சீக்கிரமா உங்க காருல இதை செய்யுங்க... இல்லனா நீங்க நிச்சயம் கம்பி என்ன வேண்டியிருக்கும்...
உங்க காரை ஆல்டர் செஞ்சிருக்கீங்களா அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான். சீக்கிரமா உங்க காருல இதை செஞ்சிடுங்க. இல்லனா நீங்க நிச்சயம் கம்பி எண்ணக்கூடிய சூழல் உண்டாகும்.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் உள்ள மக்களுக்கு, வாகனம் என்பது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. தற்போதைய காலகட்டத்தில் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் வேலைக்கு சென்று வருவது என்பது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. ஏனென்றால் வளர்ந்து வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வாகனங்களால், சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுத்துறை வாகனங்களை நம்பி வேலைக்குச் சென்றால், அந்த நாளே நமக்கு கடைசி நாளாக மாறிவிடும்.

இதனால் அலுவலகம் செல்பவர்கள் தங்களின் தேவைக்கேற்ப வாகனங்களை வாங்கிக்கொள்கின்றனர். முந்தைய காலகட்டத்தில் வீட்டுக்கு ஒரு வாகனத்தைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. ஆனால், தற்போது எனக்கு ஓர் கார், என் மனைவிக்கு ஓர் கார், என் பசங்க ஸ்கூலுக்கு போயிட்டு வர ஒரு கார் என ஏகப்பட்ட கார்களை வாங்கிக் குவித்து கொள்கின்றனர்.

மேலும், சிலர் ஆடம்பரம் என்னும் வீண் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு கார்களை வாங்கி குவித்து தள்ளுகின்றனர். அவ்வாறு வாங்கப்படும் கார்களை சிலர் தங்களின் தேவைக்கேற்ப ஒரு சில மாற்றங்களைக் கார் கம்பெனியிடமே கேட்டு பெற்றுக் கொள்கின்றனர். அதற்கான பதிவுகளும் ஆர்சி புத்தகத்தில் பதியப்படுகிறது.

கார் மற்றும் பைக்குகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அந்தந்த நாட்டின் சாலைகளுக்கேற்ப எஞ்ஜின், வேகம், வடிவம் ஆகியவற்றை கட்டமைத்து விற்பனை செய்கின்றன. இதைத்தவிர்த்து, அரசு விதித்த விதிகளின்கீழ், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப ஓர் சில மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை வழங்குகிறது.

அவ்வாறு செய்யப்படும் மாற்றங்களை ஆர்சி புக் மூலம் பதிவுசெய்து தரவுகளைச் சேகரித்து வைத்துக்கொள்கிறது. ஆனால், வாகனச் சட்டத்தில் விதிக்கப்பட்ட விதிகளை மீறி இந்தியாவில் உள்ள சில இளைஞர்கள் தங்களது கார்களை ஸ்போர்ட்ஸ் ரக கார்களைப் போல மாற்றியமைத்துக் கொள்கின்றனர்.

அதன்படி, காரின் வெளிப்புறத் தோற்றம், எஞ்ஜின் மற்றும் ஒலிப்பான் ஆகியவற்றை மாற்றியமைத்து கொள்கின்றனர். அவ்வாறு ஆல்டர் செய்யப்படும் வாகனங்கள், சாலையில் செல்லும்போது அதீத வேகத்துடன் காது நரம்பை கிழிக்கும் அளவுக்கு தாருமாறாக பறக்கின்றன.

தங்களின் கெத்துக்காக இவற்றை மாற்றியமைக்கும் இளைஞர் அரசின் அனைத்து உத்தரவுகளையும் மீறி சட்டவிரேதமாக எஞ்ஜினை டியூன் செய்து. ஒலிப்பான் அளவையும் மாற்றியமைத்து விடுகின்றனர். இதன் காரணமாகவே சாலையில் பெருமளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும், கார்களின் வெளிப்புறத் தோற்றத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு முற்றிலுமாக ஆல்டர் செய்து விடுவதால் காரின் உண்மைத் தன்மையை அழிக்கப்படுகிறது. இது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும்.

இவ்வாறு வாகனங்களை சட்டவிரோத மாற்றியமைப்பதால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், பல குற்றப் பின்னணிகளை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்பாட்டை தவிர்க்கும் விதமாக உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண் மிஷ்ரா மற்றும் வினீத் சரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "வாகனங்களின் உண்மை தன்மையை அழிக்குமாறு மாற்றம் செய்வது குற்றம் என்றும், சிறு சிறு மாற்றங்கள் செய்யப்படுமானால் அவற்றை ஆர்சி புத்தகத்தில் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்" எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், வாகனத்தின் தோற்றம் மாற்றம் என்பது சட்டவிரோதமானது என்பதைக் குறிப்பிட்டு, "ஒரு வாகனம் அதன் திறன், சாலைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டுத் தான் வடிவமைக்கப்படுகிறது. இவற்றைப் பாதிக்கும் எந்தவொரு மாற்றமும் ஏற்புடையதல்ல" எனத் தீர்ப்பளித்தனர்.


Click it and Unblock the Notifications








