பழைய வண்டிய ஸ்கிராப் பண்ணி புது கார் வாங்குனா சுமார் ரூ1 லட்சம் மிச்சம் பண்ணலாமா? இது பாதி பேருக்கு தெரியாது!

இந்தியாவில் புதிதாக கார் வாங்கும் பலர் பழைய காரை விற்பனை செய்துவிட்டு புதிய காரை வாங்குகிறார்கள். ஆனால் பழைய காரை விற்பனை செய்வது மூலம் கிடைக்கும் பணத்தை விட வாகனத்தை ஸ்கிராப் செய்வதால் பல்வேறு விதமான பலன்களை பெற முடியும். இந்தியாவில் ஸ்கிராப் பாலி மூலம் எப்படி பலன்களை பெறுவது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் காற்று மாசு மிக பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் அதிக மாசுவை வெளியேற்றும் வாகனங்களுக்கு பதிலாக புதிய மாசு குறைந்த அல்லது மாசு வெளியேற்றாத வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு முக்கிய படியாக பழைய மாசு அதிகம் உமிழும் வாகனங்களை ஸ்கிராப் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

Car Scrappage Revenue In India

அதன்படி பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்குகிறது. இதன்படி பார்த்தால் பழைய வாகனங்களை விற்பனை செய்வதை விட சில வகையான வாகனங்களில் ஸ்கிராப் செய்வதன் மூலம் நல்ல பலன்களை எடுக்க முடியும். இது குறித்த விபரங்களை தான் காணப்போகிறோம்.

வாகனத்தை ஸ்கிரப் செய்தன் மூலம் நீங்கள் புதிய காரை வாங்க விரும்பினால் பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்ததற்கு நீங்கள் ஸ்கிராப் செய்த வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து 4-6 சதவீதம் வரை உங்களுக்கு கிடைக்கும். வாகனத்தில் உள்ள இரும்பு பாகங்கள் மற்றும் பிற விஷயங்களை வைத்து இந்த சதவீதம் மாறுபடலாம்.

Car Scrappage Revenue In India

உதாரணமாக ரூ10 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலை கொண்ட ஒரு வாகனத்தை ஸ்கிராப் செய்வதன் மூலம் ரூ40,000 முதல் ரூ60,000 வரை உங்களுக்கு ஸ்கிராப்பிங் மூலம் கிடைக்கும். அதே நேரம் வாகனத்தில் சிறப்பாக இருக்கும் பாங்களான இன்ஜின் உள்ளிட்ட சில முக்கிய பாகங்களை எடுத்து விற்பனை செய்ய முடிந்தால் அதற்கான கட்டணம் தனியாக கிடைக்கும். இப்படியாக விற்பனை செய்யும் போது ஸ்கிராப்பிங் மூலம் கிடைக்கும் பணம் குறையலாம். எதில் லாபம் கிடைக்கும் என்பதை பார்த்து நீங்கள் முடிவை எடுக்கலாம். சென்னையில் டாடா பஞ்ச் காரின் கிரியேட்டிவ் பிளஸ் வேரியன்ட் கார் ஸ்கிராப்பேஜ்ஜிற்காக அரசு 25 சதவீத கட்டண சாலை வரி மற்றும் பதிவு கட்டண குறைப்பை கொண்டு வந்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.

New car ownership cost Normal Vs Scrappage scheme
Details Tata Punch Creative Plus (S) Normal
Scrappage Scheme
EX Showroom Price (Chennai) 9,56,990 9,56,990
RTO 1,32,309 99,232 (After 25% Discount)
Insurance 41,750 41,750
Other Charges 2000 2000
Revenue from Scrappage -60,000
OnRoad Price 11,33,049 10,39,972
Car Scrappage Revenue In India

இந்த கணக்குபடி பார்த்தால் சுமார் ரூ93 ஆயிரம் பணத்தை மிச்சம் செய்ய முடியும். இது குறைந்த பட்ச லாபம் தான் இதில் எக்ஸ் ஷோரூம் தள்ளுபடி மற்றும் பிற தள்ளுபடிகள் எதுவும் கணக்கிடப்படவில்லை. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்

வாகனம் ஸ்கிராப்பிங் செய்யப்பட்டவுடன் அந்த வாகனத்தின் பதிவெண் ரத்து செய்யப்படும். அதே நேரம் நீங்கள் உங்கள் வாகனத்தை ஸ்கிராப் செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழை கொண்டு நீங்கள் புதிய கார் வாங்கும் போது உங்களுக்கு மேலும் சில கட்டணங்கள் குறைக்கப்படும். தற்போது ரூ9.56 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகும் காரை நீங்கள் கிட்டத்தட்ட இதே மதிப்பு கொண்ட காரை ஸ்கிராப் செய்வதால் எவ்வளவு பணத்தை மிச்சம் செய்யலாம் என ஒரு உதாரணத்தை கீழே காணலாம்.

உதாரணமாக பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய வாகனத்தை வாங்கும் போது உங்களுக்கு புதிய வாகனத்திற்கான பதிவெண் கட்டணத்தை முழுமையாக சில மாநில அரசுகள் ரத்து செய்கின்றன. இதன் மூலம் புதிய கார் வாங்கும் வாங்கும் ஆகும் செலவுகளை நீங்கள் கணிசமாக குறைக்கலாம்.

இது மட்டுமல்லாமல் புதிய வாகனம் வாங்கும் போது சாலை வரி செலுத்த வேண்டியது இருக்கும். நீங்கள் பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்த சான்றிதழை வழங்கினால் புதிய காருக்கான சாலையில் தனி நபர் போக்குவரத்து வாகனங்களுக்கு 25 சதவீதமும், பொது போக்குவரத்து வாகனங்களுக்கு 15 சதவீதமும் தள்ளுபடியை சில மாநில அரசுகள் வழங்குகின்றன.

இது மட்டுமல்லாமல் வாகனத்தின் விலையிலும் சில டீலர்ஷிப் அல்லது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்த சான்றிதழை வழங்கினால் தள்ளுபடிகளை வழங்குகின்றனர். இது ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் டீலர்ஷிப்பை பொருத்து விலை மாறுபடுகின்றன.

வாகன ஸ்கிராப்பிங் பாலிசி மத்திய அரசால் கொண்டு வரப்படாலும் அதை ஏற்று சில மாநில அரசுகள் மட்டுமே அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன. தமிழக அரசு இது வரை வாகனங்களுக்கான ஸ்கிராப்பேஜ் பாலிசியை உருவாக்கவில்லை. இதனால் தமிழகத்தில் வாகனம் வாங்கும்போது இந்த பலன்கள் கிடைக்க வாய்ப்பில்லை ஸ்கிராப்பிங் பாலிசி உள்ள மாநிலங்களில் இது கிடைக்க வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு விரைவில் இந்த வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை அமல் படுத்தினால் தமிழகத்தில் இயங்கும் ஏராளமான வாகனங்கள் ஸ்கிராப்பிங் செய்யப்படும். மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள் அந்தந்த மாநில விதிமுறைகளை தெரிந்து கொண்டு ஸ்கிராப்பிங் செய்யும் முடிவை எடுத்தால் நல்ல லாபம் பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 18, 2025, 14:00 [IST]
English summary
Car scrappage revenue in india how to earn money from old vehicles
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X