0001 என்ற பதிவெண் அதிக தொகைக்கு ஏலம் போனது! வாங்குனது யாரு தெரியுமா?
டெல்லி போக்குவரத்து துறையில் வாகன பதிவிற்காக நடத்தப்படும் ஆன்லைன் வழி ஏலத்தில் 0001 என்ற நம்பர் ரூபாய் 23.4 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. இருப்பதிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன நம்பர் இது தான். இது போன்ற ஏலத்தில் ஒவ்வொரு மாதமும் ஏராளமான ஃபேன்ஸி நம்பர்கள் ஏலம் போகும். இதில் அதிக தொகைக்கு தற்போது ஏலம் போய் உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வாகனத்தின் பதிவு எண் ஃபேன்ஸியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக குறிப்பிட்ட பதிவு தங்கள் வாகனத்திற்கு வேண்டுமென்ற கோரிக்கை மக்கள் மத்தியில் இருக்கும். இதனால் அரசு தரப்பில் இருந்து ஃபேன்ஸியாக கருதப்படும் நபர்கள் எல்லாம் ஏலத்தில் விடப்படும். டில்லியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் இப்படியான விஐபி நம்பர் எல்லாம் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இந்த ஏலத்திற்கான பதிவுகள் துவங்கும். இதில் குறிப்பிட்ட நம்பரை எந்த நபர் அதிக தொகைக்கு இடம் கேட்கிறார்? அவர் அந்த தொகையை செலுத்தி அந்த நம்பர் தனது வாகனத்திற்கு வேண்டுமென பதிவு செய்து கொள்ள முடியும். இப்படியாக கடந்த மார்ச் மாதம் 0001 என்ற நம்பர் அதிகமான தொகைக்கு ஏலம் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த நம்பரை ரூ23.4 லட்சம் கொடுத்து ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த ஏல தொகை ரூபாய் ஒரு லட்சம் என்ற அடிப்படை விலையில் இருந்து துவங்கும். இதற்கு மேல் அதிக தொகை கொடுத்து ஏலம் கேட்பவர்களுக்கு இந்த பதிவெண் வழங்கப்படும். இரண்டாவது அதிக தொகைக்கு ஏலம் போன நபராக 0001 என்ற நம்பர் இருக்கிறது. இந்த நம்பர் கடந்த ஜூன் மாதம் ரூ11 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது.
அடுத்ததாக பிரபல நபரான 0007 என்ற நம்பர் ஏலம் போய் உள்ளது. இந்த நம்பர் பாலிவுட் பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் நம்பர் என்ற பெயரில் உலகம் முழுவதும் பெயர் பெற்ற நம்பராக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பிரபல கிரிக்கெட் தோனியின் நம்பர் என்பதால் இந்த நம்பருக்கு அதிக கெடுபிடி இருக்கும். கடந்த ஜனவரி மாதம் 10.8 லட்சம் என்ற தொகைக்கு இந்த நம்பர் ஏலம் போய் உள்ளது.
கடந்த ஜனவரி மாதமே 0002 என்ற நம்பர் ரூபாய் 5.1 லட்சம் என்ற விலையில் ஏலம் போனது. இப்படியான விஐபி நம்பர்கள் எல்லாம் குறைந்தபட்சம் 5 லட்சத்திற்காவது ஏலம் போகும். அப்படியாக தான் இந்த நம்பரும் ஏலம் போய் உள்ளது. ஏலம் இல்லாமல் தனியாகவும் நம்பரை பணம் கொடுத்து பெற முடியும்.
இப்படியாக உங்களுக்கு விருப்பப்பட்ட நம்பர் ஏலத்தில் இல்லாத நம்பராக இருந்தால் ரூபாய் 25,000 என்ற அடிப்படை விலையில் அந்த நம்பரை பெற்றுக் கொள்ள முடியும். இப்படியாக ஏலம் எடுத்து நபர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் தங்கள் வாகனங்களில் பொருத்தி கொள்ள வேண்டும். புதிதாக வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருக்கும் நபர்கள் அதிக தொகை கொடுத்து தங்களுக்கு விருப்பமான நம்பரை ஏலத்தில் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் இப்படியாக நம்பர் தேர்வு என்பது பல்வேறு காரணங்களுக்காக வாங்கப்படுகிறது. எண் ராசி, லக்கி நம்பர், பிறந்த தேதி உள்ளிட்ட காரணங்களை வைத்து ஃபேன்ஸியான நம்பரை பதிவு செய்யும் பழக்கம் இந்தியாவில் இருக்கிறது. குறிப்பாக 0001 என்ற நபர்தான் பொதுவாக அதிக தொகைக்கு ஏலம் போகும்.
இந்தியாவிலேயே மிக அதிக தொகையாக கேரள மாநிலத்தில் பாலகோபால் என்ற தொழிலதிபர் ஒருவர் தனது போர்ஷே 718 பாக்ஸ்டர் காருக்கு 0001 என்ற நம்பரை ரூபாய் 31 லட்சத்தில் ஏலம் எடுத்து பொருத்தியுள்ளார். அடுத்ததாக இவர் தனது மற்றொரு காரான டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருக்கும் இதே போன்ற நம்பரை வெறும் ரூ18 லட்சம் கொடுத்து எலத்தில் எடுத்ததார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்படியாக சில மாநிலங்கள் ஆன்லைன் மூலம் இந்த வாகன பதிவு எண் ஏலத்தை நடத்தி வருகிறது. இதில் அதிக தொகை கொடுத்து பலர் தங்களுக்கு விருப்பமான நபர்களை வாங்கி வருகிறார்கள். இதன் மூலம் அரசுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. தமிழகத்தில் இப்படியான ஆன்லைன் ஏலம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








