லோகோ...

ஹோண்டா லோகோ...

ஹோண்டா கார்களின் லோகோவுக்கும், மோட்டார்சைக்கிள் லோகோவுக்கும் வித்தியாசமுண்டு. றெக்கை அமைப்புடைய லோகோ மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு வேகம், செயல்திறனை குறிப்பதாக ஹோண்டா தெரிவிக்கிறது.

07. சிட்ரோவன்

07. சிட்ரோவன்

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வாகனங்களுக்கு அடிப்படையான ஹெலிக்கல் கியரை உருவாக்கிய சிட்ரோவன் நிறுவனத்தின் லோகோ ராணுவ வீரர்களின் உடுப்பில் இருக்கும் இரட்டை பட்டை போன்ற அமைப்புடையது.

சிட்ரோவன் தொடர்ச்சி...

சிட்ரோவன் தொடர்ச்சி...

ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய பட்டைகள் போன்று பயன்படுத்தப்பட்ட இரட்டை பட்டை சின்னம் பின்னர் ஸ்லிம்மாக மாற்றம் செய்யப்பட்டது.

08. மினி பிராண்டு

08. மினி பிராண்டு

மினி பிராண்டின் லோகோவும் மிக பிரிமியமான உணர்வை தருகிறது. நடுவில் வட்ட வடிவில் அமர்ந்திருக்கும் மினி என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய சின்னமும், அதன் இருபுறத்திலும் றெக்கை போன்ற அமைப்பும் உள்ளது. கருப்பு நிறம் புதுமை, வலிமை, நேர்த்தி, பிரத்யேகம் போன்றவற்றை குறிக்கிறது. சில்வர் நிறம் நவீனம், அந்தஸ்தை குறிக்கிறது.

மினி லோகோ

மினி லோகோ

ஆனால் பின் நாட்களில் மினி பிராண்டின் லோகோவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலத்திற்கு தகுந்தாற்போல் லோகோவையும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு கார் நிறுவனங்கள் தள்ளப்படுவதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

09. ஃபோர்டு

09. ஃபோர்டு

உலக ஆட்டோமொபைல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்திருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் லோகோவும் அனைவரையும் ஈர்க்கும் அமைப்பு கொண்டது. கருநீல வண்ண பின்னணியும், முட்டை வடிவிலான ஃபோர்டு அடையாளம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படுகிறது. 1906ல் முதல்முறையாக ஃபோர்டு நிறுவனத்துக்கான லோகோ உருவாக்கப்பட்டது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

1927ல் நீல வண்ண பின்னணியும், முட்டை வடிவிலான லோகோ ஃபோர்டு மாடல் ஏ காரில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் சிறு மாறுதல்களுடந் 1970கள் வரை பயன்படுத்தப்பட்டது.1976ல் ஃபோர்டு லோகோவில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்தது. அதே லோகோதான் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

கால மாற்றத்திற்கு தகுந்தாற்போல் எவ்வாறு கார்களின் டிசைனில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ, அதேபோன்று, தங்களின் அடையாளச் சின்னமாகிய லோகோவுக்கும் கார் நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
In our second visit to the history books of these vital brand identities, we bring you the lowdown on the stories of ten carmakers, including Chevrolet, Renault, Citroen, Ford, and much more.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X