யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் ஆகும்.. இந்த சட்டத்தால் போலீசுக்குதான் ஜாலி

இந்திய சட்ட திட்டங்களின்படி, சாலையில் அவசரமாக உதவி தேவைப்படுபவர்களுக்கும் கூட 'லிப்ட்' கொடுப்பது என்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. இந்த சட்டம் குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

By Arun

இந்திய சட்ட திட்டங்களின்படி, சாலையில் அவசரமாக உதவி தேவைப்படுபவர்களுக்கும் கூட 'லிப்ட்' கொடுப்பது என்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. இந்த சட்டம் குறித்து பலருக்கும் தெரியாத சூழலில், 'லிப்ட்' கொடுத்த ''குற்றத்திற்காக'' கார் உரிமையாளர் ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த சட்டம் குறித்தும், கார் உரிமையாளர் தண்டிக்கப்பட்டது குறித்தும் பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக உள்ளன. சில விதிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை. இந்த வகையில் கார் உரிமையாளர் ஒருவர், சட்ட விரோதம் என தெரியாமல் செய்த ''சிறு உதவியால்'', இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

அவர் பெரிய தவறு ஒன்றும் செய்துவிடவில்லை. அவசரமாக அலுவலகம் சென்று கொண்டிருந்தவர்களுக்கு பெருந்தன்மையாக 'லிப்ட்' கொடுத்தார். அவ்வளவுதான். இதற்காக அவரது லைசென்ஸை பறிமுதல் செய்து, கோர்ட்டிற்கு இழுத்து, அபராதம் விதித்திருக்கிறது இந்திய மோட்டார் வாகன சட்டம்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் உண்மைதான். மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 66, 192ன் படி, 'லிப்ட்' கொடுப்பது சட்ட விரோதமானது. அவசரமாக உதவி தேவைப்பட்ட சிலருக்கு, 'லிப்ட்' கொடுத்து உதவி செய்த 'குற்றத்திற்காக', இந்த செக்ஸனின்படிதான் தண்டிக்கப்பட்டிருக்கிறார் நிதின் நாயர்!!

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

நிதின் நாயர் மும்பையை சேர்ந்தவர். கடந்த 18ம் தேதி காலை நிதின் நாயர் தனது காரில், அலுவலகம் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. சில பஸ்கள் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. சில பஸ்கள் மிகவும் தாமதமாக வந்தன.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

இதனால் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் 'லிப்ட்' கேட்டு கொண்டிருந்தனர். சில பஸ்கள் நிரம்பி வழிந்த நிலையில், சில பஸ்கள் தாமதமாக வந்த நிலையில், அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அப்படி ஏர்ரோலி சர்க்கிள் என்ற பகுதியில், நிதின் நாயரிடமும் 3 பேர் 'லிப்ட்' கேட்டனர்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

அவர்களில் ஒருவர் 60 வயதை கடந்த முதியவர். 2 பேர் புகழ்பெற்ற ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். அவர்கள் காந்தி நகர் என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். உதவி செய்ய முடியுமா? என்று, நிதின் நாயரிடம் கேட்டனர். காந்தி நகரை கடந்துதான் நிதின் நாயர் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

இதனால் அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்ட நிதின் நாயர், பெருந்தன்மையுடன் மூவரையும் தனது காரில் ஏற்றி கொண்டார். சிறிது நேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் காரை நிறுத்தியுள்ளார். உடன் பயணிப்பவர்கள் யார்? என்ற கேள்வியை போலீஸ் அதிகாரி கேட்க, நடந்தவற்றை நிதின் நாயர் கூறினார்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

உடனடியாக நிதின் நாயரின் லைசென்ஸை அந்த போலீஸ் அதிகாரி பறிமுதல் செய்து விட்டார். பின்னர் அபராதம் விதிப்பதற்கான ரசீது ஒன்றை மளமளவென எழுதி, நிதின் நாயரிடம் ஒப்படைத்து விட்டார். எதற்காக இந்த தண்டனை? என்பதே நிதின் நாயருக்கு புரியவில்லை.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

எனவே அதற்கான விளக்கத்தை போலீஸ் அதிகாரியிடமே கேட்டார். ''தெரியாத நபர்களுக்கு 'லிப்ட்' கொடுப்பது சட்ட விரோதம்'' என்ற அதிர்ச்சிகரமான பதிலை, போலீஸ் அதிகாரி வழங்கியுள்ளார். நிதின் நாயர் இதனை நம்பவில்லை. லஞ்சம் பெறுவதற்காக போலீஸ் அதிகாரி சுற்றி வளைப்பதாகவே நினைத்தார்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

ஆனால் போலீஸ் அதிகாரி மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷன் வந்து, அபராதத்தை கட்டி விட்டு, லைசென்ஸை வாங்கி கொள்ளும்படி கூறிவிட்டு அவர் சென்று விட்டார். அபராதத்திற்கான ரசீதை மட்டும் நிதின் நாயரிடம் அவர் வழங்கிவிட்டார்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

