கடவுள் நேர்ல எல்லாம் வரமாட்டார், இப்படி சில நேரம் கார்ல கூட வந்து குழந்தையை காப்பாத்தலாம்! வைரலாகும் வீடியோ

கேரள மாநிலத்தில் ஒரு வயது குழந்தை ஒன்று வாகனங்கள் வேகமாக செல்லும் சாலைக்கு நடந்து வந்ததை கவனித்த வாகன ஓட்டி ஒருவர் தனது காரை நிறுத்தி அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில வைரலாக பரவி வருகிறது இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

குழந்தைகள் பெற்றோரை விட்டு விட்டு தனியாக ரோட்டுக்கு வருவதை நாம் அவ்வப்போது பார்த்திருப்போம். இது இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நடக்கும் ஒரு விஷயம் தான். பெற்றோர்கள் வேறு சில விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது இப்படியாக குழந்தைகள் அவர்களுக்கு தெரியாமல் ரோட்டுக்கு வருகின்றன. அங்கு விபத்து ஏற்படும் அபாயம் இருக்கும் என்பது குழந்தைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.

palakkad child saved viral video

இப்படியாக ரோட்டுக்கு வரும் குழந்தைகள் பல நேரங்களில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்திலிருந்து தப்பிப்பது கூட நான் சில சிசிடிவி வீடியோ காட்சிகள் மூலமாக காத்திருப்போம். இப்படியாக கேரள மாநிலத்தில் ஒரு குழந்தை தற்போது பெற்றோர்கள் கவனிக்காத போது ரோட்டிற்கு வந்து சாலை விபத்தில் சிக்கவிருந்ததை வாகன ஓட்டி ஒருவர் சாததூரியமாக தடுத்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி என்ற பகுதியில் பிஸியான சாலை ஒன்று இருக்கிறது. அந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் உள்ளிட்ட அதிகமான வாகனங்கள் அதிக வேகத்தில் கடந்து செல்லும் சாலையாக இருக்கிறது. அந்த சாலையை ஒட்டியே ஒரு வீடும் இருக்கிறது.

palakkad child saved viral video

அந்த வீட்டுக்குள்ளே இருந்து குழந்தை ஒன்று பெற்றோர்கள் கவனிக்காத நேரத்தில் தனியாக ஆபத்தை உணராமல் வெளியே வந்துள்ளது. இந்த காட்சிகள் முழுவதும் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி கொண்டு இருந்தது. அப்பொழுது சாலையில் வாகனங்கள் அதிவேகமாக கடந்து கொண்டிருந்தன குழந்தை ஆபத்தில் உணராமல் சாலை அருகே சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது ட்ட்சன் ரெடி-கோ என்ற வாகனத்தில் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் கார் இவர்கள் வீட்டை கடந்து சென்றது. அப்பொழுது காருக்குள் இருந்த பயணி குழந்தை பெற்றோர்கள் யாரும் இன்றி நடுரோட்டிற்கு வந்து கொண்டிருப்பதை கவனித்துள்ளார். உடனடியாக அவர் காரை நிறுத்தி ரிவர்ஸ் எடுத்து அந்த குழந்தையின் அருகே வந்து நிறுத்தியுள்ளார்.

palakkad child saved viral video

மேலும் பின்பக்கம் கதவு வழியாக அந்த பயணி வெளியே வந்து அந்த குழந்தை சாலைக்கு வருவதை தடுத்துக் காப்பாற்றி அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் கூட்டி சென்று உள்ளார். அங்கு சென்று பெற்றோர்களை பார்த்து குழந்தை சாலைக்கு வருவதை கூறியதும் அவர்கள் ஒரு நிமிடம் பதறி துடித்தனர். நல்லவேளையாக இந்த கார் ஓட்டி முன்னரே சுதாரித்து காரை நிறுத்தி இந்த குழந்தையை காப்பாற்றியதால் குழந்தைக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படவில்லை.

இந்த காட்சிகள் முழுவதும் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் காரை நிறுத்திவிட்டு குழந்தையை காப்பாற்றிய இளைஞரை பாராட்டி வருகின்றனர். சாலை ஓரங்களில் வீடு வைத்திருக்கும் பலர் குழந்தைகளை சிறிது நேரம் கவனிக்க தவறிவிட்டாலும் ரோட்டுக்கு குழந்தைகள் சென்று விடுகின்றனர்.

palakkad child saved viral video

இதனால் வீட்டில் குழந்தை வைத்திருப்பவர்கள் எப்பொழுதும் குழந்தைகளுக்கு உடன் கவனமாக இருக்க வேண்டும் அவர்கள் வேறு வேலையில் இருந்தால் குழந்தைகள் வெளியே செல்லாதவாறு தடுப்புகளை வைத்து வீட்டை பூட்டி இருக்க வேண்டும். இதனால் தேவையில்லாமல் குழந்தைகள் ரோட்டிற்கு வந்து விபத்தில் சிக்குவதை தவிர்க்க முடியும்.

நீங்கள் இனி சாலையில் பயணிக்கும் போது இப்படியாக ரோட்டோரமாக குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தால் கவனமாக ஓட்டுங்கள். அருகில் பெற்றோர் இல்லை என்றால் உங்கள் வாகனத்தை நிறுத்தி அந்த குழந்தைகளை பெற்றோருடன் ஒப்படைத்து விடுங்கள். இல்லை என்றால் நீங்கள் கடந்து சென்ற பின்பு வேறு வாகனத்தில் கூட அந்த குழந்தைகள் விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பிரச்சினை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. குழந்தைகளுக்கு வாகனம் வருவதால் விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை புரிய வைப்பது கஷ்டம். அதனால் சாலையோரம் இருக்கும் வீடுகளில் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மிக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராதபடி தடுப்புகளை வைக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2023, 16:07 [IST]
English summary
Car passenger saved child life in kerala palakkad watch viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X