சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

பள்ளம் மேடுகள் மட்டுமில்லைங்க ஒரு சில ஸ்பீடு பிரேக்கர்கள் கூட கார்களின் சஸ்பென்ஷனுக்கு உலை வைக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

நாம் வாங்கும் கார்கள் என்னதான் அதிக விலைக் கொண்ட சொகுசு காராக இருந்தாலும், அந்த காரின் சஸ்பென்ஷனில் பாதிப்பு ஏற்படுமானால், அது நமக்கு மிக மோசமான பயண அனுபவத்தை ஏற்படுத்தும்.

இந்த பாதிப்பினை அவ்வளவு எளிதில் நம்மால் உணர முடியாது. ஆனால், பயண இறுதியின்போது உடல் வலி, அசௌகரியமான உணர்வு போன்ற அனுபவங்கள் மூலம் நம்மால் அதனை அறிந்துக் கொள்ள முடியும்.

சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

பொதுவாக, ஓர் வாகனத்தின் சஸ்பென்ஷன் அவ்வளவு எளிதில் பாதிப்புகளை அடைவதில்லை. ஆனால், அண்மைக் காலங்களாக பல சொகுசு கார்களின் சஸ்பென்ஷன்கள்கூட மிக எளிதில் பாதிப்படைந்துவிடுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஆகையால், அது உண்மைதானா என்பதனை விளக்கும் வகையில் வார்பட் பெர்செப்ஷன் என்ற குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

அந்த குழு வெளியிட்ட வீடியோ தகவலின்படி, அதிகப்படியான கார்களின் சஸ்பென்ஷன் பாதிப்பிற்கு வேகத்தடையும், பள்ளம் மற்றும் மேடுகள் நிறைந்த சாலைகளே முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சில உயர் ரக சஸ்பென்ஷன்கள் இதுபோன்ற பல்வேறு விதமான சாலைகளை மிகவும் அசால்டாக கடந்துவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

பெரும்பாலான வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது தங்கள் வாகனங்களில் ஏற்படும் அதிர்வுகளை உணர்வற்கு மறக்கின்றனர். மாறாக, சாலையில் உள்ள டிராஃபிக்கை கடப்பதிலியே அதிக கவனத்தைச் செலுத்துகின்றனர்.

சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

இதனைத் தவிர்த்து, கால் பாதங்களை காரின் தரை தள பகுதியில் படும்படி வைத்து அதிர்வுகளை உணர்ந்தால் மட்டுமே காரின் சஸ்பென்ஷன் எத்தகைய அதிர்வுகளையும், கடுமையான பாதைகளையும் கடக்கின்றது என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.

சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

இவ்வாறு, உணராத நபர்களுக்காக வார்ப் பெர்செப்ஷன் குழு பிரத்யேக கேமிராக்களைக் கையாண்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில், காரின் சஸ்பென்ஷன் எவ்வாறு கரடு, முரடான பாதை மற்றும் வேகத்தடைகளை சமாளிக்கின்றது என்பதை மிக துள்ளியமாக விளக்கும் வகையிலான காட்சிகள் அமைந்துள்ளது.

MOST READ: எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த

சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

இதற்காக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ கிளாஸ் கார், பேனட், கதவுகள் மற்றும் பக்கவாட்டு ஷீல்டுகள் கழட்டப்பட்ட நிலையில் பயன்படுத்தப்பட்டது.

பார்வையாளர்கள் எளிதில் சஸ்பென்ஷன் பயன்பாட்டை அறிந்துக்கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

MOST READ: க்ராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார்!

சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

தொடர்ந்து, சோதனையின் மறு பகுதியாக கார் மூன்று வகையிலான ஸ்பீடு பிரேக்கர்களில் ஒரு முறை மெதுவாகவும் மறுமுறை வேகமாகவும் இயக்கப்பட்டது. மேலும், மிகவும் மோசமான பள்ளம் மேடுகள் நிறைந்த சாலைகளிலும் இயக்கப்பட்டு கார் அடைந்த தாக்கங்கள் பதிவு செய்யப்பட்டது.

MOST READ: புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை கட்டி இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்!

சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

இதில், கார் மெதுவாக செல்லும்போது எந்த வகையிலான பள்ளம், மேடுகளையும் எளிதில் (எந்தவொரு பாதிப்புமின்றி) கடப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆனால், அதிகவேகமாக செல்லும்போதுதான் நிலைமை அப்படியே தலைகீழாக மாறுகின்றது.

சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

ஆம், கார் அதிகவேகமாக வேகத்தடைகளைக் கடக்கும்போது மிகப்பெரிய பின்விளைவுகளைச் சந்திக்கின்றது. சஸ்பென்ஷன் அதன் இறுதி நிலை அழுத்தத்தைச் சந்திக்கின்றது. மேலும், டயர்கள் முழுவதுமாக மேலெழும்பி அமர்கின்றது. இதனை காருக்குள் அமர்ந்துச் செல்லும்போது நம்மால் உணரவே முடியாது.

சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

இது போன்ற வேகத் தடைகளில் கார்கள் பயணிக்கும் சஸ்பென்ஷன் மட்டுமின்றி காரின் சில பாதுகாப்பு அம்சங்கள் பாதிப்படைகின்றன. மேலும், காரின் உறுதி நிலை சீர் குலைவதற்கும் இத்தகைய வேகத்தடைகள் முக்கிய காரணமாக இருக்கின்றது. அதிலும், குறுகிய சாலைகளில் அமைக்கப்படும் சிறிய ரகத்தில் அமைக்கப்படும் வேகத்தடையால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி, வேகத்தடைகளில் வாகனங்களை அதி வேகமாக இயக்குவது சில நேரங்களில் விபத்துகளை உறுவாக்கிவிடும். எனவே, வேகத்தடைகளை அலட்சியப்படுத்தாமல் பொறுமையாக செல்வது காருக்கு மட்டுமின்றி அதில் பயணிக்கும் நன்மைகளை ஏற்படுத்தும்.

இதனை விளக்கும் வகையிலேயே இந்த வீடியோக் காட்சிகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Car Suspension vs Speed Bumps. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X