வீட்டு வாசலில் காரை பார்க் செய்தால் அபராதம்! கோர்ட் வழக்கில் போலீசாருக்கு செம "டோஸ்"
சென்னையில் வீட்டு வாசலில் வாகனங்களை பார்க்கிங் செய்யும் நபரா நீங்கள்? இப்பொழுது உங்களுக்கு மிகப்பெரிய தலைவலி ஒன்று வரப்போகிறது. சென்னையில் வீட்டு வாசலில் வாகனங்களை பார்க்கிங் செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசிடம் நீதிமன்றம் தற்போது இப்படியான தவறுகள் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த கிஷோர் என்பவர் சமீபத்தில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தால், அதன்படி அவர் சென்னை அண்ணாநகர் என் பிளாக் 2 ஐந்தாவது தெருவில் வசித்து வருவதாகவும் அவர் வசித்து வரும் பகுதியில் அனுமதி இன்றி சிலர் தெருவோரக்கடைகளை நடத்தி வருவதாகவும் தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரங்களில் பார்க் செய்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அவர் இவ்வாறான தெருவோரக்கடைகள் மற்றும் சாலையில் வாகனங்கள் பார்க்கும் செய்யப்படுவதால் அப்பகுதியில் அதிகமான போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் இது சட்ட விதிமுறைகளை மீறி நடக்கும் செயலாகவும் அதனால் உரிய உரிமம் இல்லாமல் இயங்கும் கடைகளையும் அனுமதியின்றி நிறுத்தப்பட்ட வாகனங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரரின் புகாரை விசாரித்து வாகனங்கள் அகற்றப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் நோ பார்க்கிங் போர்டு அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் இருந்து விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கோர்ட் அரசிடம் குடியிருப்பு பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாசலில் அனுமதி இன்றி வாகனங்களை பார்க்கிங் செய்து வருகிறார்கள். இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக போக்குவரத்து போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கை தள்ளி வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் அரசு தரப்பில் இருந்து தற்போது தமிழக முழுவதும் இயங்கி வரும் தெருவோர கடைகளில் அனுமதியின்றி இயங்கும் தெருவோரக்கடைகளை அகற்றவும் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் பார்க்கிங் செய்வதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முழுவதும் இது பெரிய பெரும் பிரச்சனையாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக சென்னையில் இது கடுமையாக பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் வீட்டில் வாசல் பகுதியில் வாகனத்தை நிறுத்துவது சட்ட விதிமுறைக்கு மீறிய செயலாக பார்க்கப்படுகிறது. வாகனத்தை எப்பொழுதும் பார்க்கிங் பகுதியில் தான் நிறுத்த வேண்டும் சாலையில் வாகனத்தை நிறுத்தினால் சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகளுக்கு அதை இடையூறாக இருக்கும். இதனால் இந்த சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.
ஆனால் பலருக்கும் இப்படியான சட்டம் இருப்பதே தெரியாமல் சாலையில் வாகனங்களை நிறுத்தி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது பல்வேறு மாநில தலைநகரங்களில் இது மிகப்பெரிய தலைவலி பிரச்சினையாக இருப்பதால் இப்படியாக சாலை பகுதியில் வாகனங்களை பார்க்கிங் செய்யும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது சென்னைக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதனால் நீங்கள் சாலையில் வாகனங்களை பார்க்கிங் செய்து வந்தால் உடனடியாக அதை தனியார் பார்க்கிங் பகுதிக்கு எடுத்து சென்று விடுங்கள். மாத வாடகைக்காக தனியார் பார்க்கிங் பகுதிகள் பல செயல்பட்டு வருகின்றன. அங்கு நீங்கள் உங்கள் வாகனங்களை பாத்திங் செய்யலாம் அதில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிதாக வாகனம் வாங்கும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் இருக்கிறதா? இல்லையா என்பது கூட செக் செய்யாமல் வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் புதிய வாகனங்களை வாங்கி விடுகிறார்கள். முதலில் உங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கான போதிய இடம் உங்களிடம் இருந்தால் மட்டுமே புதிய வாகனம் வாங்குவது பற்றி யோசனை செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications









