இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் காரை ரிவர்ஸில் எடுத்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்! பெண் பரிதாப பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கார் ஓட்ட தெரியாத பெண் ஒருவர் மலைப்பகுதியில் காரை ரிவர்ஸ் எடுக்க முயற்சி செய்து மழையில் இருந்து சுமார் 300அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. காரை ரிவேர்ஸில் எடுக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்ன? முதன் முறையாக கார் ஓட்ட பயிற்சி செய்யும் போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விவரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்ராஜ்நகர் பகுதி மலைப்பகுதியாக இருக்கிறது. அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் மலை உச்சியில் நின்று இயற்கை ரசிக்க ஏற்ற பகுதியாக இருப்பதால் அங்கு பலர் தங்கள் வாகனங்களில் வந்து இயற்கையை பார்த்து ரசிப்பார்கள். இப்படியாக தான் 23 வயதான ஸ்வேதா என்பவர் தனது நண்பருடன் வெள்ளை நிற கார் ஒன்றில் அந்த பகுதிக்கு பயணம் செய்துள்ளார்.

car reverse accident

அப்பொழுது அவரது நண்பர் தான் காரை ஓட்டிச் சென்றுள்ளார் சுவேதாவிற்கு கார் ஓட்டி பழக்கமில்லை. இந்நிலையில் மழை உச்சியில் காரில் நின்று கொண்டிருந்த அவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஸ்வேதா கார் ஓட்டுவது போல வீடியோ எடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்பொழுது ஸ்வேதாவின் நண்பர் காரை ஸ்டார்ட் செய்து ரிவர்ஸ் கியரில் போட்டு ஸ்வேதாவிடம் வழங்கியுள்ளார்.

முன்பின் கார் ஓட்டி பழக்கம் இல்லாத சுவேதா காரில் ஏறி அமர்ந்ததும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதற்காக காரில் அமர்ந்திருப்பது போல் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் காரின் ஆக்ஸிலரேட்டரை அழுத்தி விட்டார். இதனால் கார் வேகமாக ரிவர்ஸில் சென்றது. அந்த இடத்தில் சுமார் 300 அடி ஆழத்தில் பெரும் பள்ளம் இருந்துள்ளது.

car reverse accident

இந்நிலையில் சுவேதாவால் காரை கட்டுப்படுத்த முடியவில்லை. கார் துரதிஷ்டவசமாக அந்த 300 அடி பள்ளத்தில் கவர்ந்தது. இந்த சம்பவம் முழுவதும் அவரது நண்பர் எடுத்துக் கொண்டிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கார் வேகமாக ரிவர்ஸில் சென்றதில் சுமார் 300 அடி பள்ளத்தில் கவர்ந்த நிலையில் உடனடியாக அவரது நண்பர் அருகில் உள்ள போலீசார் மற்றும் பொதுமக்களின் உதவியை நாடினார்.

காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த இளம் பெண்ணை மீட்க போராடினார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவர் கார் கவிழ்ந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தது. அங்கு சென்று சுவேதாவை மீட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அங்கு இருந்த டாக்டர்கள் ஸ்வேதா ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் முதன்முறையாக கார் ஓட்டும்போது பாதுகாப்பான இடத்தில் தான் கார் ஓட்ட பயிற்சி செய்ய வேண்டும். கார் குறித்த அனைத்து தகவல்களையும் நாம் தெரிந்த பிறகு தான் காரில் ஏறி அமர வேண்டும். ஆக்சிலரேட்டர் என்றால் என்ன? பிரேக் கிளட்ச் போன்ற விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தான் காரில் அமர்ந்து ஓட்ட பழக வேண்டும் மேலும் ரிவர்ஸில் எடுக்கும்போது கட்டாயம் காருக்குள்ளே கார் ஓட்ட தெரிந்த ஒருவர் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கார் விபத்தில் சிக்காமல் ஓட்டுவதற்காக அவர் அறிவுரை வழங்குவார். அதன்படி கார் ஓட்டினால் கார் விபத்தில் சிக்கும் வாய்ப்பு வெகுவாக குறையும். குறிப்பிட்ட சம்பவத்தில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் ஆபத்தை உணராமல் ஸ்வேதா கார் ஓட்ட அமர்ந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

நீங்கள் வாகனம் ஓட்ட பழகும் போது நிச்சயம் நன்கு வாகனம் ஓட்ட தெரிந்த நபரை உடன் வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பான இடத்தில் தான் வாகனம் ஓட்ட வேண்டும். பொது சாலைகளில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். முதலில் ஒரு கிரவுண்ட் அல்லது வெற்றிடத்தில் நீங்கள் வாகனம் ஓட்ட பழகினால் அதன் பிறகு உங்கள் டிரைவிங் திறன் மேம்பட்ட பிறகு பொதுசாலைக்கு வரலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் முதன்முறையாக வாகனம் ஓட்ட படிக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அனுபவம் இல்லாத வாகன ஓட்டிகளை உடன் வைத்துக்கொண்டு வாகனம் ஓட்ட படிக்க கூடாது. அதேபோல பாதுகாப்பான இடத்தில் தான் வாகனம் ஓட்டி படிக்க வேண்டும். இது போன்ற சுற்றுலா சென்ற இடங்களில் வாகனம் ஓட்ட முயற்சிப்பது விபத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் முக்கியமாக மலைப்பகுதிகளில் இதை முயற்சி செய்யவே கூடாது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 19, 2024, 18:19 [IST]
English summary
Car reverse accident woman stunt death in valley
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+