பழைய கார் உதிரிபாகங்களை வைத்து மயங்க வைக்கும் வீட்டு அலங்காரம்!

Written By:

வீட்டை அழகாக பராமரிப்பதோடு, சிலருக்கு கூடுதலாக அலங்கரிப்பதும் கை வந்த கலையாக இருக்கும். தனது துறை சார்ந்த சிறப்பம்சங்களுடன், சிலர் வீட்டை அலங்கரிக்கின்றனர். புகைப்பட விரும்பிகள், வீட்டில் வித விதமான, அரிதான புகைப்படங்களை மாட்டி அழகு சேர்ப்பர். சிலருக்கு பழமையான பொருட்களை போன்ற தோற்றத்தில் பொருட்கள் அல்லது விலங்கு பொம்மைகளை வாங்கி அலங்கரிப்பது என ரசனையை சார்ந்த விஷயமாக இருக்கிறது.

இதேபோன்று, கார் பிரியர்கள் தங்களது பிடித்த கார் பிராண்டின் ஸ்கேல் மாடல் கார்கள், ஆக்சஸெரீகளை வாங்கியும், விதவிதமான கார் போஸ்டர்களை வீட்டில் ஒட்டியும் அலங்கரிக்கின்றனர்.

இந்த நிலையில், பழைய கார் மூலமாக கிடைத்த பொருட்களை மிக சிறப்பான முறையில் மாற்றம் செய்து இங்கே அலங்காரம் மற்றும் பயனுள்ளதாக பொருட்களாக மாற்றியிருக்கின்றனர். இதனை வாங்குவதற்கு பட்ஜெட் அல்லது அலங்கரிக்க இயலாதவர்கள், ஸ்லைடரில் இருக்கும் விதவிதமான பழைய கார் உதிரிபாகங்களில் செய்யப்பட்டிருக்கும் பொருட்களை ரசிக்கலாம் அல்லவா? வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

பூங்கா பெஞ்ச்

பூங்கா பெஞ்ச்

பொழுதுபோக்கு பூங்காக்களில் இருக்கும் பென்ச் போன்று மாற்றப்பட்டிருக்கும் காரின் முன்பக்க பகுதி. பார்ப்பதற்கும், அமர்வதற்கும் வித்தியாசமான உணர்வை தரும்.

வீல் ஹப் பெஞ்ச்

வீல் ஹப் பெஞ்ச்

வீல் ஹப்புகளை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் சோபா மற்றும் டீ-பாயை படத்தில் காணலாம்.

டிவி.,க்கான அலங்கார செட்

டிவி.,க்கான அலங்கார செட்

சுவரில் மாட்டக்கூடிய டிவி திரைக்கு கீழே பழைய காரின் முன்புற பகுதியை இணைத்து அழகுபடுத்தியுள்ளனர்.

அலுவலக மேஜை

அலுவலக மேஜை

காரின் முன்புற பானட் பகுதியை டிராயர்களுடன் கூடிய மேஜையாக மாற்றியுள்ளனர்.

டயர் டேபிள்

டயர் டேபிள்

டயரை மிக அழகாக பதித்து செய்யப்பட்ட டீ டேபிளாக மாற்றியிருக்கின்றனர்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

மினி கார் போன்ற வடிவத்திலான மேடை கோற்பந்தாட்ட களம்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

மெர்சிடிஸ் பென்ஸ் காரின் கேபினை மிக அழகான முறையில் படுக்கையாக மாற்றப்பட்டிருப்பதை காணலாம்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

பழைய ரோவர் வி8 எஞ்சினை டீ டேபிளாக மாற்றியுள்ளனர். 30 மணி நேரத்தில் இந்த டீ டேபிள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எஞ்சினின் போர் துளைகளில் 8 ஒயின் பாட்டில்களை அடக்க முடியும்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

பழைய கார் உடல்கூடு ஒன்றை மிக அழகான ஊஞ்சல் படுக்கையாக மாற்றியிருப்பதை காணலாம்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

ஃபோக்ஸ்வேகன் வேன் முகப்பை அழகாக சுத்தப்படுத்தி, பெயிண்ட் செய்து அலங்கார பொருளாக மாற்றியிருக்கின்றனர்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

மாஸே ஃபர்குஷன் டிராக்டரின் முகப்பை எடுத்து, டேபிளாக மாற்றியிருக்கின்றனர்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

டூ வீலர் ஸ்பார்க் பிளக்கில் உருவான சாவி கொத்துக்கான ஹேங்கர்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

படுக்கையாக மாற்றப்பட்ட கார்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

கம்ப்யூட்டர் டேபிள்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

சுழலும் சக்கர டேபிள்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

பிஸ்டன் ஹெட்டில் உருவான அலங்கார செடிக்கான தொட்டி.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

கியர் நாப் டிசைனில் ஓர் அசத்தல் கடிகாரம்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

டூ வீலர் எஞ்சின் ஹெட்டில் உருவான ரீடிங் லேம்ப்.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

காரின் பானட் டேபிளாகவும், பூட் ரூம் பகுதி சோபாவாகவும் மாறியிருக்கிறது.

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

முன்பக்க கதவுகளை இணைத்து எம்டி மேஜை...!!

வீட்டு உபயோக பொருட்களில் வீட்டு அலங்கார பொருட்கள்!

ஸ்பார்க் பிளக்குகளில் உருவான அழகிய நடன சிற்பம்

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Do you ever think to use your old car part for decoration. Here we are showing through pictures, how to you can use old car parts for home decoration.
Story first published: Monday, September 7, 2015, 17:21 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark