5 நிமிஷத்துக்கு ஒரு காரை திருடுறாங்க! திருடுன காரை 8500 கிமீ தூரத்துக்கு கொண்டு போய் விக்கிறாங்க! எங்க?

உலகம் முழுவதும் வாகன திருட்டு என்பது மிக அதிக அளவில் நடந்து வருகிறது. பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை யாரும் பார்க்காத நேரத்தில் திருடர்கள் திருடி கொண்டு சென்று வாகனங்களை பார்ட் பார்ட்டாக பிரித்து ஒவ்வொரு உதிரி பாகமாக விற்பனை செய்து விடுவார்கள். இதன் மூலம் திருடர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். இப்படியாக உலகில் எந்த நாட்டில் அதிகம் கார்கள் திருடப்படுகிறது. இப்படியாக திருடப்படும் கார்கள் என்ன ஆகிறது என்ற ஒரு சுவாரஸிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. இதைப்பற்றி தான் இங்கே நாம் காண போகிறோம்.

கார், பைக் திருட்டு என்பது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் நடக்கும் ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது. இந்தியாவில் கார் பைக் திருட்டு என்பது மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும் கணிசமான அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் திருடப்படும் பல கார் பைக்குகள் பீகார் வழியாக நேபாளத்திற்கு கொண்டு சென்று அங்கு விற்பனை செய்யப்படுவதாக பலர் பேசி வருகிறார்கள்.

car theft

இந்நிலையில் கனடா நாட்டில் உலகிலேயே அதிகமான காப்பீட்டு நடப்பதாக நமக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கனடா நாட்டில் உள்ள மக்களை பொறுத்த வரை பொது போக்குவரத்தை விட சொந்தமாக கார் வைத்து அதில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். அதனால் உலகில் உள்ள மற்ற நாடுகளில் ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கும் கார்களின் எண்ணிக்கையை விட கனடா நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் அதிகமான எண்ணிக்கையில் கார்கள் இருக்கின்றன.

அதே நேரம் அந்த நாட்டில் கார் திருட்டும் அதிக அளவில் நடந்து வருகிறது. பொது இடத்தில் ஒரு காரை பார்க் செய்து விட்டு சென்றால் ஒரு சில நிமிடங்களில் கூட அந்த கார்களை சில திருடி செல்ல வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு மட்டும் மொத்தம் 1,05,000 கார்கள் திருடுபோய் உள்ளதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

car theft

இதனால் நாட்டில் உள்ள வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனங்கள் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்து வருகிறது. இதுவரை சுமார் 9,306 கோடியை காத்திருட்டுக்கான இன்சூரன்ஸ் தொகையாக அந்நாட்டில் உள்ள இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனங்கள் செலுத்தியுள்ளன. இதை குறைப்பதற்காக இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனங்கள் சர்வதேச போலீசாரின் உதவியை நாடியுள்ளார்கள்.

சர்வதேச போலீசார் நடத்திய ஆய்வில் நடன நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு கார் திருடப்படுவதாக தெரியவந்துள்ளது. இப்படியாக காணா நாட்டில் திருடப்படும் கார்கள் எல்லாம். வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்த நாடுகளில் விற்பனை ஆகிறது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் இந்த கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இப்படியாக திருடப்பட்ட கார் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலும் உள்ளது. கனடா நாட்டில் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை சிலர் திருடி சென்றுள்ளார்கள். இது குறித்து அந்த காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். போலீஸாரும் காரை தேடி வந்தார்கள். இந்நிலையில் இவர் தன் காரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

ஆனால் கார் திருடப்பட்டு சில மாதங்கள் கழித்து இவர் காணா நாட்டைச் சேர்ந்த ஒரு செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை செய்யும் வெப்சைட்டில் தனது கார் லிஸ்ட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்துள்ளார். இவர் காரில் செய்த மாடிபிகேஷன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அப்படியே இருந்துள்ளது. காரின் நம்பர் பிளேட்டை மற்றும் எடுத்து மாற்றி விட்டு அந்த காரை காணாவில் விற்பனைக்கு லிஸ்ட் செய்து இருந்தார்கள்.

அதாவது கனடா நாட்டில் இருந்து கானாவிற்கு சுமார் 8,500 கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. இங்கு திருடப்பட்ட காரை சுமார் 8,500 கிலோமீட்டர் எடுத்துச் சென்று அங்கு விற்பனை செய்கிறார்கள். இதையடுத்து கப்பல் மூலம் கார்களை கடத்துவதற்கான முயற்சியை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தற்போது கனடாவில் வாரம் 200 கார்கள் சர்வதேச துறைமுகங்களில் பிடிபடுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கானா போன்ற நாடுகளில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரி மிகவும் குறைவாக இருப்பதால் அங்கு திருடப்படும் கார்களை சட்டபூர்வமாகவே குறைவான இறக்குமதி வரியில் இறக்குமதி செய்து அங்கு அந்த கார்களை விற்பனை செய்து கார் திருட்டு கூட்டம் அதிக அளவில் சம்பாதித்து வருகிறது. இதை தடுப்பதற்கான முயற்சிகளை இரு நாடுகளும் எடுக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 13, 2024, 20:00 [IST]
English summary
Car theft canada more vehicles vanish annually
மேலும்... #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+