புதிய கலப்பின கார்கள் எப்படியிருக்கும்? கார்வாவ் வெளியிட்ட படங்கள்!

By Saravana

உங்களுக்கு பிடித்தமான இரண்டு கார் மாடல்களை இணைத்து ஒரு கார் மாடலை உருவாக்கினால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இது சாத்தியப்படுமா என்பதே பலரது கேள்வியாக இருக்கும்.

இந்த கேள்விக்கு விடைதேடும் வகையில், கார்வாவ் என்ற தளத்தை சேர்ந்தவர்கள் பிரபல கார் மாடல்களை ஃபோட்டோஷாப் மிக்சியில் போட்டு அடித்து புதிய மாடல்களாக வெளியிட்டுள்ளனர். அதில், பெரும்பாலான மாடல்கள் உவ்வே ரகத்தில் இருக்கின்றன.


அசத்தலாக இருக்குமா?

அசத்தலாக இருக்குமா?

பிரபலமான மாடல்களை ஒன்று சேர்த்தவுடன் மிக அழகான ஒரு கார் டிசைன் உருவாகிவிடும் என்று எதிர்பார்த்து வந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதில், பல கார் மாடல்கள் முகத்தை சுளிக்க வைக்கின்றன. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் எந்தெந்த கார் மாடல்களை சேர்ந்து புதிய கார் மாடல்களை உருவாக்கினர் என்பதையும், படங்களையும் காணலாம்.

 லம்போடோமிக்

லம்போடோமிக்

பிரபல லம்போர்கினி மியூரா, ஏரியல் ஆட்டம் ஆகிய கார்களை ஒன்றிணைத்து புதிய காரை உருவாக்கினர். அது எப்படி இருக்கிறது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

போர்ஷியாக் டபிள்யூடபிள்யூ ஆர்எஸ்

போர்ஷியாக் டபிள்யூடபிள்யூ ஆர்எஸ்

போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் மற்றும் போன்டியாக் அஸ்டெக் கார்களை இணைத்து உருவாக்கியுள்ளனர். இது நிச்சயமாக ஒரு வித்தியாசமானதாகவே தோன்றுகிறது.

ஹமி

ஹமி

ஹம்மர் எச்1 மற்றும் மினி காரை சேர்த்து உருவாக்கினால் எப்படியிருக்கும் என்பதை கார்வாவ் நிறுவனத்தினர் கற்பனையில் உருவான மாடலை படத்தில் காணலாம். ஒருவேளை இன்னும் கொஞ்சம் ஃபோட்டோஷாப்பில் மெனக்கெட்டிருந்தால் ஹம்மரை இன்னும் கொஞ்சம் மென்மையாக மாற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

 அஸ்டன் ஸ்மார்ட்டின்

அஸ்டன் ஸ்மார்ட்டின்

அஸ்டன் மார்ட்டின் ரேபிட் மற்றும் ஸ்மார்ட் ஃபார் டூ ஆகிய கார்களின் டிசைனை ஒருங்கிணைத்து பார்த்ததன் விளைவை படத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிசைனாக மாறியுள்ளது.

மஸ்தாஃபென்டா

மஸ்தாஃபென்டா

லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி மற்றும் மஸ்தா எம்எக்ஸ்- 5 மியாட்டா கார்கள் அதனதன் வழியில் சிறப்பான மாடல்கள். அது இரண்டையும் பிடித்து வந்து போட்டோஷாப்பில் குலுக்கி எடுத்து ஒரு புதிய மாடலாக உருவாக்கியுள்ளனர்.

ரன்கெரினி

ரன்கெரினி

லம்போர்கினி அவென்டேடார் மற்றும் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிகளை ஒருங்கிணைத்து பார்த்ததன் விளைவுதான் இது. லம்போர்கினி நிறுவனம் உரஸ் என்ற எஸ்யூவியை வடிவமைத்து வரும் நிலையில், சூப்பர் கார் மற்றும் சூப்பர் எஸ்யூவி கலப்பினத்தில் உருவான இந்த புதிய எஸ்யூவி டிசைன் எப்படியிருக்கிறது என்று கேட்டால் ஜீரணிக்க முடியவில்லை.

கலப்பு கார்கள்... ஒரு ஃபோட்டோஷாப் முயற்சி

படங்களில் பார்த்த கார்களை யாராவது வடிவமைத்து வாங்கியிருந்தால் கூட, வித்தியாசமாக இருக்குமே தவிர, அது முழு மனநிறைவை தராது என்றே தோன்றுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 19, 2014, 9:58 [IST]
English summary
Ever thought how a resulting car would look like by combining two of your favourite cars? It's tough to imagine it in our minds, but the guys from Carwow have made it easier by coming out with 6 photoshopped images of weird looking car, by combining the most unlikely of models. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+