நிதின் நாயருக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த குழப்பத்துடனே மறுநாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். இந்திய மோட்டார் வாகன சட்டம் 66/192ன் கீழ் தண்டிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் கோர்ட்டிற்கு சென்று அபராதம் கட்டிதான் லைசென்ஸை திரும்ப பெற வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

இதனை நிதின் நாயர் நம்பவில்லை. உடனடியாக தனக்கு தெரிந்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போதுதான் தனியார் வாகனத்தில் தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுப்பது தவறு என்ற சட்டம் உண்மையிலேயே இருப்பது அவருக்கு தெரியவந்தது.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

இதன்பின் கடந்த 22ம் தேதி, காலை 10 மணிக்கு நிதின் நாயர் கோர்ட்டிற்கு அழைக்கப்பட்டார். ஆனால் அவர் 9.30 மணிக்கே சென்று விட்டார். ஆனால் 1 மணி வரை அவர் விசாரணைக்கு அழைக்கப்படவே இல்லை. ஒரு வழியாக மதியம் 1 மணிக்கு பின்பு கோர்ட் ரூமிற்குள் நிதின் நாயரை அழைத்தனர்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

நீதிபதி முன்பு ஒரு குற்றவாளி போல மிகவும் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார் நிதின் நாயர். உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தெரியாத நபர்களுக்கு 'லிப்ட்' கொடுத்து தனது தனிப்பட்ட காரை, பயணிகள் காராக மாற்றிய 'குற்றத்தை' அவர் ஒப்புக்கொண்டார்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் பல முறை கேட்டு கொண்டதன் காரணமாக, அபராத தொகை 1,500 ரூபாயாக குறைக்கப்பட்டது (500 ரூபாய் தள்ளுபடி எப்படி? அதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா?). கோர்ட் நடைமுறைகளை முடித்து கொண்டு, மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர் சென்றார்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

ஏனெனில் போலீஸ் ஸ்டேஷனில்தான் நிதின் நாயர், லைசென்ஸை திரும்பி வாங்கி கொள்ள வேண்டும். சுமார் 2 மணிக்கே அவர் போலீஸ் ஸ்டேஷன் சென்று விட்டாலும், 5 மணிக்குதான் லைசென்ஸ் கைக்கு கிடைத்திருக்கிறது.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

எந்த ஒரு நபரும் தனது தனியார் வாகனத்தை, பயணிகள் வாகனமாகவோ அல்லது சரக்கு வாகனமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் விதிகள் இருப்பது உண்மைதான். இந்த சட்டத்திற்கு 2 காரணங்கள் உள்ளன.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

முதல் காரணம், வரி கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் T-பெர்மிட் அல்லாத தங்கள் சொந்த வாகனங்களை, டாக்ஸியாக பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் சட்ட விரோதமாக அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர். இரண்டாவது காரணம், வாகன உரிமையாளரின் பாதுகாப்பு.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுக்கும்பட்சத்தில், ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வரும்போது, முன்பின் தெரியாத அந்த நபரால், வாகனத்தின் உரிமையாளருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால்தான் இந்த சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

அப்படியானால், T-பெர்மிட் அல்லாத தனது காரில் சிலருக்கு லிப்ட் கொடுத்து நிதின் நாயர் பணம் சம்பாதித்தாரா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இல்லை என்பதுதான் இதற்கு பதில். லிப்ட் கேட்டவர்களிடம் நிதின் நாயர் பணம் வாங்கவில்லை.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

ஒரு உதவியாகதான் இதனை செய்தார். இப்படிப்பட்ட சட்டம் இருக்கிறது என்பது அவருக்கு தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட சட்டங்கள் இருந்தால், சாலையில் யாரேனும் இறந்து கிடந்தால் கூட, யாரும் உதவி செய்ய முன் வரமட்டார்கள் என பேஸ்புக்கில் தனது குமுறலை அவர் கொட்டியுள்ளார்.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

ஆம், நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் அவர் எழுதியுள்ளார். நமது சட்டம், நீதித்துறை ஆகியவற்றை அவமானப்படுத்துவது தனது நோக்கம் அல்ல என அவர் கூறியுள்ளார். வாகன உரிமையாளர்களின் விழிப்புணர்வுக்காகவே இந்த போஸ்ட்டை பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும் போஸ்ட்டின் இறுதியில், ''நமது சக மக்களுக்கு நாம் உதவி செய்வதை, நம் நாடு விரும்புவது இல்லை'' என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். உதவி என்றாலும், சட்டத்தின்படி அது தவறான விஷயமாகவே கருதப்படுகிறது.

இனி யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும்.. இப்படி ஒரு சட்டமா?

எனவே ஒருவருக்கு லிப்ட் கொடுக்கும் முன்பாக ஒரு முறைக்கு இரு முறை நீங்களும் நன்றாக யோசித்து கொள்ளுங்கள். இப்படி ஒரு சட்டம் இருப்பதை, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Source: Nitin Nair

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Article Published On: Monday, June 25, 2018, 11:45 [IST]
English summary
Car Owner Fined Rs 1500 For Giving Lift To Stranger. Know The Real Law. Read in tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+